Your email updates, powered by FeedBlitz

 
Here is a sample subscription for you. Click here to start your FREE subscription

"மொழியும் நிலமும்" - 5 new articles

  1. பெரிய அக்காக்களும் ‘பிற’-ராக்கப்பட்ட தங்கைகளும் - இஸ்லாமிய பெண்ணியம் குறித்து சில கருத்துக்கள்.
  2. உடல் மீது விளையாடும் கடவுள்களும், சாத்தான்களும் - இலக்கிய இரட்டைகளைப் பேசும் 'வார்சாவில் ஒரு கடவுள்'.
  3. நாகார்ஜீனின் “நளிர்“ – விமர்சனக் கூட்டம்
  4. கொலைகளும் தற்கொலைகளும் நிறைந்த கொடுங்கனவாய் மாற்றப்பட்ட தமிழீழம்
  5. குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – புதிய தொடர்
  6. More Recent Articles
  7. Search மொழியும் நிலமும்

பெரிய அக்காக்களும் ‘பிற’-ராக்கப்பட்ட தங்கைகளும் - இஸ்லாமிய பெண்ணியம் குறித்து சில கருத்துக்கள்.

இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் அல்லது புர்கா எனப்படும் தலைக்கவசம் அணிவது குறித்து உலகளவில் ஒரு விவாதம் நடந்துவரும் இவ்வேளையில், இஸ்லாமிய பெண்ணியம் குறித்து புதியவிசையில் எழுதிய கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்கிறேன். ரசூலின் நூலை முன்வைத்து பேசப்பட்டாலும், பொதுவான பிரச்சனைகள் குறித்த ஒரு உரையாடலைக் கொண்டது இக்கட்டுரை.

Islamic Feminism Symbol பின்நவீனத்துவம் மற்றும் மார்க்சிய பார்வையில் இஸ்லாமை புரிந்துகொள்ள முயலும் ஹெச். ஜி. ரசூலின் ‘இஸ்லாமிய பெண்ணியம்’-என்கிற அறிமுக நூலை வாசித்தபோது இந்நூலைவிடவும் இஸ்லாம் குறித்து இவர் எழுதியுள்ள திண்ணை.காம் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக தோன்றியது. இவரும் எச். பீர்முஹமது என்பவரும் இஸ்லாம் குறித்து தமிழில் எழுதுபவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். காரணம் கடந்த 15-ஆண்டுகளாக இஸ்லாம் குறித்து எனக்குள் ஏற்பட்ட மனப்பதிவுகளை அவை பிரதிபலித்ததுதான். இஸ்லாமியர்கள் ஈமான் (நம்பிக்கை) கொள்ளும் அடிப்படையான 2 விஷயங்கள் எனக்குள், எப்பொழுதும் சந்தேகம் என்கிற பனிமூட்டத்திற்குள் ஆதாரமற்று அலைந்து கொண்டிருந்தபோது அவற்றிற்கு சில ஆதாரங்களை நிலை நாட்டியது அக்கட்டுரைகள்.

இஸ்லாம் எனக்குத் தெரிந்து, இந்த ‘எனக்குத் தெரிந்து’ என்பது முக்கியமானது, எல்லா மதங்களையும்போல பலருக்கும் தெரிந்த இஸ்லாம் பல மாதிரிகளில் உண்டு ஆணால், சமீப காலங்களில் இந்தியாவில் ‘தௌகீது’-என்கிற ஓரிறைக் கொள்கை (ஓரமைவாக்க இஸ்லாம்) குறித்து மிக அதிகமான உரையாடல்களும் நடைமுறைகளும் தொடங்கியிருக்கும் வேளையில் இந்நூலும் அவரது கட்டுரைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

The first feminist meeting at Huda Sha'rawi's home

The first feminist meeting at Huda Sha'rawi's home

தௌகீது அதாவது ஓரமைவாக்க இஸ்லாம், ‘இஸ்லாமிய மறுமலர்ச்சி’-என்ற பெயரில் உருவாக்கிக் கொண்டிருக்கும் தன்னிலைகளை புரிந்துகொள்ள இச்சம்பவம் உதவும். எனது நண்பரான ஒரு தௌகீதுவாதியிடம் ஒருமுறை சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றிய இஸ்லாமிய பார்வைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர்கூறிய புதிய கருத்தாக்கம் என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. இஸ்லாமின் ‘ஜகாத்’ எனப்படும் ஏழைவரி முறையாக வசூலித்து விநியோகித்தல் மற்றும் வட்டியை ஒழிப்பதன் மூலம் இந்த ஏற்றத்தாழ்வு ஒரு காலத்தில் ஒழிந்துவிடும் என்றார். 1400 ஆண்டுகளாக இஸ்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த நாடுகளிலும், இஸ்லாம் தோன்றிய சவுதி அரேபியாவிலும் இவை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் இந்த ஏற்றத்தாழ்வு ஒழியவில்லை என்று சுட்டிக்காட்டினேன்.

MurshidatMaghrebexperimentswithfemalereligiousguides_php_5 உடனே வழக்கமான மதவாதிகளின்; மதில்மேல் ஏறி நின்றுக்கொண்டு ஏழை பணக்காரன் வேறுபாடு இறைவனின் நாட்டம் அதாவது ‘நசீப்’, அதை மாற்ற முடியாது என்றார். இந்திய விதிவாதத்தின் மற்றொரு வடிவம்தான் இஸ்லாமிய ‘நசீப்’-என்கிற கருத்தாக்கம். இன்று பணக்காரனாக இருப்பவன் தனது கடுமையான உழைப்பின் மூலம் பணக்காரனாக இருக்கிறான். அதனை காப்பாற்றிக் கொள்ளாத அவனது தலைமுறை சோம்பேறியாக இருந்தால் அத்தலைமுறை ஏழையாக இருந்துவிடும். ஓவ்வொரு தலைமுறையும் ஒரு காலத்தில் பணக்காரனாக இருந்து வந்ததுதான். ஏழையாக இருப்பவர்கள் சோம்பேறிகளாக இருந்துவிட்ட அவரது முந்தைய தலைமுறையினரின் விளைவு என்றார்.

அதாவது ஆற்றல்மாறாக் கோட்பாட்டைப்போல, இது ஒருவகை பொருள்மாறாக் கோட்பாட்டை விளக்குவதுபோல இருந்தது. அவரிடம் மூலதனம் அதன் திரட்சி உபரி மதிப்பு என்று விளக்கப்புகும் முயற்சி முட்டையில் மயிர் பிடுங்கும் வேலை என்பதுடன் அதை கேட்கும் நிலமையோ அவருக்கில்லை. கருத்தியல், உலகை தலைகீழாக பிரதிபலிக்கிறது என்று மார்க்ஸ் தனது ‘ஜெர்மானிய கருத்தியலி’-ல் எழுதினார். மதம் ஒரு கருத்தியல் என்ற வகையில் யதார்த்ததில் நிலவும் பொருளியல் முரண்களை தலைவிதி என்கிற கருத்தியலுக்குள் தலைகீழாக பிரதிபலித்துக் கொண்டிருந்ததைதான் அவரது விவாதத்தில் காணமுடிந்தது.

நிற்க, மீண்டும் இஸ்லாமியர்களின் இரண்டு நம்பிக்கைகள் அல்லது ஈமானிற்கு வருவோம். 1. இறுதிதூதரான முகமது நபி படிப்பறிவற்றவர். 2. குர்ஆன் அல்லாவினால் இறக்கப்பட்ட திருமறை, அது இந்நாள்வரை மாறாமல் அப்படீயே இருக்கிறது. ஒரு சிறு குற்றமோ முரண்பாடோ அதில் காணமுடியாது. இவ்விரண்டிலும் சந்தேகம் கொள்வது மதக் குற்றமாகும். இஸ்லாம் என்கிற பேரமைப்பே இவ்விரண்டின் மேல்தான் கட்டமைக்கப் பட்டுள்ளது. இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. முதல் கருத்துடன் உறவு கொண்டதே இரண்டாம் கருத்து அல்லது முதல் கருத்துதான் இரண்டாம் கருத்தின் அடிப்படை. இதனை இவரது கட்டுரைகள் நுட்பமாக விவாதிக்கின்றன என்ற வகையில் இச்சிறு நூலை விடவும் அவை முக்கியமாக நூலாக்கம் பெற்று வெளிக் கொணரப்படவேண்டும். இதனை இங்கு குறிக்க காரணம் பாலைவனத்தின் கடும் வெயிலில் பயணப்பட ஒரு சகப்பயணியைக் கண்ட சந்தோஷம்தான்.

வேதங்கள், பைபிள் அல்லது யூத புணித மறைகள் குறித்து இந்த உண்மைத்துவ சந்தேகங்கள் எழுப்பப்படுவதில்லை. இவை குர்ஆனை நோக்கி மட்டுமே எழுப்பப் படுகின்றது என்பது மேலைத்தேய-கீழைத்தேய அரசியல் வேறுபாடுகள் சார்ந்தது. இஸ்லாமும் குர்ஆனும் அதன் மதத்தன்மையை தாண்டி, இன்று, அரசியல் வடிவம் கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது. பிற மதங்கள் ஆன்மீக வாழ்வை நேரடியாகவும் அரசியல் வாழ்வை மறைமுகமாகவும் பேசுகின்றன. இஸ்லாம் ஆன்மீக வாழ்வைவிட அரசியல் வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் தருவதும் இதற்கு ஒரு காரணம். இவை விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது என்று சொல்லி மேற்செல்வோம்.

இஸ்லாமிய பெண்ணியம் இன்று உலக அளவில் பல இஸ்லாமிய பெண் அறிவுஜீவிகளால் ஒரு இயக்கமாக முன் எடுக்கப்பட்ட போதிலும் இத்தலைப்பில் நமக்கு ஒரு முரண்பாடு உண்டு. அது பொதுவாக மதங்கள் குறித்த நமது கண்ணோட்டத்திலிருந்து வருவதால், அதனை இங்கு தெளிவுபடுத்திக் கொள்வோம்.

மதம் என்பது பெண்ணை ஒடுக்குவதற்கான ஒரு எந்திரம். எல்லா சமூகங்களிலும் அடிப்படை அலகாக இயங்கிக் கொண்டிருக்கும் குடும்பம் என்கிற அமைப்பு தனிச்சொத்தின் தோற்றத்துடன் உருவாகுகிறது. குடும்பங்களுக்கு முன்பு மதங்கள் என்கிற நிறுவனம் சாத்தியமில்லை, மந்திரம் என்கிற சடங்குகள் மட்டுமே சாத்தியம். குடும்பங்களின் உருவாக்கத்துடன் மதங்களின் ஆதிநிலை வடிவங்களான சடங்குகளும் சம்பிரதாயங்களும் ஒழுங்குப் படுத்தப்படுகின்றன.

இக்குடும்பம் என்கிற அமைப்பு பெண்ணை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது தனிச்சொத்தை காப்பதற்கான வாரிசைப் பெற்றுத்தரவும், அதன் உரிமையை நிர்ணயிப்பதற்கும் பெண் என்பவள் குடும்ப அமைப்பின் மையத்தில் அமர்த்தப்பட்டுள்ளாள். பெண் மணைவியாகவும், தாயாயகவும் மாற்றப்படாத ஒரு சமூக அமைப்பு குடும்பமற்ற நாடோடி சமூகமாகத்தான் இருக்கமுடியும். அச்சமூகம் இன்றைய மையப்படுத்தப்பட்ட முதலாளித்துவ நிரந்தர உற்பத்திமுறை என்கிற மறைவியக்க (Abstract) உற்பத்தி முறையைக் கொண்டிருக்காது.

நவீன சமூகங்களின் இத்தகைய உற்பத்திமுறை நிலவுவதற்கான உற்பத்திச் சக்திகளின் மறு உற்பத்திக்கான தொழிற்கூடங்களாக இயங்குவதே குடும்ப அமைப்புகளின் முக்கிய பணியாகும். இக்குடும்ப அமைப்பு சமூக பொருளுற்பத்தியை நுகர்வதற்கும், இவ்வுற்பத்தி அமைப்பை காப்பதற்குமானதாக இருக்கிறது. குடும்பம் என்கிற இத்தொழிற்கூடத்தின் மைய எந்திரமாக பெண் உருமாற்றப்படுகிறாள். இந்நுட்பமான எந்திரத்தை கட்டிக் காப்பதற்கான கண்காணிப்பு தொழில் நுட்பமாக உருவானதே மதங்கள். எனவேதான் எல்லா மதங்களது அறவியல்களும் ஆடையாக பெண் உடல் மீது போர்த்தப்பட்டுள்ளது. இவ் ஆடையை உதறிய நிர்வாண பெண் உடல் எல்லா மதங்களுக்கும் எதிரான கலகமாகிவிடும் என்பதால் அவ்வுடலை மூடிப்பாதுகாப்பதற்கான அறக்கோட்பாடுகளின் காப்புறுதிப் பத்திரங்களாகவே புணித மறைகள் வடித்து வைக்கப்பட்டுள்ளன.

மதங்கள் வர்க்கங்களின் குரலை பிரதிபலிப்பதில்லை, மாறாக வர்க்க உறவுகளை காப்பாற்றிக் கொண்டிருக்கும் உற்பத்தி நிலைமைகளைக் கட்டிக்காக்கும் குடும்ப அமைப்புகளின் குரலாகவே ஒலிக்கிறது. மதங்களின் மயிர்பிளக்கும் தத்துவங்கள் நல்ல சமூகங்களைவிட நன்னெறிமிக்க குடும்ப உரிமைகளைப்பற்றியே அதிகம் பேசுவதைக் காணலாம். இதுவே மதங்களை காலத்தை தாண்டி இன்றும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இவை தனது கண்காணிப்பு வலையை உலகெங்கிலும் விரித்து வைத்துள்ளன. ஓவ்வொரு தனிமனிதனின் ரகசிய செயலைக்கூட கண்காணிப்பதான ஓரு ஆழ்மன அமைப்பை உருவாக்கி உள்ளன.

ஓவ்வொரு புதிய மதமும் நிலவும் உற்பத்தி முறையில் ஒடுக்கப்படும் வளரக்கூடிய புதிய உற்பத்தி முறைக்கான உற்பத்திச் சக்திகளின் குரலாகவே தோற்றம் கொள்கிறது. புதிய உற்பத்தி முறைக்கேற்ப பழைய குடும்ப அமைப்புகளை அல்லது உறவுகளை மறு கட்டமைப்பு செய்து புதிய ஆளும் வர்க்கத்திற்கான ஒரு உற்பத்தி நிலமையை உருவாக்குகின்றன. இப்புதிய புரட்சியே மதங்களின் சீர்த்திருத்தமாகவும், பழைய உற்பத்தி முறையின் ஆளும் வர்க்கங்கள் ஏற்படுத்தும் தடைகளே புதிய மதங்களின் தியாகமாகவும், புதிய குடும்ப அல்லது வாழ்க்கை முறைக்கான நடைமுறைகள், சித்தாந்தங்கள், அறக்கோட்பாடுகள், சிறுநீர் கழிப்பது முதல் சிற்றின்பம் வரையிலான ஒழுக்கவியல் நடைமுறைகள் என எல்லாம் புதிய ஒழுங்கமைப்பிற்கு ஏற்ப மறு கட்டமைப்பு செய்யப்படுகிறது. இவற்றின் தொகுப்புகளாகவே மறைகள் உருவாகுகின்றன.

இம்மறைகள் தங்களது உண்மைத்துவத்தை நிலைநிறுத்திக் கொள்ள மக்களிடையே நிலவும் பழங்கதைளை புதிய உள்ளடக்கங்களுடன் மறுசொல்லுதலுக்கு உட்படுத்துகின்றன. புராதன சமூகத்தில் உருவாகிய மந்திரங்களை முறைப்படுத்தி உள்ளடக்கிக் கொள்கின்றன. மக்களிடம் மறைகளை பிரபலப் படுத்துவது இப்பழங்கதைகளே ஒழிய அதன் சலிப்பூட்டும் அறவியல் கோட்பாடுகள் அல்ல. இவ்வறவியல் கோட்பாடுகள்கூட இக்கதைகள் மூலமே மக்களிடம் சென்றடைகிறது.

மதங்களின் இவ்வறவியல் பெண்ணை மீண்டும் மீண்டும் குடும்பம் என்கிற உள்ளமைப்பிற்குள் அடக்குகிறது. பெண்ணின் ஆற்றலை ஒடுக்குவது, பெண்ணிற்கான வெளிகளை இறுக்குவது, பெண்ணை போற்றிப் புகழ்வதான தந்திரங்களின் மூலம் பெண்ணை தனது அமைப்பிற்குள் இயபுபடுத்துவது, மீறக்கூடியவளை கடுமையான தண்டனைக்கு உள்ளாக்குவது என்கிற தொழில்நுட்ப எந்திரங்களாகவே மதங்கள் இயங்குகின்றன.

அரசியல் பொருளாதார அடிப்படையிலான சமூக வரலாற்றில் முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு பிறகு மதகுருமார்கள் பழைய வகைப்பட்ட அதிகார மையங்களாக இருக்க முடியாத நிலையில், புதிய அதிகார மையங்களான அறிவியல் மற்றும் பகுத்தறிவுடன் தங்களது விவாதத்தை துவக்கினர். இந்நூற்றாண்டில் தங்களது ஆதாரமான இறைவனிடம் கொண்ட நம்பிக்கையைவிட்டு அறிவியல் மற்றம் பகுத்தறிவுடன் இவர்கள் முட்டி மோதிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இவர்கள், தனது இறைவனுக்கு துரோகம் செய்துவிட்டு பகுத்தறிவிடம் சரணடைந்திருப்பதைக் காண்கிறோம். அதாவது, தனது இறையை அதன் கோட்பாடுகளை அறிவியல் மற்றும் பகுத்தறிவுபூர்வமானதாக நிரூபிக்க முயல்கின்றனர்.

அல்லது நினைவிலி நிலையில் பகுத்தறிவை தங்களது கோட்பாட்டைவிட உயர்வானதாக, ஒரு உரைகல்லாக அங்கிகரிக்கின்றனர். அதற்கான மயிர்பிளக்கும் விவாதங்களை விஞ்ஞானிகளுடனும் பிற மதத்தினருடனும், இவர்கள் நடத்தி வருவதை பார்க்கிறோம். மதங்களை மறுவரையறை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு, புதிய ஆளும் வர்க்கங்களுக்கான உற்பத்தி நிலமைகளை உருவாக்க தங்களை தயாரித்துக் கொள்ளும் இவ்வரலாற்றுச் செயல்போக்கில் நவீன முதலாளித்துவ தாரளவாதத்தை நோக்கி நகர்கின்றனர். இத்தகைய செயல்போக்கில் ஒன்றாகவே இஸ்லாமிய பெண்ணியத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

“இஸ்லாத்தின் நவீனத்துவம் அறிவவுவாத மரபினர்களால் மேற்கொள்ளப்பட்டது. குர்ஆனிய வசனங்களுக்கு விஞ்ஞானத் தேடல்களுடனான விளக்க உரை கூறும் தன்மை நிகழ்ந்தது. இதன் மற்றுமொரு வடிவமாகவே நவீனப் பெண்ணிய இஸ்லாமியப் பார்வை உருவானது.” (பக்.-38) என்பதை சுட்டிக்காட்டும் ரசூல், இப்பார்வை நவீன அரசியல் தளத்தில் ஏகாதிப்பத்திய சார்பு மேற்கத்தியப் போக்கை அடிப்படையாகக் கொண்டது என்பதை குறிப்பிடாமல் விட்டதையே மேலே விளக்கினோம். இஸ்லாத்தை நவீனப்படுத்த வேண்டிய தேவையும் அதன் பலனும் யாருக்கு என்பதில்தான் அதன் அரசியல் அடங்கியுள்ளது. இவ்வரசியலைப் புரிந்துகொள்ள ‘இஸ்லாமிய பெண்’-பிம்பம் கட்டமைக்கப்பட்டதை புரிந்துகொள்வது அவசியம்.

1970 மற்றும் 80-களில் அமேரிக்காவில் உருவான பெண்ணிய எழுச்சியுடன் மேற்கத்திய நாடுகள் இஸ்லாமை புதிய எதிரியாக உருவாக்கியதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இக்காலங்களில் ஈரானின் அயத்துல்லா கொமைனி, ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன்கள், லிபியாவில் கடாபி, பாலஸ்தீனத்தில் யாஸர் அராஃபத் ஆகியோர்கள் மேற்கத்திய ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றம் குடியரிமைகளின் எதிரிகள் என்கிற பய உணர்வு சர்வதேச அளவில் கட்டமைக்கப்பட்டது. இத்தைகய பய உணர்வை அடிப்படையாகக் கொண்ட பிம்பங்களில் இருந்தே இஸ்லாமிய பெண் குறித்த வரைபடங்கள் உருவாக்கப்படுகின்றன. யதார்த்தத்திற்கு புறம்பாக, இந்நூலின் அட்டையை அலங்கரிக்கும், முற்றிலும் முகத்திரையிடப்பட்டு பரிதாபமாக ஏக்கத்துடன் உலகை நோக்கும் இரண்டு கருவிழிகள் மட்டுமே இஸ்லாமிய பெண் பிம்பமாக கட்டமைக்கப் பட்டது. இப்பிம்பம் ஓருபடித்தான (stereotype) இஸ்லாமிய பெண்ணை குறிக்கும் ஒரு குறியீடாக மாற்றப்பட்டது. இக்குறியீட்டின் ஏக்க விழிகள் ‘மேற்கத்திய பெண்’ என்கிற ‘உயர் பண்பாட்டை’ அடைவதற்கான நோக்கைக் கொண்டது என்பதை சொல்வதுதான்.

ஏக்கம் கொண்ட இரு islam-veilவிழிகள் மட்டுமே கொண்ட இப்பெண் இஸ்லாமால் பெரும் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறாள். ஒரு மூடுண்ட அமைப்பிற்குள் முக்காடிடப்பட்டு அடிமையான, ஊமையான பதுமையாக இருத்தப்பட்டிருக்கிறாள். அவளது கைகள் கட்டப்பட்டுள்ளன. அவளை உடனடியாக சுதந்திர வெளிக்குள் கொண்டு வந்து முகத்திரை நீக்கி, உரிமைகளை மீட்டுத்தரும் மிகப்பெரிய பணியை அல்லது இரட்சகத்தை பெரிய அக்காள்களாக பாவித்துக்கொண்டு தாங்களாவே கையில் எடுத்துக் கொண்டனர் அமேரிக்க மற்றும் மேற்கத்திய பெண்ணியவாதிகள்.

அமேரிக்க, மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய நாடுகளின் பெண்ணிய சிந்தனையாளர்கள் தங்களை மதச்சார்பற்ற பெண்ணிய சிந்தனையிலிருந்து பிரித்துக் கொள்ளவும், தங்களது மத பழமைவாதத்தை எதிர்த்து தாங்களே போராடுவதற்கான ஒரு கருத்தியல்தளமாகவும் உருவாக்கிக் கொண்டதே ‘இஸ்லாமிய பெண்ணியம்’. இதன்மூலம் இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது என்கிற மேற்கத்திய கருத்தாக்கம் மறு கட்டமைப்பு செய்யப்பட்டு அமைப்பபாக்கத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இவர்கள் இஸ்லாத்தை மறுப்பதில்லை அல்லது அதன் நம்பிக்கைகளை அதன் அரசியல் தன்மைகளை மறுப்பதில்லை. மாறாக இஸ்லாத்தின் வரட்டுவாதம் மற்றும் பழமைவாதப் போக்கிற்கு எதிராக இஸ்லாமின் அடிப்படைகளான குர்ஆன் மற்றும் முகம்மது நபி அவர்களின் போதனைகள் இஸ்லாமிய பெண்ணிற்கு தந்த உரிமைகளை மீட்டெடுக்க முயலுகிறார்கள்.

IH-Iqb1

Amina Wadud leading men and women in Friday prayers.

Amina Wadud - ஆமினா வதூத்இவர்கள் இரண்டு நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தங்களது செயல் திட்டத்தை அமைத்துக் கொண்டுள்ளார்கள். 1. குரானில் கூறப்பட்டுள்ள பால் சமத்துவம் மற்றும் சமூக நீதியை முறையாக பின்பற்றவதற்கான செயல்முறைகளை முன்னெடுப்பது 2. குரானை பெண்ணிய வாசிப்பிற்கு  உட்படுத்தி அதிலிருந்து இஸ்லாமிய பெண்ணை கட்டமைப்பது. முதல்வகையினர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அமேரிக்க பேராசிரியர் ஆமினா வதூத் போன்ற நடைமுறை செயல்பாட்டாளர்களாகவும் இரண்டாம் நிலையினர் மொராக்கோவைச் சேர்ந்த பாத்திமா மெர்னிஸி போன்ற பிரதியியல் செயல்பாட்டாளர்களாகவும் உள்ளனர்.

ரசூல் இச்சிறு நூலில் இவ்விரண்டாம் நிலை செயல்பாட்டை தமிழில் Fatima Mernissi ஃபாத்திமா மெர்னஸிஅறிமுகப்படுத்த முனைகிறார். இஸ்லாமிய பெண்ணியம் குறித்து வரையறையை சொல்லாமலே அதன் அறிமுகத்தை துவங்கிவிடுகிறார். இஸ்லாமிய பெண் சிந்தணையாளர்களையும் இஸ்லாமிய பெண்ணியவாதிகளையும் ஒன்றாக ஒரே தளத்தில் எந்தவித அரசியல் வேறுபாடுகள் இன்றியும் நிறுத்தி விடுகிறார். சர்வதேச அளவில் இன்று நடைபெறும் இஸ்லாமிய பெண்ணிய விவாதப் புள்ளிகள் அனைத்தையும் சிறு சிறு பகுதிகளாக எளிமையாக விளக்கிச் செல்கிறார். இவ்விளக்கங்களுடே ஒரு கவிஞருக்கே உள்ள அவரது உள்மன அவசங்களையும் அதன் ஆதங்கங்களையும் உணர முடிகிறது. மதவாதத்தின் முன் கவித்துவம் சிந்தும் கண்ணீரை இரத்தத்தில் கலப்பதுதான் இதுநாள்வரையிலான மதங்களின் பணி என்பது அவருக்கும் தெரிந்ததே.

‘தீனின் அடிப்படையானக் இறைக்கோட்பாடு மாறாத்தன்மை கொண்டும் ஷரீஅத்தின் அடிப்படை இயங்கியல் தன்மை கொண்டதாகவும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது’-(பக்.4) எனக்கூறும் ரசூல் இம்மாறாத்தன்மை என்பது வரலாற்றை பின்னிழுக்கும் ஒரு பிற்போக்குத்தனம் என்பதை மறந்துவிட்டார். ஷரீஅத் சமூக மாற்றித்திற்கு ஏற்ப பல மறுவிளக்கங்களால் மாற்றங்களுக்கு உட்பட்டிருப்பதால்தான் இஸ்லாம் இன்றுவரை நிலைத்தும் சில பகுதிகளில் வளர்ந்தும் வருகிறது. சமூக மாற்றத்திற்கு ஏற்ப தேவதூதர்களின் அவதாரங்களும் வேதங்களின் வெளிப்பாடும் நடந்து கொண்டுதான் இருக்கும்.

கருணையற்ற, இரக்கமற்ற கொடூரமான மனமற்ற உலகை படைத்துவிட்டு அதன் துன்பத்தை, வலியை, வேதனையை ஆற்றுப்படுத்த ஒரு அப்பாலை மனத்தை ஆளும் வர்க்கத்திற்காக மதங்கள் படைத்துக் கொண்டுதான் இருக்கும். மனமற்ற உலகின் மனமாக பாமர மக்கள் அதில் தஞ்சம் புகுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். முகமது நபி இறதிதூதா என்கிற ‘ஈமான்’- என்றுமே மாற்றத்திற்குள்ளாகப் போவதில்லை. காரணம், அதன்பிறகு தோன்றிய மாமனிதர்களும் மகான்களும் போதிப்பவை மதங்களாகவும், புணித மறைகளாகவும் போற்றதலுக்குரிய அடையாளத்தைப் பெறப் போவதில்லை இனி. நவீன காலம் எனப்படும் 19-ஆம் நூற்றாண்டிற்கு பிறகான உலகை பகுத்தறிவும், விஞ்ஞானமும் ஆளத்துவங்கி தனிமனிதனின் உலகப் பார்வையைக் கட்டத்துவங்கிய பிறகு இனியொரு மதமும் தேவதூதரும் புணித மறையும் தோன்றப் போவதில்லைதானே.

குர்ஆனின் வசனங்களை மறு வாசிப்பு செய்து மூலப்பிரதியில் இருந்து பிரதிசார்ந்த இரண்டாம் நிலை அர்த்தம் என ‘பலதாரமணமுறை மறைமுகமாக ஒருதாரமணமுiறையை மையப்படுத்துவதை’-சுட்டிக்காட்டும்(பக்.-6) ரசூல், இது இன்று ஒரு சமூகப் பிரச்சனையில்லை என்பதை மறுக்கமாட்டார் என நினைக்கிறேன். காரணம் ஒருதார மனமுறையை வலியுறுத்தக்கூடிய மதங்களை சார்ந்தவர்கள் மட்டுமே ஒருதார மணத்தில் வாழ்ந்து வருவதுமில்லை, பலதாரமணத்தைக் கூறும் இஸ்லாமைச் சார்ந்தவர்கள் எல்லோரும் பலதாரமணம் செய்துக்கொள்வதுமில்லை. இந்தியாவில் இஸ்லாமியர்களைவிட பிற மதத்தினர்தான் அதிகம் ஒன்றுக்கு மேற்பட்ட மணைவிகளை கொண்டுள்ளனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். மணைவிகளை தீர்மாணிப்பது மதங்கள் இல்லை, சொத்தும் அது உருவாக்கும் அதிகாரமும்தான். ஆணால் இச்செயலை குற்றமாக கணித்துவிட்டு அக்குற்ற உணர்வை நியாயப்படுத்திக் கொள்வதற்கும், பணம்படைத்தவர்களுக்கும், அதிகாரத்தை எதிர்க்காது தலைவிதி என நொந்துகொள்ளும் ஏழைகளுக்கும் சொர்க்க நரகத்திற்கான இடப்பதிவை (பிளாட்-ரிஜிஸ்ட்ரேஷன்) செய்வதற்கும்தான் மதங்கள் பயன்படுகின்றன.

muslim2இஸ்லாம் குறித்த விமர்சனங்களில் தலையாய இடத்தைப்பிடித்தது ‘தலாக்’-தான் என்றால் மிகையாகாது. ‘இஸ்லாமிய வாழ்க்கைமுறையில் தலாக் என்பது மனைவியை நினைத்த நேரத்தில் கணவன் மணவிலக்கு செய்யும் மன முறிவு நிகழ்வாகும்’ (பக்.8) இது ரசூலின் கொஞ்சம் அதிகப்படியான உணர்ச்சிவசப்பட்ட விளக்கமாகத் தெரிகிறது. காரணம் ‘நினைத்த நேரத்தில்’ என்பது ஏதோ இஸ்லாம் கட்டுப்பாடற்று ஆண்களுக்கு தலாக்கை திறந்துவிட்டது போன்ற பார்வை நிலையை உருவாக்குகிறது. தலாக் என்பது பெண்ணிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு உரிமை என்பது பெண்ணிய அடிப்படையிலும், அடிப்படை ஜனநாயக உணர்விலும் சிந்திப்பவர்கள் அறிந்ததே. இஸ்லாத்தின் வணிக வர்க்கப் பிண்ணனி இக்குறைந்தபட்ச உரிமையை பெண்ணிற்கு வழங்குவது, அதன் பெண் குறித்த வர்க்க அறிதலுடன் உறவு கொண்டது.

இஸ்லாத்தில் திருமணமும் ஒருவகை வணிக ஒப்பந்தத் தன்மையுடனேயே அனுகப்படுகிறது. பெண் விற்பதற்கும் வாங்குவதற்குமான ஒரு வணிகப் பொருளைப் போன்றவள். இது பலதாரமணத்தை சமூகவயப்படுத்தும் செயலாகும். வாங்க சக்தி உள்ளவர் நான்குவரை வாங்கலாம். அதற்குமேல் அனுமதிப்பது பற்றாக்குறையை உருவாக்கி சமூக அமைதியை ஒரு கட்டத்தில் குழைத்துவிடும். இதர விற்பனைப் பொருளிளிருந்து ஒரே வித்தியாசம் பெண் உயிர் உள்ள பொருள் என்பதால் அதனை காப்பதற்கான சக்தி, உடலுறவு உட்பட, வாங்கியவனுக்கு இருக்க வேண்டும் என்பதே நிபந்தனை. இது அன்றைய அரேபிய சமூகத்தில் நிலவிய கட்டுப்பாடற்ற திருமண முறைகளை ஒரு ஒழுங்கிற்கு கொண்டுவருவதற்கும், போரினால் விதவை ஆக்கப்பட்ட பெண்களின் பாலியல் ஆற்றலை முறைப்படுத்துவதற்கும்; செய்யப்பட்ட சீர்த்திருத்தம். இதுவே அன்றைய அரேபிய வணிகர்களையும், அடிமையாக்கப்பட்ட பெண்களையும் இஸ்லாம் உள்ளிழுப்பதற்கு காரணமாக அமைந்தது என்பதை வரலாறு உணர்த்துகிறது.

அரபிப்பழங்குடியில் கணவனை விலக்கும் உரிமை பெண்ணிற்கே இருந்துள்ளது. அதனை இஸ்லாம் பெண்ணிடம் இருந்து தட்டிப்பறித்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் (பக்.10) ரசூல். தலாக்கை ஆணின் உரிமையாக்கி, ஆணை தனக்குள் உள்ளிழுக்கும் செயலாகவே இதனை காணமுடிகிறது. பிரச்சனை தலாக்கை ஆண்கள் தவறாக பயன்படுத்துகிறர்கள் என்பதுதான். மார்க்ஸ_ம் ஏங்கல்ஸ_ம் கம்யூணிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல கணவன் மனைவி உறவு ரொக்கப்பட்டுவாடா உறவாக உள்ள இன்றைய பிற்போக்கான முதலாளித்துவ உற்பத்தி அமைப்பில் மண ஒப்பந்தங்கள் மன ஒப்பந்தங்களாக இல்லை என்பதுதான் இதற்கு காரணம். சேர்ந்து வாழ விருப்பமற்ற இருவரை மதமோ, சட்டமோ அல்லது தாதாக்களோ சேர்த்துவைப்பதன் மூலம் எது சாதிக்கப்படுகிறது? அல்லது எது காப்பாற்றப்படுகிறது? என்பதே கேள்வி. பெண்களை சுயச்சார்பற்றவர்களாக இருத்தி வைத்திருப்பதுதான் இத்தகைய தலாக்குகளுக்கு காரணம். பெண் சுயச்சார்புடன் தேர்வுக்குரியவளாக இல்லாமல் தேர்வு செய்பவளாக மாறும்போது தலாக்குகள் ஒரு விடுபடுதலுக்கான செயல்களமாக மாறிவிடும்.

பெண் அதிகாரத்தை பெறுவதற்கான ஒரு முன்முயற்சி என்றவகையில் பெண்களின் தனி ஜமாத் குறித்து கூறும் ரசூலின் கருத்து ஏற்புடைய ஒன்றே. அதுவும்கூட ஏழையான பெண்களுக்கு நன்மை பயக்கப்போவதில்லை. ஆண் ஜமாத்துகள் போன்றே அதுவும் ஒரு இணை அதிகார அமைப்பாக இயங்கும் என்பதுடன் அதனுள் நடப்புலகின் எல்லா வர்க்க முரண்களும் பிரதிபலிக்கதான் செய்யும், என்றாலும், குறைந்தபட்சம் பெண்களுக்கான ஒரு வெளியை அது திறக்கிறது. சுயமாக சுவாசிப்பதற்கான ஒரு தளமாக இருக்கும். பெண்கள் தங்களை உணரவும், பயிற்றுவித்துக் கொள்ளவும் அது ஒரு முன்முயற்சிக்கான களமாக இருக்கும்.

ஜீவானாம்சம் குறித்து ரசூலின் கருத்துக்கள் ஜனநாயகத்தன்மை கொண்டவை என்பதுடன் இது இஸ்லாமிற்குள் ஏற்படுத் தப்படவேண்டிய சீர்திருத்தம் மற்றும் போதாமை குறித்து பேசுகிறது. அரேபிய திருமணமுறைகளில் மகர் எனப்படும் பெண்ணிற்கான பரிசப்பணம் என்பது சொத்தின் அளவிற்கு சமமானதாக ஆணால் தரப்படுகிறது. அதாவது ஆண் பெண்ணிற்கு பணம் தந்து திருமணம் செய்துகொள்ளும் முறையே உள்ளது. இதுவும் ஒருவகையில் பெண்ணை விலைக்கு வாங்கும் வணிகச் செயல்பாடுதான். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இது பெண் ஆணிற்கு வரதட்சிணையாக பணம் தந்து திருமணம் செய்துகொள்ளும் முறையாக எதிர்மறையாக உள்ளது.

இவ் வரதட்சிணைப்பணம் தலாக் சொல்லப்பட்ட முஸ்லிம் ஜமாத்துகளில் திரும்ப கணவனிடமிருந்து பெற்று பெண்ணிடம் ஈடாகத் தரப்படுகிறது என்றபோதிலும் அது எஞ்சிய காலங்களுக்கு பாதுகாப்பைத் தர போதுமானாக இருக்குமா? என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. மறுமணத்தை மறுக்கும் மதங்களே ஜீவாணாம்சம் என்கிற ஒரு ஏற்பாட்டை செய்துள்ளன. இஸ்லாம் மறுமணத்தை ஆதரிப்பதால் இந்நிலை குறித்து தெளிவான வரையறைகள் இல்லை. இவை மறுவரையறை செய்யப்பட வேண்டியவை என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. அதேசமயம், மறுமணத்தில் சிக்கலுக்குள்ளாவதாக கருதப்படும் கற்பு மற்றும் ஒரு ஆணைவிட்டு மற்றொரு ஆணுடன் உறவு கொள்வதில் உருவாகும் உடல் புணிதம் சார்ந்த உளவியல் பிரச்சனைகள் இஸ்லாமின் வணிக வர்க்கச் சிந்தனைக்கு முந்தைய நிலவுடமை சிந்தனையுடன் உறவு கொண்ட பிற்போக்கச் சிந்தனையாகும்.

சாட்சிகள் என்ற பகுதியில் ஆயிஷா நாயகத்தின்; ஞாபக சக்தியைப்பற்றி குறிப்பிடுகிறார் (பக். 15). நினைவு (ஞாபகம்)-மறதி என்பது உளப்பகுப்பாய்வு அடிப்படையில் விருப்பம்-விருப்பமின்மை என்கிற தேர்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு உடலரசியல் நிகழ்வாகும். ஆயிஷா நாயகத்தின் நினைவாற்றல் அவர்களது தேர்வு சார்ந்தும், அதனை வெளிப்படுத்துதல் அவரது புரிதல் சார்ந்தும், சொல்லுதல் என்பது அன்றைய சொல்லுதல் முறைமைகளின் அர்த்த சாத்தியங்களை சார்ந்தும் அமைவதாகும். ‘ஹதீஸ்’-களில் பெரும்பாலானவை ஆயிஷா நாயகம் அவர்களால் சொல்லப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

‘சுன்னத்’-எனப்படும் நபிகளின் வாழ்வு நெறிகளை வெளிப்படுத்தி இஸ்லாமைக் கட்டமைத்ததில் முகமது நபிகளுக்கு பிறகு ஆயிஷா நாயகத்திற்கு முக்கிய பங்கிருப்பதையும், மத நடைமுறைகள் துவங்கி ஆட்சி அதிகாரம் வரை அவரது ஆதிக்கத்தை மறுவாசிப்பு செய்வது இஸ்லாத்தின் பெண்ணியக் கூறுகளை ஆயிஷா அவர்களின் ஆளுமை அடிப்படையில் புரிந்துகொள்ள உதவும். மறுசொல்லுதலுக்கான உளபகுப்பாய்வு மற்றும் சொல்லுதலின் அரசியல்கூறுகளை கவனத்தில் கொண்டு இவை மறுவாசிப்பு செய்யப்படவேண்டியவை.

சானியா மிர்ஷாவின் ஆடைகுறித்த சர்ச்சையை குறிப்பிடுகிறது இந்நூல் (பக். 18). மதம் தனிமனித ஆடை ஒழுக்கங்களில் தலையிடுவது எதிர்க்கப்பட வேண்டியதுதான், அதேசமயம் ஆணிய பாலிண்ப நோக்குடன் விளையாட்டுக்கான வெளியை ஒரு காமவெளியாக (erotic space) கட்டமைக்கும் நுகர்வுப்பண்பாட்டுப் போக்கும் விமர்சிக்கப்பட வேண்டியதே. குறிப்பாக டென்னிஸ் வீராங்கனைகளுக்கு தரப்படும் உடைகள் ஆட்ட நேரத்தில் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் பாலியல்ரீதியான உளவியல் தூண்டல்கள் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே. பெண்ணை நுகர்வுப்பண்டமாக மாற்றும் ஒரு வியபார உத்தியே இது.

Sania Mirsa in Mecca மெக்காவில் சானியா மிர்ஸாபிரச்சனை சானியா மிர்ஷாவைப்பற்றி மட்டுமே மேதகு இஸ்லாமிய மதகுருமார்கள் பேசுகிறார்கள். இதர கிறித்துவ பெண் உடல்கள் குறித்த அக்கறை இவர்களுக்கு இல்லை என்பதுதான் விமர்சிக்கப்பட வேண்டியது. தோழில் முதலாளித்துவம் பெண்ணை நுகர்வுப்பண்டமாக மாற்றும் இப்போக்கை சரியாகவே குறிப்பிடுகிறார் ரசூல் (பக்.-19). இதே சானியா மிர்ஷா ஒரு பேட்டியில் தான் 5-வேளை தொழுகையை கடைப்பிடிப்பதாகவும், மெக்காவிற்கு ‘உமரா’-எனப்படும் சடங்கை நிறைவேற்ற வந்தபோது ‘ஹிஜாஃப்’-எனப்படும் தலைக்கவசம் அணிந்தும், தனது இஸ்லாமிய அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டார்.

அடுத்து பெண்ணிய சிந்தனையாளர்கள் வாதிடும் ஒரு முக்கிய பிரச்சனை இஸ்லாமியப் பெண்கள் முகத்திரையிடும் வழக்கம் பற்றியதுhijab. பெண்கள் முகத்திரை அணிவது அவர்களது உரிமை சார்ந்த பிரச்சனை அதை மத அடையாளமாக மாற்றுவதும், அதே அடையாளத்தைக் கொண்டு இஸ்லாமிய பெண்ணை ஒருபடித்தானவளாக குறியிடுவதும் அடிப்படையில் மனித உரிமையை மறுக்கும் எதேச்சதிகாரமாகும். இஸ்லாமியப் பண்பாட்டிற்காக மேற்கத்திய பெண்களை முகத்திரை அணியச் சொல்வதைப் போலத்தான் இஸ்லாமிய பெண்களை முகத்திரை அணியக்கூடாது என்று கூறுவதும். இரண்டுமே மனித உரிமையை மறுக்கும் பிரச்சனைதான். இது இஸ்லாமிய பெண்மீது நடத்தப்படும் ஒரு பண்பாட்டு ஏகாதிபத்தியம் ஆகும்.

மேலும், இரு விழிகள் மட்டும் தெரியும் முகத்திரைப் பழக்கம் இஸ்லாமால் எல்லா பெண்களுக்கும் முன்வைக்கப்பட்டதில்லை முகமது நபியின் மணைவியர்களைத்தவிர (பக்.-17) என்பதை சுட்டிக்காட்டும் ரசூல், உலக அளவில் பெரும்பாலான இஸ்லாமிய பெண்களிடம் அப்பழக்கம் இல்லை என்பதையும், இது திட்டமிட்டு ஊடகங்கள் வழி பெருக்கப்படும் ஒரு தவறான பதிவு என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கலாம். இஸ்லாமியர்களை அதிகம் கொண்ட நாடுகளான இந்தோனேஷியா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளிலோ அல்லது சூடான், எகிப்து போன்ற ஆப்பரிக்க நாடுகளிலோ அப்பழக்கம் இல்லை.

இந்நாடுகளில் தலை முக்காடிடும் பழக்கம் அந்தஸ்த்தை குறிக்கும் ஒரு சின்னமாகவே உள்ளது. கூலித்தொழிலில் ஈடுபடும், உழைக்கும் இஸ்லாமிய பெண்களிடம் இப்பழக்கம் இல்லை. தனது இஸ்லாமிய தூய்மைத்துவத்தையும் பெருமிதத்தையும் காட்டிக்கொள்ள அரேபிய நாடுகளில் குறிப்பாக சவுதி அரேபியாவில் இது கட்டாயப்படுத்தப்படுகிறது. இங்கும்கூட அரேபிய பெண்கள் கார் ஓட்டும் உரிமைக்காகவும், ஓட்டுரிமை, வேலை மற்றும் வியாபார உரிமைக்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வழுத்தங்களின் காரணமாகவும், உலக வர்த்தக மையங்களின் நிர்ப்பந்தம் காரணமாகவும் சவுதி அரசும் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை கட்டாயமாக்கி உள்ளது தற்பொழுது.

இந்நூலின் அடிப்படை தர்க்கம் இதுதான். இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை தந்துள்ளது. குர்ஆனின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமத்துவமாகவே பாவிக்கப் படுகிறார்கள். ஓரு சில குர்ஆனின் வசனங்கள் மத குருமார்களால் தவறான விளக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டு பெண்ணுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. ஷரியத் சட்டம் என்கிற இஸ்லாமிய சட்டமுறை காலமாற்றங்களுக்கு ஏற்ப அடிப்படை மாறாமல் மறுவிளக்கங்களுக்கும் விரிவுபடுத்தலுக்கும் உட்பட்டது. அதனை சூழ்நிலைக்கு ஏற்ப நெகிழ்வுடன் அனுக வேண்டும். இக்கருத்துக்களை பெண்களுடன் தொடர்புடைய முக்கியமான நடைமுறைகளை எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார். தலாக், சொத்துரிமை, முகத்திரை துவங்கி, சொத்துப் பங்கீடு மற்றும் பாசிச எதிர்ப்புவரை இவரது விளக்கம் சுருக்கமாக எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறது.

இவ்விளக்கங்கள் இஸ்லாமிய மதகுருமார்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஊக்கமளிக்கக்கூடியவை என்பதுடன் இஸ்லாம் குறித்து தவறான பதிவுறத்தலை கொண்டிருப்பவர்களுக்கு இந்நூல் ஒரு நல்ல அறிமுகத்தை தரக்கூடியது. இன்றைய மதவாத பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக ரீதியான தாராளவாத இஸ்லாமை அறிமுகப்படுத்தும் இம்முயற்ச்சி அவசியமானதும்கூட. ஆணால் நாம் முரண்படுவது இதன் அடிப்படை தர்க்கத்தில்தான். இஸ்லாமை பொதுவாக மதங்களை பெண் விடுதலைக்கான அல்லது மனித விடுதலைக்கான ஒரு மார்க்கமாக ஏற்க முடியுமா? நாம் மேலே மதம் குறித்து அலுப்பூட்டும் பெரும் உசாவலை நிகழ்த்தியிருப்பது இத்தர்க்கத்திற்கு எதிரான நமது கருத்தை புரிந்துகொள்ளத்தான். பொதுவாக நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்ட எந்த மதமும் மனித விடுதலை குறித்து வாழ்வின் பொருளியில் நெருக்கடிகளுக்கு அப்பால் சொர்க்கம் நரகம் என்கிற அப்பாலை கருத்தியில் கற்பணார்த்தங்களைத்தான் போதித்துவருகிறது. அல்லது மனிதனை ஆளப்படும் தன்னிலைகளாக உருவாக்கும் தன்னிலை உருவாக்க எந்திரங்களாக இயங்கிவருகிறது.

இறுதியாக இஸ்லாமிய பெண்ணிய விவாதங்களில் விடுபட்டிருக்கும் ஒரு கேள்வியுடன் இதனை முடிக்கலாம். இறுதிப்பேரழிவு, விசாரணை, சோர்க்கம், நரகம் ஆகிய பெரும்புனைவுகளற்ற இறைவன்சார் மதங்களே இல்லை எனலாம். யுதார்த்த உலகில் ஏற்படும் துன்ப துயரங்களுக்கு தீர்வாகவும், வாழ்வை ஒரு தத்துவ அடிப்படையில் புரிந்து கொண்டு வாழ்வதற்கான ஒரு அர்த்தமும் இப்புனைவுகளின் வழியாக வழங்கப்படுகிறது. இவற்றில் சொர்க்கம் நரகம் பற்றிய வியப்பூட்டும் கற்பனைகளைக் கொண்ட ஒரு புனைவு உலகத்தை இஸ்லாம் படைத்துக்காட்டுகிறது. அவ்வுலகில் உள்ள பெண்கள் பற்றிய வர்ணனை பெண் குறித்த சில அடிப்படைக் கற்பிதங்களை அல்லது இஸ்லாம் அனுமானிக்கும் இலட்சிய பெண் உடல் பற்றிய பிம்பங்களை காட்டுவதாக உள்ளது.

சொர்க்கத்தை அடையும் ஆண்களுக்கு ‘ஹ_ருல் ஈன்(நீண்ட கண்களுடையவர்)களை மணம் முடித்து வைப்போம்’ (அல் குர்ஆன் 44:54) ‘அவர்கள் வெண் முத்தையும், பவளத்தையும் போல் இருப்பார்கள்.’ (55:58) ‘இவர்களுக்கு முன் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை’ (55:74). குர்ஆனில் சுட்டப்படும் இவ்வசனங்களில் நீண்ட கண்கள், வேண்முத்து, பவளம் போன்ற வர்ணனைகள் ஆணிய காட்சியின்பத்தையும் (male gaze), யாராலும் தீண்டப்படாத பரிசுத்தமானவள் என்பது ஆணிய நுகர்வு இன்பத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஆணிய நொக்கிலான தந்தைவழி அதிகாரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு இத்தகைய பெண்கள் எனில், சொர்க்கம் புகும் பெண்களுக்கு? இதற்கான பதிலை இஸ்லாமிய பிரதிகளின் மௌனங்களிலும், இடைவெளிகளிலும் தேடத் துவங்கினால், இஸ்லாமிய மத அமைப்பிற்குள் புதையுண்டு கிடக்கும் பெண் உடலை அகழ்ந்து எடுத்துவிடலாம். இதுவே ‘இஸ்லாமிய பெண்ணிய’-த்தின் முதல் வேலைத்திட்டமாக இருக்கமுடியும். இவ்வகழ்வாய்வு இஸ்லாமிற்குள் மட்டுமல்லாமல் எல்லா மதங்களுக்குள்ளும் நிகழ்த்தப்பட வேண்டியது பெண்ணியத்தின் அடிப்படை வேலைத் திட்டமாகும். இவ்வேலைத்திட்டமே பெண்ணியம் முன்வைக்கும் ‘பெண்’-ணை நமக்குக் காட்டித்தரும். ‘ஆண்’-என்கிற கருத்தாக்கம் நவீன யுகத்தின் (modernism) கட்டமைப்பு என்கிறார் மிஷல் ஃபூக்கோ. பின்-நவினத்துவ யுகத்தில் நாம் ‘பெண்’-என்கிற கட்டமைப்பை கண்டடைய இங்கிருந்து துவங்கலாமே?

- ஜமாலன் - புதுவிசை - ஜீலை-செப்டம்பர் 2007.


உடல் மீது விளையாடும் கடவுள்களும், சாத்தான்களும் - இலக்கிய இரட்டைகளைப் பேசும் 'வார்சாவில் ஒரு கடவுள்'.

சுமார் ஏழுமாதங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. கடந்த சில மாதங்களாக தமிழக, ஈழ அரசியல் சூழல் ஏற்படுத்திய நெருக்கடிகளால் எழுத்து என்பது அரசியல் தாண்டி சிநத்திக்க இயலாமல் இருந்ததால், ஒரு இடைவெளிக்குப்பின் மீண்டும் எழுதும் உந்ததலை துவக்கும் முகமாக இதனை இங்கு வெளியிடுகிறேன். சரியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவல் குறித்து இப்பொழுதாவது இதனை வெளியிட்டுவிட வேண்டும் என்கிற உள்நோக்கமும் ஒரு காரணம்.  இந்நாவல் குறித்து நண்பர்கள் நாகார்ஜீனனின் எல்லை கழன்ற அ-தர்க்கமும் எழுத்தின் உடைவும் மற்றும் சண்முகத்தின் பரஸ்பர பிரதியாக்கம் இரட்டைகள் - இன்மைகள் கட்டுரைகளையும் இணையாக வாசிப்பது பன்முக வாசிப்பை சாத்தியப்படுத்தக்கூடியவை என்பதால் அதனையும் வாசி்க்கும்படி நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

“சாத்தான் என்பது அடக்க முடியா ஸெக்ஸ் ஆசையின் நாமரூப வடிவம்”
                                                                      - பக்.-181
"எந்த ஆண் தனக்குள் இருக்கும் பெண்ணை அறிகிறானோ, அவன் தான் முழு மனிதன். அதுபோல் எந்தப் பெண் தனக்குள் இருக்கும் ஆணைப் புரிகிறாளோ, அவளே முழுமையானவள்.”

                                                                        - பக்.-338

'வார்சாவில் ஒரு கடவுள்'- தமிழவனின் நான்காவது நாவல். தமிழ் நாவல்களில் இவரது நான்கு நாவல்களினதும் வருகையும் தமிழின் சமூக அரசியல் பின்புலங்களின் வழியாக உருவாகி, தமிழ்  சமூக அரசியல் வரலாற்றை கதை வடிவில் எழுதிப் பார்க்கப்பட்டவை என்று சொன்னால் மிகையாகாது. 60-களில் கொந்தளிப்புகளை  தமிழக அளவிலும், இந்திய அளவிலும் உருவாக்கி பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய திராவிட எழுச்சியின் பின்புலத்தில் தென் தமிழகத்தில் நிழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை மாந்திரிக யதார்த்த வடிவி்ல் எழுதிப்பார்க்கப்பட்டக் கதையாடலே “ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்”. அதன் பின் திராவிட எழுச்சி தேசிய அரசியலில் கலந்துபோனதின் விளைவாக உருவான சமரசத்தின் உச்சமாக வெளிப்பட்ட எம்ஜியார் காலகட்டமான 70-களில் தமிழகத்தின் சினிமா மற்றும் அரசியலின் விளைவால் உருவான தமிழ் சமூகத்தின் அழித்தெழுதப்பட்ட வரலாறாக எழுதிப்பார்க்கப்பட்ட  கதையாடலே  “சரித்திரத்தில் படிந்த நிழல்கள்“. எம்ஜியார் அரசியலின் தொடர்ச்சிக்கு பின் தமிழகத்தில் மீண்டும் இனஉணர்வை உருவாக்கி தமிழச்சமூக அரசியலை கட்டமைத்த 80-களின் தமிழீழப் பிரச்சனையையும், யாழ்நூலக எரிப்பு மற்றும் பௌத்தத்தின் இறுகிப்போன மடாலயங்களின் அதிகாரம் ஆகியவற்றின் பின்னணியில் அழித்தெழுதப்பட்ட மற்றொரு கதையாடலே  “ஜே.கே. எழுதிய மர்மநாவல்”.  90-களில் உருவாகி வந்த உலகமயமாக்கலால் உருவாக்கப்பட்ட “உலகத்தமிழனின்“ பண்பாட்டு மோதல்கள் துவங்கி உலகமயமாகிவரும் தமிழனின் சிந்தனை முறைகளை பின்னணியாகக் கொண்டு இலக்கிய இரட்டைகள் எனப்படும் இலக்கிய நுட்பத்தின் அடிப்படையில் “கோத்திக் நாவல்“ வகையினத்தைப் போன்று கறபணாவாதமும், மாயமும், கூடவிட்டுக் கூடுபாய்தலும், பேசும் இடம் (வீடு), பேசும் காலம் (கடிகாரம்), மீயதார்த்த கனவுகள், வசியம் மற்றும் கவர்ச்சி கலந்துவரும் இரட்டைகளான எழுத்துருக்களால் எழுதப்பட்டுள்ள நாவலே “வார்சாவில் ஒரு கடவுள்“. 

இனசாராம்சவாதத்தை அடிப்படையாகக்  கொண்ட ஐரோப்பிய மையவாத சிந்தனை  மரபு மனிதனை எந்திரமாக்கிவிட்ட சூழலில், உலகப் பொருளாதாரமும், அதிகார மையமும் ஆசிய நாடுகளுக்கு நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், சிறுபான்மையினங்களின் நாடுகள் என்பது அகதி முகாம்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் உலக அரசியல் சூழலில் வெளிவந்திருக்கிறது இந்நாவல். உலகமயமாதலின் விளைவாக உருவான தகவல்தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த சந்திரன் தமிழகத்தின் தென்கோடியிலிருந்து ஐரோப்பிய சமூகமான போலந்தின் தலைநகரமான வார்சாவிற்கு தொழில்முறையாக செல்வதில் துவங்கி ஐரோப்பிய மற்றும் தெற்காசிய வரலாறு, தத்துவம், அரசியல், பண்பாடுகளினைப்பற்றிய உரையாடலை அவன் வழியாக செய்யும் கதையாடலே இந்நாவல்.

இந்நாவலின் முக்கிய எழுத்துருவான சந்திரனின் கால்வழி வரலாறு என்பது இரண்டாம் உலக யுத்தத்தில் விரட்டப்பட்ட மங்கோலிய  முகம் கொண்ட பெண் ஒருவரின் மகன் என்பதாக சொல்கிறது கதையாடல். ஆங்கிலேயப் போர்த்தளபதி ஒருவனின் வன்பாலுறவை எதிர்கொண்ட வான்சூயி என்பவள் அவனது ஆண்குறியை கடித்தெரிந்ததின்மூலம் ஐரோப்பிய ஆண்மையவாத போர் வெறிக்கு எதிர் அடையாளத்தை தந்தவளின் இனத்தைச் சேர்ந்த பர்மியப் பெண். ஆங்கிலேய காலனியப்படையால் எரிக்கப்பட்ட வான்சூயின் கிராமமான மிலானர் வழியாக வரும்போது சந்திரனின் தாத்தாவால் கண்டெடுக்கப்பட்டவள்தான் அந்த 3 வயது பெண் குழந்தை. நெருப்பு எரிவதை உணரும் ரகசிய ஆற்றல் கொண்ட அப்பெண் அந்த எரிந்த கிராமத்துடன் தொடர்பு கொண்டவளாக ஊகிக்க பிரதி சில தடங்களைத் தருகிறது என்றாலும், நெருப்புணரும் ஆற்றல் கொண்டவளான அவளுக்கும், மரபான முறையில் நிலத்தடி நீரை அறியும் ஆற்றல் கொண்ட பாரம்பரியத்தில் பிறந்த ஒருவருக்கும் பிறந்த மகன் சந்திரன். ஆக, இரண்டு வேறுபட்ட கலாச்சாரங்களின் இணைவால் உருவானவன் மட்டுமல்ல, இரண்டு முரணாண அமைப்புகளின் இணைவால் உருவானவன் சந்திரன். இவ்விரண்டு கலாச்சாரங்களுமே ஐரோப்பியாவிற்கு அந்நியமான கலாச்சாரம் என்பதுடன் ஐரோப்பாவால் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட தென்கிழக்காசிய நாடுகளின் கலாச்சாரம் என்பது முக்கியம். விளிம்புகளின் இப்பண்பாடுகள் மையத்துடன் நிகழ்த்தும் ஒரு உரையாடலின் கதைவடிவமே இந்நாவல்.

சந்திரன் லிடியாவிடம் கூறுவதுபோல- “என் சரித்திரம்-என் ரத்தம்-தென்கிழக்காசியாவின் மொத்த பரப்பளவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்று”. என்பதால் சந்திரன் ஒரு புவிப் பரப்பளவின் குறியீடாக மாறுகிறான். அவன் நெருப்பாலும் நீராலும் செய்யப்பட்டவன். நெருப்பு/நீர் என்கிற முரண் ஒருவித புராதனக் கலாச்சார கலப்படையாளமாக இருக்கிறது எனலாம்.  அவனது தந்தை நீரை அறியும் ஒரு மரபான அறிவைப் பெற்றவர். அவனது தாய் நெருப்பை அறியும் ஒருவகை புராதன குணம் கோண்டவர். கருப்பு மற்றும் மஞ்சள்நிற கலப்பினால் உருவானவன். நெருப்பும் நீரும் இணைந்ததால் பிறந்தவன்.  அல்லது “நெருப்பாலும் நீராலும் செய்யப்பட்ட மனம் கொண்டவன்“. நெருப்பு/நீர் என்கிற இந்த அடிப்படையான முரண் நாவலின் பல தளங்களில் வேறுபல முரண்களாக வளர்ந்து கிளைக்கிறது. பெண்/ஆண் என்பதாகவும் அதன் நீட்சியாக கிழக்கு/மேற்கு என்கிற இரு வேறுபட்ட கலாச்சாரத்தின் சந்திப்பு புள்ளிகளாகவும் நாவல் விரிவடைகிறது. இந்நாவலில் மிகமுக்கியமான உலக அரசியல் நிகழ்வுகளான இரண்டாம் உலகப்போரின் ஹிட்லரின் பாசிச வதைமுகாம்கள் துவங்கி, தற்போதைய ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு, ஆதிவாசிகளின் அழிப்பு மற்றும் இந்திய அரசியல்வாதிகள் வரை விரிவடைந்து செல்கிறது. உலகெங்கும் பூர்வக் குடிகளான ஆதவாசிகள் அழிக்கப்படுகிறார்கள், ஐரோப்பாவில் ரஷ்யா, ஜெர்மன் மற்றும் போலந்து போன்ற நாடுகளில் மக்கள் பாசிச ஆட்சியால் அழிக்கப்பட்டார்கள். ஈழத்தமிழர்கள், இன அழிப்பிலிருந்து தப்பி எல்லை தாண்டி புலம் பெயரும் வழிகளில் அழிக்கப்பட்டும் தப்பிப்பிழைத்தும் வாழ்கிறார்கள். இந்நிலையில் தேசஉருவாக்கம் என்கிற பெருந்திட்டத்தின் விளைவாக உருவான போர் என்கிற கூட்டுப் பலிச்சடங்குகளின் பின்னணியில் எழுதப்படுகிறது இந்நாவல்.

PICT3418மற்ற நாவல்களைவிட இந்நாவலில் தமிழவனின் படைப்புத்தன்மை தனிச்சிறப்பான ஒரு உலகைப் படைத்துச் செல்கிறது. நாவலின் பல காட்சிகளும், கதை சொல்லும் முறையும், பல வாக்கியங்களை தொடர்ந்து வாசிக்க இயலாமல் ஆழ்ந்த சிந்தனையைக் கோருகின்றன. சில வாக்கியங்களை விளக்கினால் அது ஒரு கட்டுரையாக மாறிவிடும் அடர்த்திக் கொண்டவையாக உள்ளன. கடும் உழைப்பையும் வாசிப்பையும் உள்ளடக்கியவை அவை. சான்றாக பக்.53-ல் வரும் ஒரு வாக்கியம் - ”ஒரு பெண்ணின் கையும் ஆணின் குறியும்”. இவ்வாக்கியத்தில் எதிர்பாலினமாகக் கட்டமைக்கப்பட்ட இரண்டு உடல்களின், உறுப்பின் பதிலீடு பாலியல் அரசியலின் முக்கியமான கூறுகளைச் சுட்டுவதாக உள்ளது. ஆண்குறி என்கிற அதிகாரத்தின் குறியீடு, பெண்ணின் கையாக பதிலீடு செய்கிறது. இது வெறுமனே பாலியல் பதிலீட்டுக் கருவி மட்டுமல்ல. அதாவது ஆண்குறியைவிட பெண்ணின் கை என்பது வளமையுடன் சமூக உழைப்புடன் உறவு கொண்டதாக உள்ளது. இப்படி பல வாக்கியங்கள் ஆழ்ந்த அவதானத்திற்குரியதாக இதில் எழுதப்பட்டுள்ளது.

இதுவரை தமிழில் தொடப்படாத ஒரு பிரதேசத்தில் பயணிக்கிறது நாவல்.  பாலியல் பற்றிய இருவேறுப்பட்ட உலகப்பார்வைகளின் தொடும் புள்ளி அது. முக்கியமாக கிழக்கைப்பற்றிய மேற்கின் கருத்தாக்கங்கள் குறித்து இதில் வரும் நீண்ட உரையாடல்களைச் சொல்லலாம். மேற்கு தன்னை எப்படி தேடி கிழக்கில் அடைகிறது என்பதைக் குறிக்கும் அந்த உரையாடல் வாசகங்களின் நுட்பம், தாந்ரீகம் பற்றிய தேடல் என்பதாக செல்கிறது. மேற்கால் தனது உடல் அல்லது மனம் அல்லது பாலியலை தேடும் பயற்சிப் பற்றியதான சித்திரிப்புத்தான் முக்கியமானதாக இந்நாவலின் எனது வாசிப்பு-பிரதியாக இருக்கிறது. இநநாவலை வேறு வேறு விதமாக வாசிக்க முடியும் என்றாலும், எனது குவிமையம் இதன் பாலியல் அரசியல் பற்றியதே.

பக்.181-ல் சந்திரனின் மனதால் உருவாக்கப்பட்ட மாக்தா கருதியதாக சொல்லப்படும் வாசகமான  “லியோன் ஒரு புதவிதமான ஐரோப்பியக் கலாச்சாரத்துக்காக இந்தியாவைத் தேடியவர். அது இந்தியாவுக்கு இன்று பயன்படாது. ஆனால் ஐரோப்பாவுக்குப் பயன்படும என்பது லியோனின் அடிப்படை எண்ணம் என்றாள்.”  அதில் இந்த தேடல் இந்தியாவிற்கு ஒத்துவராது என்பதைச் சொல்லும் புரிதல் முக்கியமானது. ஜீலியா கிறிஸ்த்தவா கூறியதுபோல ஐரோப்பா தனக்கான கடந்த காலத்தை அதாவது வேரைத் தேடத்துவங்கியுள்ளது. ஒருபடி மேலாக இந்நாவல் ஐரோப்பா தனது மனதை தேடத்துவங்கியுள்ளதை விளக்கிச் செல்வதாக உள்ளது. அது கிழக்கிலா? என்பது உரையாடலாகக் கொண்டு செல்லப்படுகிறது. அதை தமிழவன் தனது அனுபவ மற்றும் புரிதலின் எல்லைப் பரப்பிற்குள் ஒரு நாவல் எழுத்தாக மாற்றுகிறார். ஏனென்றால், ஹிட்லரின் படையெடுபப்பில், இரண்டாம் உலகப்போரின் பாசிசப் போக்கினால், ஐரொப்பா தனது அடிப்படை அறங்கள் குறித்து மீள்பார்வை செய்யப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.  இந்நாவலில் பக். 355-ல் சொல்லப்படுவதைப் போல 1939, செப்டம்பர் ஐரோப்பியாவை மாற்றிய ஒரு முக்கியமான புள்ளி. ஹிட்லரின் உருவாக்கம் மொத்த ஐரோப்பிய சமூகத்தின் அனைத்து அறங்களையும் கேள்விக்கு உட்படுத்தியது. நாகரீகம் அதன் உயர் மனப்பான்மை அத்தனையும் தூக்கியெறியப்பட்டது. இந்த குற்றஉணர்ச்சி நாவலில் வரும் ஐரோப்பிய கதாபாத்திரங்களின் ஆழ்மனக் கட்டமைப்பாக காட்டிச் செல்கிறது இந்நாவல்.

இந்நாவலில் பேசப்படும் முன்னுணர்வு பற்றிய வாசகங்கள் முக்கியமானவை. முன்னுணர்தல் என்பதன் வழியாக லியோன் என்கிற 32-வயதில் இறந்தவனை அவனது 60-வது வயதில் சந்திக்கும் சந்திரன், அவனது போட்டோவைப் பார்த்த பிறகே அவனை அறிகிறான். இசையை கேட்கும் நாம் அது முடிந்தபின்னும் அதனை மனதிற்குள் இசையாக உரணமுடியும் எனில், புகைப்படத்தில் பார்ப்பதற்கு முன்பாக ஒருவரை உணர்வது சாத்தியமில்லையா? என்கிற கேள்வி காலத்தின் முன்பின் மனநகர்வு பற்றிய ஒரு நுட்பமான புரிதலை முன்வைப்பதாக உள்ளது.

ஆதிவாசிகளுக்காக போராடிய அஷ்வினியின் காதலன் பிரதாப்பை எண்கவுண்டரில் கொல்கிறது போலிஸ். அதற்காக காவல்துறை அதிகாரியான தனது தந்தையை சுட்டுக் கொல்லும் அஷ்வினியின் செயலை சடங்காக விளக்கும் பகுதி முக்கியமான அவதானத்திற்குரியது. அதிகாரம் என்கவுண்டர் என்பதை ஒரு பலியிடல் சடங்கைப்போல நிகழ்த்தும்போது, அதனை எதிர்கொள்வது மற்றொரு பலிச்சடங்காக நிழ்கிறது. தனது தந்தையைக் கொல்வதன் வழி, காதல் என்கிற ஒருவித சடங்கை அழிக்க முனையும் தந்தைவழி அதிகாரத்தை தகர்க்கும் செயலாக அந்த குறியீட்டு நிகழ்வு நடந்துமுடிகிறது. வழக்கமாக தந்தைகள் வழியாக அடையாளப் படுத்தப்படும் தாய்களுக்கு மாறாக, இந்நாவலில் தாய்வழியாகவே தந்தைகள் அடையாளமாகிறார்கள். நாவலில் தந்தைகள் யாரும் இல்லை என்பது ஒரு முக்கியமான அவதானமாகும். விஜயாவின் தாய், அஷ்வினியின் தாய், சந்திரனின் தாய், மாக்தாவின் தாய், லிடியாவின் தாய் எல்லோரும் அன்பானவர்களாக புரிதல் உள்ளவர்களாக உள்ளனர். தந்தைகளுக்கு நாவலில் பிரத்யேகமான இடமோ, வெளியோ இல்லை. அஷ்வினியின் தந்தை அவளால் கொல்லப்படுகிறார். மாக்தாவின் தந்தை ஒற்றைப்படல் உள்ள சைக்கிளாக கனவுகளில் வந்து போகிறார். ஆணாகவும், பெண்ணாகவும் அல்லது கடவுளாகவும் உள்ள சந்திரன், சிவநேசன் தவிர எல்லா ஆண்களும் இறந்து போகிறார்கள், பியோத்தர் மனச்சிதைவடைகிறான். காரணம் இந் நாவலானது பெண்கள் பற்றிய பெண்களின் வேட்கைப் பற்றியதான ஒரு பாலியல் அரசியலை தனது ஆழ்தளமாக கொண்டிருப்பதே. . 

பாலியல் அரசியலின் முக்கியக்கூறான வேட்கை என்பது கீழ்திசை நாடுகளிலும், மேல்திசை நாடுகளிலும் எதிர் எதிரான செயல்களமாக இயக்கமடைகிறது. கீழ்திசை நாடுகளில் வேட்கை என்பது ஒரு ஆற்றலாக மாறுகிறது என்றால், மேற்றிசை நாடுகளில் ஒரு இன்மையை இட்டு நிரப்பும் பதிலியாக உள்ளது. இந்நாவலில் வரும் விஜயா, அஷ்வினி, அமலா போன்ற இந்தியப் பெண்களின் வேட்கை என்பது ஒரு ஆற்றலாக மாறி அவர்களை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்கிறது. ஆனால், அன்னா, மாக்தா, லிண்டா போன்றவர்களின் வேட்கை அவர்களது இன்மையை போக்கி இருப்பை அடையாளப்டுத்தும் ஒரு பதிலியாக செயல்படுகிறது. வேட்கையின் இந்த வித்தியாசம் இரண்டு பண்பாடுகளின் பாலியில் கட்டமைப்பையும் நுட்பமாக விளக்கிச் செல்வதாக உள்ளது.

நாவல் உடல் என்பதை ஒரு அறிதல் தளமாக முன்வைக்கிறது. நாவலில் வரும் புணர்ச்சிகள் பற்றிய பகுதிகள் அனைத்திலுமே, உடலை அறிவதற்கான வேட்கையும், வேகமும் மட்டுமே எழுத்தாகியுள்ளது. உடலை அறிதல் புணர்ச்சியின் வழியே சாத்தியம் என்பதும் ஐரோப்பிய பாலியல் உடலை ஒடுக்கிவிட்டதாலும், கீழ்திசைவியல் பாலியல் பற்றிய தந்திரயோகம் மூலம் உடலை பாலியல் வழி அறியமுடியும் என்பதாக நாவலின் முக்கிய உரையாடல் தளங்கள் நகர்த்தப்படுகிறது. நாவலில் வரும் இரண்டு முக்கிய புணர்ச்சிகளை ஒப்பிட்டால் இந்தவகை உரையாடலின் நுட்பமான தளத்தை புரிந்து கொள்ளமுடியும். விஜயாவிற்கும் சந்திரனுக்கும் இடையிலான குகைப்புணர்ச்சி. இதில் விஜயா சந்திரனை ஒரு கருவியாக்கி அதாவது ஆணுடலை ஒரு கருவியாக்கி தனது வேட்கையின் சுதந்திர வெளிப்படல் மூலமாக, தன்னுடலை அறிய முனைகிறாள். ஐரோப்பிய பெண்ணான மாக்தாவுடன் சந்திரன் புணர்ச்சியில் ஈடுபட முனையும்போது, அவனது வேட்கை கனவில் ஒருவகையாகவும், இயல்பில் வேறுவகையாகவும் அமைகிறது. மாக்தா கிழக்கத்திய கருப்பு உடலான அவனது உடல் வழியாக தனது உடலை அறியமுனைவதாக எண்ணுகிறான். அப்புணர்ச்சி முழுமையடையாமல் விலகிவிடுகிறான். சந்திரனின் ஆண்குறி பற்றிய பல கதையாடல்கள் சொல்லப்படும் இந்நாவலில், சந்திரனின் புணர்சிகள் மற்றும் வேட்கைகள் கனவுகளாகவும், நிஜத்தில் பெண்களின் மீதான வேட்கையுடன் அதனை நிறைவேற்றிக் கொள்ளாமல் விலகிச் செல்பவனாகவும் உள்ளான். சிவப்பு ஊற்றைக்காட்டும் சிறுபெண் துவங்கி நாவலில் வரும் பெண்கள் பலரும் சந்திரன் மீது பாலியல் வேட்கை கொள்கிறார்கள். சந்திரன் ஆணாகவும், பெண்ணாகவும் மாறி மாறி அமையும் ஒரு விளையாட்டாக நாவலின் கதையாடல் அமைகிறது.  

இயந்திரமாகிவட்ட இன்றைய உடலை, அதன் இயல்புநிலையில் உணர புணர்ச்சியின் அதி சாகசங்கள் தேவைப்படுவதையும், அதனை இந்திய தாந்ரீகம் முயன்றிருப்பதையும் அறிந்து, அதனை நோக்கிய தேடலை செய்த லியோன் ஐரோப்பியாவின் பாலியலை மறுகட்டமைப்பு செய்வதற்கு முயல்கிறான். ஐரோப்பாவின் ஒடுக்கப்பட்ட வேட்கை எதிர்மறை ஆற்றலாக மாறி வெளிப்பட்ட வடிவமே பாசிசம். நாஜிகள் கம்யுனிஸ்டுகளைவிட பாலியல் தொழிலாளிகளான பெண்களிடம் அதிகம் அச்சம் கொண்டிருந்ததை சொல்லும் பக்.346-ல் வரும் பியோத்தர் பாட்டியின் தோழி மாட்டின் உடலும், மனித மனமும் கொண்ட ஒரு காளை மனிதனுடன் புணர்ச்சிக் கொள்கிறாள். அப்புணர்ச்சியில் வெளிப்படும் மிருக இச்சை என்பது ஐரோப்பிய உடல்களின் பாசிச எந்திர மனப்போக்காக மாறியிருப்பதை சுட்டுகிறது நாவல். பிறகு நாஜிப்படைகளுக்கு எதிராக செயல்படும், அவளது பெண்குறியில் வெடிகுண்டு வைத்து தகர்க்கிறார்கள் நாஜிப்படையினர். பாசிசம் என்பது ஓழுங்கற்ற உடல்கள் மீதும், பாலியல் மீதும் பேரச்சம் கொண்டிருந்தது. அந்த பாசிசத்திலிருந்து விலகிச் செல்ல முனைவதற்காக வேட்கையை வெளிப்படுத்தி அதனை ஆற்றலாக மாற்றிக்கொள்ளும் தந்திரமாகவே, இந்திய தாந்ரீகத்திடம் தஞ்சம் அடைகிறான் லியோன். அதன் ஒரு உச்சமாக கிறித்துவ கத்தோலிசத்தால் அவன் சாத்தான் வழிப்பாட்டாளனாக கருதப்படுகிறான். ஒரு மதத்தின் கடவுள் பிற மதத்தின் கடவுளை சாத்தானாகவே அறிவிக்கிறது. ஆனால் எல்லா மதக் கடவுள்களும் பாலியலை சாத்தானாகவே கருதுகின்றன என்பது முக்கியம். பாலியல் என்பது உடல் மற்றும் அதன் வேட்கை சார்ந்தது என்பதால், எல்லா மதங்களின் ஆழ்தளத்தில் பாலியல் பற்றிய அச்சமும், அதனை கண்காணித்து கட்டுக்குள் வைப்பதன் மூலம் உடல்களை தனது இயந்திரவியலுக்கான அரைபடும் மூலப்பொருளாக தக்கவைத்துக் கொள்ளும் செயலும் நடைபெறுகிறுது. அதனால்தான் அடக்கமுடியா பாலியல் இச்சையை சாத்தானாக கணிக்கின்றன மதங்கள்.

கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையிலான இடைவிடாத போர் உடல்-பாலியல் தளத்திலேயே நடத்தப்படுகிறது. உடல்கள் மீதான கடவுள்கள் மற்றும் சாத்தான்களின் விளையாட்டு ஆதிமனிதனின் “ஆதிபாவம்“ துவங்கி இப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கத்திய கடவுளான பிராமண சிவநேசமும், மேற்கத்திய கடவுளான கத்தோலிக்க லியோனும் நாவலில் பின்னணியில் முக்கிய பாத்திரங்களாக உலா வருகின்றனர். இந்த இரு கடவுள்களும் இரண்டாம் உலகப்போர் மற்றும் உலக மயமாதலின் விளைவாக திசைமாறி இடம் மாற்றம் அடைவதையும் நாவல் தனது கதையாடலின் வழியாக முன்வைக்கிறது. அதாவது பிராமண சிவநேசம் ஐரோப்பியாவிலும், கத்தோலிக்க லியோன் இந்தியாவிலும் தஞ்சம் அடைகின்றனர். சிவநேசம் பிராமணராகவும், ஐரோப்பியாவின் நவீன கடவுளாகவும் சொல்லப்படுவதில் ஒரு முக்கியமான அரசியல் முன் அனுமானம் உள்ளது. இந்தியாவிலிருந்து பல நூற்றாண்டுகளாக சமூக அதிகாரம் செய்துவந்த “பிராமணத்துவம்“ என்கிற “கடவுள் தன்மை” புலம்பேயர்ந்து கொண்டிருப்பதற்கான குறியீடே அது. 

சுயபால் புணர்ச்சியாளனான லியோன், லெஸ்பியனோ என தன்னையே சந்தேகிக்கும் மாக்தா, அவளது தந்தையான ஒற்றைப்படல் உள்ள சைக்கிள் (இது துண்டிக்கப்பட்ட ஆண்குறியின் ஒரு குறியீடாக உள்ளது எனலாம்) ஆகிய மூவரும் ஒரு தடைசெய்யப்பட்ட வேட்கையின் வெளிப்படுகளாகவே உள்ளனர். மாக்தாவின் ஆழ்மனதில் உள்ள வேட்கை தந்தையுடன் ஆன புணர்ச்சிப் பற்றியதாக இருப்பதால் அவளோடு உறவு கொள்பவர்களிடம் அது ஒரு லெஸ்பியன் வேட்கையாக தெரிகிறது. லெஸ்பியன் வேட்கை என்பது ஆணிணால் முழுமையாக்க முடியாத ஒன்று என்பதால், மாக்தாவின் வேட்கையில் உள்ள அந்த இயல்பின்மை சுட்டப்படுகிறது எனலாம். சந்திரனிடம் உறவு கொள்ள முனையும் அவள், இந்த தந்தைவழி உறவினால் ஈர்க்கப்பட்டவளாகவும், அதன் குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடாக புணர்ச்சியை முழுமையாக செய்யமுடியா நிலைக்கு ஆளாகிறாள். உண்மையில்  பிரதி தரும் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி மாக்தா ஒரு கற்பனையான எழுத்துருதான். அதாவது, அவள் லி்ண்டாவின் இலக்கிய இரட்டையாக உருவாக்கப்பட்ட கற்பனை உரு. அதாவது, லியொனின் தங்கையான லிண்டாதான் மாக்தாவா பிரதியால் இலக்கிய இரட்டையாக மாற்றப்படுகிறாள். பிரதி மௌனிக்கும் பகுதிக்குள் ஒடுக்கப்பட்டிருக்கும் வேட்கை என்பது ஒருவகை விலக்கப்பாலியல் வேட்கைதான் (இன்செஸ்ட்). லிண்டா தன் அண்ணன் லியோன் மீது கொண்ட இச்சையை இந்தியனான சந்திரன் வழியாக தீர்க்க முனைகிறாள் மாக்தாவாக. லிண்டா மாக்தாவாக கூடுபாய்கிறாள் எனலாம். லியோனுக்கும் லிண்டாவிற்கும் இடையிலான உறவு தந்தை மகள் மற்றும் அண்ணன் தங்கை என்கிற சகோதர உறவு. பின்னால், இந்த உறவிலிருந்து முற்றிலுமாக விலகி சாத்தானிடமிருந்து, கடவுளான சிவநேசத்திடம் தஞ்சம் அடைகிறாள் லிண்டா.

லூயி புனுவல் தனது புகழ்பெற்ற படமான 'The Obscure Object of Desire' ல் Conchita என்கிற நாயகி பாத்திரத்தின் இரண்டு மன உணர்வுகளை சித்தரிக்க இரண்டு வேறுபட்ட நடிகைகளைப் பயன்படுத்தியிருப்பார். காமவெறி கொண்டவளாக, பொய் சொல்பவளாக உள்ளபோது ஒரு நடிகையும், காதல் கொண்டவளாக, உண்மையானவளாக உள்ளபோது ஒரு நடிகையும் நடித்திருப்பார்கள். கதைப்படி அவர்கள் ஒரே பாத்திரம்தான். இது ஒருவகை இலக்கிய இரட்டை உத்திதான். காமவெறியுடன் சண்டையிட்டுவிட்டு திரைச்சீலைக்குள் புகுவது ஒரு நடிகை, காதலுடன் அடுத்த நொடியில் திரைச்சீலையிலிருந்து வெளிவருவது மற்றொரு நடிகை. இந்தவகையான அதியதார்த்த உத்தியை அப்படம் முழுக்கவும் பயன்படுத்தியிருப்பார் புனுவல். அதாவது change blindness என்கிற ஒருவகை உளவியல் பார்வைக் கோளாறு, பார்க்கும் காட்சியில் உள்ள மாற்றங்களை உணரச் செய்யாமல் செய்துவிடும். இப்படத்தில் இந்த நடிகையின் மாற்றம் என்பது அதனை சோதிப்பதற்கான ஒரு உத்தி. அதேபோல, இந்நாவலில் வரும் பாத்திரங்களின் சித்தரிப்புகளில் ஒரே பாத்திரம் இரட்டைநிலையில் இரண்டு பாத்திரமாக மாறிவருகிறது. இது ஒருவகை இலக்கிய இரட்டை எனப்படும் கதை உத்தியாகும். இந்த மாற்றத்தை மறைப்பது பிரதியின் மொழி மற்றும் கதையாடல் மட்டுமின்றி நாவலை இரத்தமும் சதையுமான மனிதர்களின் கதையாக நாம் வாசிப்பதில் உள்ள நமது பழகிய உளவியல் கோளாறும்தான்.

இங்கு இலக்கிய இரட்டை என்கிற கருத்தாக்கத்தை விளங்கிக் கொள்வது இந்த நாவலை இன்னும் நுட்பமாக புரிந்துகொள்ள உதவும். எல்லா மதங்களிலும் உள்ள அடிப்படையான முரணான நன்மை/தீமை என்பதிலிருந்து உருவாகும் இரண்டு மன அமைப்புகளின் உடல் வடிவமே இரட்டைகள் எனலாம். ஒரு உடலின் இரணடு மன உணர்வுகள் இரண்டு பாத்திரங்காளக மாறிவரும். சான்றாக தமிழ் படங்களில் வரும் இரண்டுவேட கதாநாயகன்கள். நல்ல எம்ஜியார்/கெட்ட எம்ஜியார், வீரன்/கோழை, ஏழை/பணக்காரன் இப்படி. இவை எல்லாம் ஒரே மன அமைப்பில் உள்ள முரண்கள். தமிழில் மௌனியின் சிலகதைளில் இந்த உத்தி கையாளப்பட்டிருக்கிறது. அவரது புகழ்பெற்ற கதையான “மனக்கோட்டை“-யில் வரும் சங்கரன்/சேகரன் என்பவர்களும் இந்தவகையான இரட்டைகளே. சுமி என்கிற தங்கை மீதான அண்ணன் சங்கரனின் வேட்கையை, சேகரன் வழியாக நிறைவேற்ற முனையும் இரட்டைகள் பற்றிய கதையாடலே அக்கதை. இவ்வாறு, இலக்கியத்தி்ல் ஒடுக்கப்பட்ட மன உணர்வுகள் இரட்டைகளாக இரண்டு வித்தியாசமான பாத்திரங்களாக படைக்கப்படுகிறது. மேற்றிசை சிந்தனையில் மனிதனின் உள்ளார்ந்துள்ள பிரக்ஞை  நன்மை, தீமை என பிளவுபட்டே உள்ளதாக நம்பப்படுகிறது. கிறித்துவ சிந்தனையின் நன்மை, தீமை என்கிற வேரிலிருந்து கிளைத்ததே இச்சிந்தனை. வெளிப்படையாக மனிதன் மரியாதைக்குரியவனாக இருந்தாலும் உள்ளார்ந்து மிகவும் காமவெறிக் கொண்டவனாக உள்ளான் என்கிற அடிப்படையில்தான், காமத்தை ஒழுங்கமைப்பதற்கான பல தத்துவ ஆன்மீக சிந்தனைகள் படைக்கப்பட்டன. மேற்கத்திய பாலியல் கருவிகளின் கட்டமைப்பில், பாலியல் வேட்கை என்பது மிருக இச்சையாகவே கருதப்பட்டு அது நாகரீகம் என்ற பெயரால் ஒழுங்கமைக்கப்பட்டது. 

ஆக. எல்லா மதங்களினதும் அடிப்படை ஊகம் இததான், மனிதன் அடிப்படையில் மிருக இச்சை (அதை அப்படி சொல்லாம் என்றால்) கொண்டவன் என்பதே. அதனால் அதனை அடக்கி நாகரீகம் என நல் வழிப்படுத்த முனைந்தது ஐரோப்பிய சமூகம். இந்த ஒழங்கமைப்பே ஐரோப்பிய ரொமாணடிசிசத்தால் அச்சமூகத்தின் உள்ளுறை ஆற்றலாக மாறியது. அதைதான் லியோன் ஐரொப்பிய பாலியல் அடக்கப்பட்டுவிட்டது, அதை மீண்டும் உயிர்பிக்கும் சக்தி தந்திரயோகத்தில்தான் உள்ளது என கீழ்திசை நாடுகளை தேடிச் செல்வதாக நாவல் சுட்டுகிறது.

இதே லியோனின் இலக்கிய இரட்டையாக வருபவர்தான் கீழ்திசை நாட்டைச்  செர்ந்த கும்மாங்குத்து எனும் சிவநேசம். நாவலின் கடவுள்/சாத்தான் இரட்டையாக இவர்கள் இருவரையும் சொல்லலாம். சந்திரனிடம் இவர்கள் இருவரும் பேசுகிறார்கள். ஒருவர் நிறமற்ற குரலாலும், மற்றொருவர் மஞ்சள் குரலாலும். சந்திரன் இந்த மஞ்சள் குரல் என்பதை தனது பொதுபுத்தி சார்ந்த பாலியல் குரலாக உணர்வதையே பிரதி இங்கு நுட்பமாக சுட்டுகிறது எனலாம். அதேபோல் சிவநேசம் உங்களுக்குள் நீலம் புகுந்துவிட்டது என்கிறார். இந்த நீலம் என்பது ஒருவகை காமஇச்சை என்கிற சாத்தானின் குறியீடுதான். காம இச்சை வரும்போது சிவநேசம் வந்து சந்திரனை பல இடங்களில் எச்சரிக்கைப் படுததுகிறார். சிவநேசம் சந்திரனை சாத்தானிலிருந்து ஆற்றுப்படுத்துபவராகவும், லியோன் சந்திரனிடம் ஒருவித சமூக சிந்தனையைத் தூண்டுபவனாகவும் வருகிறார்கள். லியோனை முதன்முதலாக சந்திரன் சந்தித்த பின்  அந்த இயல் முழுக்க மாக்தாவுடன் உறவு கொள்ளும் ஆழ்மன வேட்கையுடன் இருப்பதை பிரதியானது அவளது உடலை நுட்பமாக கவனித்து வர்ணிப்பதன் மூலம் தடம் காட்டிச் செல்கிறது. கல்லிற்குள் நுழைய முடியுமா? என்கிற சந்திரனின் கேள்விக்கு கல்லுக்குள் நுழையலாம் என்கிற மஞ்சள் குரலின் பதில் என்பது மாக்தாவுடன் அவனது புணர்ச்சிக்கான ஒரு முன் அனுமான வாசகம் எனலாம். சந்திரனை மாக்தாவுடன் உறவு கொள்ள தூண்டுவது இந்த சாத்தானின் குரல்தான். 

அதேபோல் சந்திரன் மற்றும் அன்பழகன் என்கிற ராஜேஷ், இருவரும் ஆண்மை/ஆண்மையின்மை என்கிற இரட்டைகளாக உள்ளனர். சந்திரனின் ஆண்மைபற்றி, கதையாடல் பெரும் மௌனம் சாதிப்பது, இந்த இரட்டைகளின் இயக்கத்திற்கானதாகவே கருத இடமுள்ளது. விஜயா என்கிற களத்தின் மீதான போராக இவர்களது வேட்கைகள் மாறி அதற்காக அவள் பலிகொள்ளப்படுகிறாள். அவளால் யார் ஹீரொவாகிறார்கள் என்பதன் அடிப்படையில் இந்த மன இயக்கங்கள் நிகழ்கிறது. பெண்ணாக இருப்பது ஆணாக ஒருவன் தன்னை அறிவதற்கான முன்நிபந்தனை என்பதுடன், அதுவே அவளை அடிமை கொள்வதற்கானதாகவும் மாறுவதாக கதையாடல் நகர்த்தப்படுகிறது. தற்கொலை என்பது சமூகத்தின் இயல்பு நிலையை காப்பதற்காக தனிமனிதன் தன்னை அர்ப்பணிக்கும் பலிச்சடங்குதானே?

மற்றொரு இரட்டையாக இருப்பவர்கள் விஜயா/அமலா. இந்த இரட்டை கோழை/வீரம் என்பதாக உள்ளனர். விஜயா இந்திய இலட்சியப் பெண்ணாகவும், அவளுக்குள் ஒடுக்கப்பட்டு கிடந்து வெளிப்படத் துடிக்கும் சுதந்திரப் பெண் என்கிற இயல்பான அடையாளமாகவும் அமலா இருக்கிறாள். அமலா ஹீரோக்களை உருவாக்க முடியாதவள். விஜயாவால் மட்டுமே ஹீரோக்களை உருவாக்க முடியும். அதனால்தான், அமலா பெண்ணாகவும், விஜயா மணைவியாகவும் இருக்கிறார்கள். இவர்கள் இரட்டையாக மட்டுமின்றி கூடுவிட்டு கூட பாய்ந்துவிட்ட உடல்களாக உள்ளனர். அதாவது விஜயாவின் இறந்த இடத்திலிருந்து அமலா என்கிற எழுத்துரு முளைக்கிறது. தற்கொலைத்த விஜயா அமலாவின் உடலுக்குள் புகுகிறாள். இதனை பிரதி அமலாவின் துண்டிக்கபட்ட கட்டைவிரலை பார்க்கும் சந்திரன், அவளை அம்மணமாக பார்ப்பதாக அவள் சொல்வதிலும், விஜயா சிறுவயதில் தனது கால்களை பிறர் பார்ப்பது அம்மணமாக தன்னை பார்ப்பதற்கு ஒப்பும் என்பதை சொல்வதிலும் இணைப்பதைக் காணலாம்.  அமலாவை பார்க்காமலேயே சந்திரன் அவளது குணங்களை ஊகிக்கும் பகுதியும், சந்திரனைப் பார்த்த மாத்திரத்தில் அவன் மீது அமலா தனது இச்சையால் பாதிக்கப்பட்டு, கட்டைவிரலை நன்றாக பாருங்கள் என அனுமதிப்பதும், அதாவது தன்னை நிர்வாணமாக பார்க்க அனுமதிப்பதும் பிரதியில் மிகவும் நுட்பமாக காட்டப்படுகிறது. கடைசி இயலில் சந்திரன் அமலாவை சந்திப்பதும் தனது காதல் வேட்கையை வெளிப்படுத்த முடியாமல் அவளது விரலற்ற காலைப் பார்த்து கிளர்ச்சி அடைவதும் இதனுடன் இணைந்து நோக்கத்தக்கது. அமலா விஜயாவின் உயிர்ததெழுந்த மற்றொரு உடல். விஜயாவின் மரணத்திற்காகவே அவள் அன்பழகன் என்கிற ராஜேஷை பின்தொடர்வதும், இறுதியில் சந்திரனிடம் வந்து அடைக்கலமாவதும் கதையாடலின் ஒரு முக்கியத் தடம் எனலாம்.   அமலா சந்திரன்மீது தீவிர காதல் கொண்டவளாக இருப்பது இந்த  உள்ளார்ந்துள்ள விஜயாவின் உள்ளருவின் ஒரு வெளிப்பாடுதான்.           

ஆதிவாசிகளுக்காக பாடுபடும் புரட்சிகர இளைஞனான பிரதாப், அன்பழகன் போன்ற அரசியல் வாதிகளுக்காக போலிஸால் எண்கவுண்டர் செய்யப்படுகிறான். அந்த அன்பழகனை ஆதிவாசிகள் பலி வாங்கிவிடுகிறார்கள். இதில் அஷ்வினியின் காதலான புரட்சிகர எழச்சியில் பாதிப்புறும் பிரதாப்பின் இரட்டையாக வருபவன் அன்னாவின் காதலன் பியோத்தர். இந்த இந்திய இளம் ஜோடிகளின் ஒரு ஐரோப்பிய வடிவம்தான் அவர்கள். இந்தியாவில் உள்ள இந்த புரட்சி உணர்ச்சி என்பது ஒரு மனநிலைப் பிறழ்ச்சியாக ஐரோப்பாவில் வெளிப்படுகிறது எனலாம். அஸ்வினியின் கடிதமும் அன்னாவின் கடிதமும் ஒப்பு நோக்கினால் இவை ஒருவரால் வேறு இடச்சூழலில் எழதப்பட்ட கடிதங்கள் என்பதை அறியலாம். இக்கடிங்களில் உள்ளார்ந்து வரும் பாலியல் இச்சை என்பது சந்திரனனின் மீதானதாக இருப்பதை அறியலாம். ஆக, இந்தியாவிலிருந்து இந்த ஜோடியை ஐரோப்பாவிற்கு நகர்த்தினால் அவர்கள் பெறும் உறுமாற்றமே அது. சந்திரன் சரளமாக ஜோக் அடித்து, தன்னை இளமையானவனாகக் கருதி பேசுவது இவ்விரு பெண்களிடம்தான் என்பது பிரதி நமக்குக் காட்டும் தடம். நாவலில் அஷ்வினியும் அன்னாவும் தங்களது கடிதத்திற்கு பின்பு மறைந்து போகிறார்கள். அஸ்வினி-சந்திரன், அன்னா-சந்திரன் என்கிற இந்த உறவு எத்தன்மை வாய்ந்தது? அது என்னவாக சமூகத்தி்ல் அமையமுடியும்? என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. அன்னா தனது கடிதத்தில் குறிப்பிடும் இந்த வரிகள் முக்கியமான சிந்தனையை தூண்டுபவை. ”இது புது உறவு. இத்தனை நூற்றாண்டுகளில் மனிதகுலம் புதிய உறவை ஸ்தாபிக்காதது பரிதாபம் என்று நினைக்கிறேன்.”  ஆம், மனித குலம் தோன்றிய காலம் முதல் குடும்பம் என்கிற அமைப்பைத்தாண்டி என்ன புதிய உறவுகளை உருவாக்கி உள்ளது? ஹோமோ, லெஸ்பியன் போன்ற மாற்றுக் குடும்ப உறவுகளைக்கூட சில அரசுகள் “சாபவிமோசனமாக“ அனுமதித்தாலம், சமூகம் “பாபவிமொசனமாக” அனுமதிப்பதில்லைதானே?  

பல எழுத்துமுறைகளால் கட்டப்பட்டுள்ள இந்த நாவல் பல கதையாடல்களின் வழியாக ஒரு பெரிய நிலப்பரப்பை நம்முன் நிறுத்துகிறது. ஒருவகையில் உலகமயமயாதலை முதலாளித்துவத்திற்கு எதிரான முறையில் கீழ்நிலையிலிருந்து செய்யும் கம்யுனிஸ சர்வதேசியவாதம் போன்றது. இது கம்யுனிஷம் இழந்த ஆன்மாவை மீட்கும் முயற்சி. இங்கு பகுத்தறிவின் உச்ச வன்முறையை செயலிழக்கச் செய்யும் பணியாக, பல சம்பவங்கள் எழுத்தாக்கப்பட்டுள்ளன. “வறட்டு நாத்திகவாதம் பல புராதன ரகசியங்களை பகுத்தறிவு கொண்டு முடக்கியது. (பக்.-42.)“  எனக்கூறும் இந்நாவல் வாசகங்கள் மிகவும் திட்டமிட்டமுறையில் இச்சம்பவங்களை எழுத்தாக்கியுள்ளது. குறிப்பாக தாந்ரீகம் மற்றும் முன்னுணர்வு ஆகியவை பற்றி வரும் சம்பவங்கள். நெருப்புணரும் பர்மியத்தாயும் அந்நிய வாசம் நுகரும் ஆதிவாசிகளும் என நிறைய பேசலாம்.

ஆணைக் கட்டமைக்கும் பல பெண்கள் பற்றியதான இந்த நாவல். ஆண் அல்லது ஆண் மையம் என்பது என்ன? என்கிற கேள்வியை எழுப்பிச் செல்கிறது. ஆண் பெண்ணை உருவாக்கியதன்மூலம் தன்னை உருவாக்கிக் கொள்ளும் வினைகள் பற்றியதாக உள்ளது. சந்திரனை உருவாக்குபவர்கள் இந்நாவலில் வரும் விஜயா, அஷ்வினி, லிடியா, அன்னா, மாக்தா மற்றும் பிற அம்மாக்கள்தான்.  முக்கியமாக சந்திரனின் மணைவி விஜயாவின் தம்பி பிரதாப்பின் காதிலியான அஷ்வினி ஒரு விலக்க முடியாத பிம்பமாக மாறிவிடுகிறார். அதேபோல் மாக்தாவும். பர்மியமுகம் கொண்ட தாய் இந்நாவிலின் ஒரு முக்கியப் பாத்திரம்.  மற்றும் லியோனின் அந்த மஞ்சள் குரல்.

இந்நாவிலி்ல் நுட்பமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 1. குலசிங்கத்தின் காதலியுடனான இறுதி உரையாடல். அப்பெண்ணின் அந்த முதிர்ச்சி.. அதிர்ச்சிகளை உருவாக்கிய ஒரு காட்சி. பென் நிர்வாணம் என்பது எதிர் கொள்ளப்படாதவரைதான் காமம், எதிர்கொண்டால் ஏற்படுவது பதற்றம்தானே? அந்தப் பதற்றத்தின் குரல்தான் தாய்தெய்வ வழிபாடு மற்றும் தாந்ரீகம் எல்லாம். அச்சிறு ஈழப்பெண் தனது மார்புகளை அவனுக்கு வெளிப்படு்தி தரும் காட்சியில் ஏற்படும் பெண்மையின் புரிதல் அற்புதமானது.  2. குகையில் நடைபெறும் இரண்டில் இரண்டாவது புணர்ச்சி. அங்கு ஆண் என்பவன் கருவியாக மாறும்நிலை மிகச்சிறப்பாக வந்துள்ளது. 3. பியொத்தரின் தாய் அவளது கணவனால் ஆர்கஸம் வருவதற்கு முன்பாக அவளை பலிவாங்கும் வண்ணம் விட்டு விலகிப்போவதும், அவள் அதற்காக எரிச்சலுற்று தனது உடல் மற்றும் மனவாதைகளை வெளிபபடுத்துவதும் பெண் பாலயில்பற்றிய முக்கியமாக அவதானங்களைத் தரக்கூடியவை. வதைத்தலிதம் (சாடிஸம்) என்கிற ஆணிய அதிகாரத்தின் வழியாக பெண்ணின் பாலியல் நிராகரிக்கப்படுவதை சுட்டும் ஒரு கதையாடல் அது.

இந்நாவல் பாலியல் அரசியல் பற்றிய பல நுட்பங்களைக் கொண்டதாக உள்ளது. அதற்குள் பிரதியின் மொழி தயங்கி சொல்லாமல் விட்டவை அதிகம் என்று நினைக்கத் தோன்றுகிறது. பிரதி சமூகத்தின் எழுதுதல் என்கிற கண்காணிப்பு எந்திரத்தால் பல இடங்களில் கட்டுப்படுத்தப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் மொழியையும், கதையாடலையும் சிதைத்து பாதியில் மௌனமாக விட்டுவிடுகிறது. விஜயாவுடன் ஆன குகைப்புணர்ச்சியும் மார்த்தாவுடன் ஆன கனவு நிலைப் புணர்ச்சியும் வேறுபட்ட பண்பாட்டில் விளைந்த மற்றும் விழைந்த இரு உடல்கள் பற்றிய ஒப்பிடலுக்குரியவை. தவிரவும் இரண்டு முக்கியப் பண்பாடுகளின் உடல் மற்றும் வரலாற்று உரையாடலாக நகரும் இந்த நாவல் ஒரு முக்கியமான இடைவெளியை இட்டு நிரப்ப முயல்கிறது.

நாவலின் எழுத்துநடை மிகத்துல்லியமானதாக உள்ளது. சந்திரன் தங்கியிருக்கும் விடுதயிலிருந்து அந்த மால்களுக்கு ஒரு நடை போய்வந்துவிடலாம். அந்த அளவிற்கு அசாத்திய வர்ணிப்பு ஓவியங்கள் பற்றிய உரையாடல் எல்லாம் சேர்ந்து நாவலை ஒரு சுய அனுபவமாக மாற்றுகிறது. அஸ்வினி பேசுவது சந்திரன் பேசுவதேபோல் உள்ளது. பாத்திரங்களின் மொழியில் அல்லது குரலில் சில சிக்கல்கள் இருப்பதாகப் படுகிறது. பாததிரங்களக்கான தனித்தவமான மொழிநடை அல்லது பேச்சுப்பாணி அமையவில்லை. எல்லா பாத்திரங்களும் ஒரே குரலில் பேவதான ஒரு தோற்றம் ஏற்படுகிறது. அஸ்வனி சில இடங்களில் சந்திரனாக மாறுவதும் குறிப்பாக ஒரே கனவைக் கானுதல் போன்றவை. நாவல் ஐரோப்பா அதிமனிதனைத் தேடுகிறது என்பதை அன்னாவின் கடிதம் வழியாக வெளிப்படுத்துகிறது.  இந்த அதிமனிதன் என்பவன் நீடஷேயிஸ அதிமனிதன் எனலாம். கிழக்கத்தியம் நோக்கிய தேடலில் உள்ள லியோன்தான் அந்த அனிமனிதனா? அல்லது “நடுவில் புகுந்து எதுவும் செய்யாதீங்க” என்று இருக்கும் நிலையைக காப்பாற்ற முனையும் சிவநேசமா?  கடவுள் இறந்துபோனதை அறிவித்த நீட்ஷே அதிமனிதனின் வருகை பற்றியும் தேவை பற்றியும் கட்டியங் கூறினார் என்றால், அந்த அதிமனிதன் மற்றொரு கடவுளாகவோ தேவதூதனாகவோ மாறும் நிலையை இந்த நாவல் முன்வைக்க முனைகிறதோ என்று தோன்றுகிறது.

நூல் பற்றிய குறிப்புகள் -  வார்ஸாவில் ஒரு கடவுள் -  தமிழவன் – வெளியீடு – உயர்மை பதிப்பகம் – ஆண்டு – டிசம்பர் 207 – விலை 275.00 ரூ.

- ஜமாலன். 25 ஜீன், 2009.
-----------



நாகார்ஜீனின் “நளிர்“ – விமர்சனக் கூட்டம்

நண்பர் நாகார்ஜீனனின் சமீபத்தில் வெளிவந்த ”நளிர்“ என்கிற நூலின் விமர்சனக் கூட்டம் சென்னையில் அக்டேபார்-2 வெள்ளியன்று நடைபெற உள்ளது. அய்யப்ப மாதவன் அவர்களால் மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட அழைப்பிதழ் கீழே உங்கள் பார்வைக்கு. சென்னை நண்பர்கள் இக்கூட்டத்தில் பங்கு பெற்று பதிவிட்டால் எங்களைப்போல வெளியில் இருப்பவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாகும்.  நண்பர்கள் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

உரையாடுபவர்கள்  - பேரா. வீ. அரசு, முனைவர் தமிழவன், திரு. சண்முகம், திரு. வாசு மற்றும் நாகார்ஜீனன்

இடம் சிற்றரங்கம், தேவநேய பாவாணர் நூலகம், அண்ணா சாலை, சென்னை-6

நேரம் காலை 10 மணி, வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2, 2009

 nalir-invite-revised

அன்புடன்

ஜமாலன். – 30 செப்டம்பர் 2009.


கொலைகளும் தற்கொலைகளும் நிறைந்த கொடுங்கனவாய் மாற்றப்பட்ட தமிழீழம்

இனியொரு இணைய இதழில் வெளிவந்த எனது கட்டுரை இங்கு மீள்பதிவிடப்படுகிறது.

“எங்களை உள்நாட்டில் இடம் பெயர்ந்த மனிதர்களாக பார்க்கவில்லை உள்நாட்டில் இடம் பெயர்ந்த கைதிகளாகவே பார்க்கிறேன். முன்பு பிரபாகரன் (LTTE தலைவர்) கட்டுப்பாட்டில் இருந்த சிறையில் இருந்தோம். இப்போது அரசாங்க கட்டுப்பாட்டு சிறையில் இருக்கிறோம்.” – இலங்கையில் உள்ள அகதிமுகாமில் 3 மாதங்களாக மணைவி மற்றும் பெண் குழந்தையுடன் பிடித்துவைக்கப்பட்டுள்ள பிரேம்குமார் என்பவர் மனித உரிமை ஆணையத்திடம் கூறியது.

(Sri Lankan Government Stalls On Release Of Tamil Detainees – By Sarath Kumara http://www.countercurrents.org/kumara040809.htm)

“மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.”

- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் – நவம்பர் 27 2008 மாவீரநாள் உரை.

ar1பரவலாக எழுதப்படும் ஈழம் பற்றிய எழுத்துக்களில் புலி ஆதரவு-எதிர்ப்பு உரையாடலை (உரையாடல்கூட அல்ல விவாதத்தை) ஒரு நிரந்தரப் பத்தியாக போட்டுவிடலாம் என்று தோன்றும் அளவிற்கு பேசி பேசி சலித்துவிட்டது. சமீபகாலங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்ட ஈழம் குறித்த எழுத்துக்களை வாசித்தால், நாம் எதிர்கொள்ளும் ஒரு அலுப்புட்டும் பிரச்சனை புலி-ஆதரவு எதிர்ப்பு நிலைபாடுகள். இதற்குள் உள்ள அரசியலை நுட்பமாக அவதானித்தால் தெரியும், புலிகளும், அரசும் என்ன சாதிக்க விரும்பினார்களோ அதற்கு எல்லோரும் பலியாகி உள்ளோம் என்பதுதான். அதாவது “தமிழீழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் தமிழீழம்” என்கிற “நெடுமாறன் நிலைப்பாடு”-தான் அது. தமிழகத்தில் புலிகள் மீது ராஜிவ் கொலைக்கு பிறகு ஏற்பட்ட மனவிரிசலை சமன் செய்ய நெடுமாறன் தனது புலி ஆதரவு நிலைபாட்டால், தமிழீழப் போராட்டத்தையே புலிகளின் போராட்டமாக அல்லது புலிகளுக்கான போராட்டமாக மாற்றிவிட்டார். ஒருவகையில் அளப்பறிய முறையில் இதனை விடாது பல தொடர் அரசு ஒடுக்கமுறைகளுக்கு மத்தியில் அவர் செய்து வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக தமிழீழம் என்கிற சொல்லாடல் மாறி புலிகள் என்கிற சொல்லாடலாக வெளிப்படத் துவங்கியது. ஒருகட்டத்தில் தமிழீழம் என்பதே புலிகள் என்கிற அமைப்பு குறித்த நிலைப்பாடாக மாறிப்போனது. இதற்கான புறச்சூழல்களையும் புலிகள் தங்களது ஆள் மற்றும் ஆயுத பலத்தின் மூலம் ஆரம்பம் முதல் உருவாக்கி வந்தார்கள். தமிழீழத்தின் கனிந்து வந்த அக மற்றும் புறச் சூழல்களை தங்களக்கு சாதகமாகவும், தங்கள் கைவசத்திலும் வைத்திருந்தனர். புலிகளின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த தமிழீழத்தின் வன்னிப் பகுதிகள் ராஜபக்ஷே வர்ணித்த இந்த “இறுதிப்போரில்”(?) முற்றிலுமாகத் கொத்தெறிக் குண்டுகளால் சிதைத்து அழிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக போர் எந்திரமாக மாற்றப்பட்ட சிங்கள – தமிழின உடல்கள் ஒன்றை ஒன்று மோதி அழித்துக் கொண்டன. இந்த இறுதிப்போரில் மனித நாகரீகமே தலைகுனியும் அளவிற்கு சிங்கள இராணுவ உடல்கள் தமிழ் இன உடல்களை அழித்தொழித்தன. பொதுமக்கள் புலிகள் என்கிற எந்த வேறுபாடுகளும் இன்றி கொன்று குவித்தன.

இன்று புலிகள் என்கிற அமைப்பு காட்சிப்புலத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்ட நிலையிலும்கூட, புலிகளை ஒட்டியும் வெட்டியுமே ஈழம் பற்றிய நிலைப்பாடுகள் அலசப்படுகின்றன. ‘நலன்புரி முகாம்’ என்று திறக்கப்பட்ட அகதி முகாம்களில், புலிகளை களையெடுப்பதாகக்கூறி எண்ணற்ற அப்பாவித் PD*29086853தமிழர்கள் கொன்றும், காணமாலும் அழிக்கப்படுகிறார்கள். இளைஞர்களைப் பிரித்து கொன்றொழிக்கும் கொடும்பாதக செயலை ராஜப்க்ஷே அரசு செய்துகொண்டுதான் உள்ளது. பெண்களை தினமும் எடுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்வதும், இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்ட ஆட்கள் காணாமல் போய்விடுவதும், எந்த அடிப்படை வசதிகளுமற்ற முகாம்களில் கடுமையான நோய்த் தொற்றுகள் எற்பட்டு மருத்துவ வசதி, உணவின்மை, சுகாதாரமின்மை என மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருப்பதுமான ஒரு அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். புலிகளை ஒழிப்பதாகச் சொல்லி ஒட்டுமொத்த தமிழினத்தையே கருவறுக்கும் செயலில் ஈடுப்பட்டுள்ளது. ஊடகங்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்பதுடன், அரசிற்கு எதிராக உண்மை நிலைகளை எழுதுபவர்களை நாட்டைவிட்டு வெளியெற முடியாமல் விசா தராமல் செய்துவிடுவதாக மிரட்டி வருவதாக தெரிவிக்கிறது சரத் குமாராவின் கட்டுரை. பிரபாகரனின் அல்லது புலிகளி்ன் இருப்பு தமிழ் மக்களைவிட ராஜபக்ஷேவிற்கும், சிங்கள அதிகார வர்க்கத்தி்ற்க்கும்தான் அவசியப்பட்டிருக்கிறது என்கிற கசப்பான உண்மையை பிரபாகரன் மரணம் பற்றிய மர்மத்திலும், அகதி முகாம்களில் புலிகளின் இருப்பு என்கிற அறிவிப்புகளின் வழியாக தமிழ் மக்களை சிங்கள இனவெறி அரசு கொன்றொழிப்பதிலும் காணமுடிகிறது.

தற்கொலைப்படைத்தாக்குதல் என்கிற வெடித்துச் சிதறும் போர் எந்திரமாக மனித உடலை கட்டமைத்து, உலக பயங்கரவாதத்திற்கு ஒரு புதிய தொழில்நுட்பத்தை அளித்தது விடுதலைப் புலிகள் இயக்கம். அதன் உச்சமாக நிகழ்ந்த இஸ்லாமிய தீவிரவாதத்தின் 9/11 நிகழ்வின் வழியாக, உலக பயங்கரவாதம் என்கிற சொல்லாடலை புஷ்ஷின்-அமேரிக்கா கையில் எடுத்து உலகின் எல்லாவித விடுதலை மற்றும் மக்கள் உரிமைக்கான இயக்கங்களையும் பயங்கரவாதிகள் என ஒருபடித்தான சொல்லாடலுக்குள் கொண்டுவந்தது. ஈழத்திற்கு எதிரான ராஜபக்ஷேவின் ‘இறுதிப்போர்’ இந்த உலக அரசியல் மாற்றத்துடன் அதாவது “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்கிற புஷ்-அமேரிக்க நலனைக் கொண்ட இணையெதிர்மை-அரசியலால் (binary politics) நிகழ்த்தப்பட்ட ஒன்று. அமேரிக்க குடிமகனான மகிந்தாவின் சகோதரர் கோத்தபாயாவும் புஷ்ஷின் இந்நிலைபாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்தப் போரை நடத்தினார். இந்நிலைப்பாட்டின் அடிப்படையில் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்ட பிறகு, இந்த இறுதிப்போர் துவக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் அனைத்து சர்வதேச நேர்முக, முறைமுக உதவிகள் நிறுத்தப்பட்டன என்பதுடன், புலிகளின் அரசியலற்ற இராணுவ முனைப்பு, அவர்களை மக்களிடமிருந்தும் தனிமைப்படுத்தியது.

அடிப்படை போர் அறங்கள் அனைத்தும் கைவிடப்பட்ட நிலையில் மக்களை பலிகடாவாக்கி இந்த போர் ‘பிரபாகரன் மரணம்’ என்கிற நிகழ்வுடன் நிறுத்தப்பட்டது. ஒரு திரைப்படத்தின் அல்லது நாடகத்தின் அல்லது கதையின் உச்சக்கட்டக் காட்சியைப்போல அந்த நிகழ்வு நடந்து முடிந்தது. இந்தியா தேர்தலி்ல் மூழ்கியிருந்தபோது, புலிகளின் நிலப்பகுதி முற்றிலுமாக நெருக்கிப் பிடிக்கப்பட்டு, கொத்தெறி குண்டகளை விசி கூட்டம் கூட்டமாக மக்களைக் கொன்று குவித்து, அழிததொழிப்பு நாடகத்தை எந்த எதிர்ப்புமின்றி நடத்தி முடித்தது சிங்கள இராணுவம். இந்திய தேர்தலில் காங்கிரசின் வெற்றியுடன் பிரபாகரன் மரண அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இலங்கை இந்திய ஆதிக்க வர்க்கம் ஒருசேர வெற்றிக் களிப்பில் மிதக்கிறது. அந்த செய்தி வெளிப்பட்ட சில கணங்களில் தமிழகத்தில் ஒரு வெறுமை, ஒரு திகைப்பு. மனதிற்குள் எல்லோரிடமும் ஒரு சொல்லவியலாத துயர் இருந்ததை உணர முடிந்தது. வழக்கமான கதாநாயக மனோபாவத்தில் திளைத்த தமிழர்களின் ‘திரைத்தனம்’ என்ன செய்வது என்ற தெரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டு ஒரு “அழுகாச்சி காவியம்” பாடக்கூடத் திராணியற்றிருப்பதைப்போல இருந்தது. தனது ரசிக மணோபாவத்தில்கூட எதிர்ப்புகளை செய்ய இயலாமல், அஞ்சலிகளை நடத்தவிடாமல் செய்திகளை ஊடகங்கள் குழப்பியடித்தன.

உண்மையில், சிங்கள-இந்திய அதிகார வர்க்கம் ஊடகங்களின் வழி இந்த குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றியும் கண்டது. தமிழீழப் பிரச்சனைக்கான ஒரு துருப்புச் சீட்டாக புலிகளை பயன்படுத்துவதற்கான ஒரு மர்மத்தை காப்பாற்ற வேண்டிய தேவை அவைகளுக்கு என்றைக்கும் இருந்துகொண்டே இருக்கும் என்பதையும் இவை நமக்கு தெரிவிக்கின்றன. அதை ஊடகங்களின் வழியாகவும், அவற்றின் “உண்மை அறிந்து சொல்லும் தார்மீகப் பொறுப்பு” என்கிற கசிவுகள் வழியாகவும் சிறப்பாக செய்தன. ஒரு போராளியின் மரணம் பற்றிய செய்தி ‘புலிவருது புலிவருது’ என்கிற பள்ளிப் பாடசாலைக் கதையாக மாற்றப்பட்டுவிட்டது என்பது பேரவலங்களில் ஒன்று. புலி வருமா வராதா? என்பதைவிட புலி இருப்பிற்கான இந்த கதையாடல் என்னென்றைக்கும் ஏற்படுத்தும் கிலி போதுமானது சிங்கள/தமிழ் இணை எதிர்மை அடையாள அரசியலை நடத்த சிங்கள இனவெறி அரசிற்கு என்பதே இதில் அவதானிக்க வேண்டிய விடயமாகும்.

பிரபாகரன் மரணம் என்பதில் உள்ள பலவிதமான விவாதங்களை புறந்தள்ளிப் பார்த்தால், புலிகள் நம்பிய கருத்தியலின் ஒரு முடிவாக அது அமைந்தவிட்டது என்பதே உண்மை. அரசியல்நீக்கம் செய்யப்பட்ட மரபான இராணுவப் போர்ப்பாதை என்கிற புலிகளின் கருத்தியல் தோல்வியாகவே அது முடிந்தது. மையமற்ற கொரில்லா போர்முறையிலிருந்து விலகிச் சென்ற புலிகள் இயக்கம், மையப்படுத்தப்பட்ட இராணுவமாகியதும், கொரில்லாக்களின் அடிப்படை கருத்தியலான மக்களிடம் தங்கியிருத்தல் என்பதிலிருந்து விலகியதுமே ஒரு முக்கிய காரணம் எனலாம். கொரில்லாக்களின் பதுங்கு குழிகள் எப்பொழுதும் மக்கள்தான் என்பதை மறந்து அதனை நிலங்களில் தோண்டியதன் விளைவாக மக்களிடம் அதிகாரம் செலுத்தும் மரபான இராணுவ வடிவமாக மாறியது என்பதே புலிகளின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது எனலாம். இந்த மாற்றத்திற்கு புலிகளின் மக்களை புறந்தள்ளிய தனிமனிதவாதத்தின் அது ஏற்படுத்திய கவர்ச்சிகர சாகசக் கருத்தியலின் விளைவு எனலாம். புலிகளின் மறைவிற்கு பின்பு தமிழீழத்தின் எதிர்காலம் என்ன? என்பது இன்று “மில்லியன் டாலர் கேள்வி” என்பார்களே அதைப்போன்றதொரு கேள்விக்குறியாக மாறி உள்ளது. அல்லது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டம் அதன் துவக்கப் புள்ளியிலிருந்து பின்னோக்கி வெகுதூரத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது.

இந்தப் போர் விடுதலைப்போராக போராளிகளுக்கும் அரசிற்கும் இடையில் துவங்கி, நிலத்தை கைப்பற்றவும், காப்பாற்றவுமான இரண்டு இராணுவங்களுக்கு இடையிலானதாக நிகழ்ந்து, வழக்கம்போல் வலுவுள்ள இராணுவம் வென்றுள்ளது. மக்களுக்கான போர் என்பதிலிருந்து நிலத்திற்கான போராக மாறியதுதான் புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் எனலாம். மக்கள் போராளிகள் மக்களின் மனசாட்சியாக இருக்க வேண்டுமே தவிர மக்களின் மரணசாட்சியாக இருக்கக்கூடாது என்பது மிகவும் அடிப்படையான கோட்பாடாகும். இதன்பொருள் மக்களின் கருத்துக்களை போராளிக் குழுக்கள் பிரதிபலிக்க வேண்டும் அல்லது தங்களது கருத்தியலை மக்களிடம் பிரதிபலிக்கச் செய்ய மக்களை பயிற்றுவிக்க வேண்டும். போராளிக் குழுக்கள் அரசாக மாறுவது என்பது மக்கள் மீது சுமத்தப்படும் மற்றொரு விலங்கே. அந்த விலங்கை முற்றாக அனுபவித்தவர்கள் தமிழீழ மக்கள், குறிப்பாக போரின் இறுதி 3 மாதங்களில் பலிகடாவாக்கப்பட்ட 3 லட்சம் ஈழமக்கள்.

போராளிகள் இராணுவமாகியதுதான் இந்தப் போரின் இறுதிக் கட்ட காட்சிகளை நாம் காணும்படிச் செய்தது. ஒருவகையில், போராளிகளான புலிகளை இராணுவ மயப்படுத்தியதில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு. அது தமிழ் மறம், போர், பரணி, இராஜஇராஜசோழன், சங்ககாலம், நெஞ்சை வாளால் கிறியது, புலியை முறத்தால் அடித்தது உள்ளிட்ட பல தமிழ்-தேசிய-பிம்பங்களின் மிகை-உருவகங்கள் வழி கட்டப்பட்டது. அதில் தமிழகத் தமிழர்களுக்கு மிக, மிக முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக தமிழக அறிவுஜீவிகள் பங்கும் அதில் சளைத்தது அல்ல.

தமிழ் அல்லாத இந்திய மற்றும் சிங்கள அறிவுஜீவிகளுடன் ஒரு உறவை இதுவரை தமிழ் அறிவஜீவிகள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. காவிரிப் பிரச்சனைக்காக அல்லது முல்லைப் பெரியாருக்காக யாராவது தமிழரல்லாதவர் குரல் கொடுக்கிறாரா பாருங்கள். காரணம், மற்ற மாநில பிரச்சனைகளுக்காக நாம் குரல் கொடுப்பதில்லை. இதுதான் இனவாத அரசியிலின் பேரழிவு விளைவுகளில் ஒன்று. இடதுசாரி அமைப்புகளும்கூட மற்றொருவகை பிராந்திய வாதத்தால் பீடிக்கப்பட்டுள்ளது. இப்படிப் பார்ப்போம் இந்திய கம்யுனிச கட்சிகள் சிங்கள கம்யுனிச கட்சிகளுடன் ஒரு நல்லுறவை வளர்த்து வந்திருந்தால், இன்று ஒரு பொது உரையாடலை உருவாக்க அது வாய்ப்பாக இருந்திருக்கும். அதை அவர்களும் செய்யவில்லை, அவர்களை விமர்சித்த மற்றவர்களும் செய்யவில்லை. சீட்டுப் பிரச்சனைகளை தாண்டி சிந்திக்க அவர்களுக்கும் நேரமில்லை என்ன செய்ய?

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் உள்ளிட்ட பல போராட்டங்கள் எதிர்எதிரான அமைப்புகளான காங்கிரஸ் துவங்கி பிஜேபி வரை தமிழகத்தில் நடத்தின. ஒருவகையில் இப்போராட்டங்கள் எல்லாம் உள்ளீடற்ற ஒரு உணர்விலிருந்து கிளைத்து வந்தன அல்லது அரசியல் சுயலாபங்கள் மற்றும் ஓட்டுகள் குறித்ததாக மாறின. முத்துக்குமார் என்கிற ஆதித் தமிழ்ச் சடங்கிலிருந்து கிளைத்த தொன்மமும் (இதை அவர் பிரதியில் எழுதி உள்ளார். கூட்டமாகத் தற்கொலை செய்யாமல் தினம் ஒருவராக அதிகாரத்தின் முன் தற்கொலை செய்துகொண்டு ஒரு இனமே அழிந்துபோகும் ஆதிச்சடங்கு பற்றி) ஒரு கட்டத்தில் உள்ளீடற்றதாக மாறிவிட்டதையே ஈழத்தை பெற்றுத் தருவேன் என்று சூழரைத்த கட்சிகள் இந்திய தேர்தலில் அடைந்த தோல்வி நமக்குச் சொல்கிறது. அவரது பிரதி முன்வைத்த பல அரசியல் தெரிவுகள் அவர் சிதைப் புகையுடன் மறைந்து போய்விட்டது. மாணவர்கள் முத்துக்குமார் என்கிற தொன்மத்தின் அடிப்படையில் அவரது பிரதியை முன்வைத்து போராடவோ அல்லது அதற்கு வழிகாட்டவோ அமைப்புகள் இல்லாமல் தன்னெழுச்சியாக மாறி நீர்த்தப்போயின. மாணவர்களையும் ஈழப்போராட்டத்தையும் நீர்த்துப்போகச் செய்தததில், பலனை அறுவடை செய்ய முயன்ற கட்சிகள் மற்றும் ஈழ ஆதரவு இயக்கங்களின் பங்கு முக்கியமானது எனலாம்.

இவ்வியக்கங்கள் பிரபாகரனின் மரணச் செய்தி தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய தன்னெழுச்சியைக்கூட, அவரது மரணத்தை பற்றிய அய்யங்கள், யூகங்கள் வழியாக ஒன்றுமில்லாமல் செய்துவிட்டன. தொப்புள்கொடி தாயக தமிழகம் என்றெல்லாம் வம்சாவழி அரசியல் பேசுபவர்கள் யாரும், ஈழ அகதிகள் தமிழக அரசு மற்றும் இந்திய அரசால் படும் சொல்லொண்ணாத்துயர் பற்றிப் பேசுவதில்லை. தமிழகத்தை பின்புலமாக்கி ஈழத்தமிழர்களுக்கு ஒரு நல்வாழ்வு தரும்படி இந்திய தமிழக அரசுகளை யாரும் நிர்பந்திக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உருப்பினரான தோழர் ரவிக்குமார் ஈழ அகதிகள் குறித்து சட்டமன்றத்தில் பேசினார், அரசு சார்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து அளித்தார். அரசின் கவனத்தை அகதிகள் பக்கம் திருப்ப அவர் எடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கது. அவரது முயற்சி தவிர்த்து மற்ற தமிழினம் பேசும் அரசியல்வாதிகள் ஈழ அகதிகளுக்காக என்ன செய்தார்கள் என்பது குறித்த அதிகமாக அறியக் கிடைக்கவில்லை. ஆனால் நிறைய பேசினார்கள் அல்லது ஈழத்தமிழில் சொன்னால் நிறைய கதைத்தார்கள். ஈழத்தில் அல்லல்படும் மக்களின் அளவிற்கு சற்றும் சளைத்ததல்ல அகதிகள் என்ற பெயரில் இங்கு அவர்கள் படும் அவலங்கள். அது குறித்து அதிகமாக யாரும் பேசவும் இல்லை, கதைக்கவும் இல்லை. தமிழக அறிவஜீவிகள்கூட ஈழப்போராட்டத்திற்கு குரல் கொடுத்த அளவிற்கு அகதிகள் பிரச்சனையை அதிகமாக கவனத்திற்கு கொண்டுவரவில்லை. புலியை மையமாக வைத்து ஆதரிப்பதா எதிர்ப்பதா என்கிற எரிந்தகட்சி எரியாத கட்சி விவாதத்திலேயே காலம் கடந்துவிட்டது.

புலிகளின் அளப்பறிய அர்பணிப்பும், போராட்டமும், உயிரிழப்பும் கணக்கில் கொள்ள வேண்டிய அதே நேரத்தில் அவர்களது அரசியலற்ற இராணுவ முனைப்பால், தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொண்டதாலும், அடிப்படையில் ஜனநாயகத் தன்மையற்ற சர்வாதிகார வாதத்தை நம்பியதாலும் அவ்வியக்கத்தின் கருத்தியல், இன்று தமிழீழப் பிரச்சனையை அதன் மக்களை ஒரு நகரமுடியாத இறுக்கத்தின் முனையில் அல்லது முட்டு சந்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இதன் மற்றொருபுறம் சிங்கள அப்பாவி மக்கள் மீது நடத்திய பல தாக்குதல்கள், சிங்கள-தமிழின உறவிற்கோ உரையாடலுக்கோ சாத்தியமற்ற நிலையை உருவாக்கி உள்ளது. இலங்கை-இந்திய இராணுவக் கூட்டினால் கொன்றழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும், தமிழ் ஈழ-சிங்கள அப்பாவி மக்களை அகதிகளாக்கிய, அணாதைகளாக்கிய கொடுமைகளையும் கணக்கில் கொண்டு இந்தியன் என்ற முறையில் தமிழக தமிழர்களுக்கு இந்தப் பிரச்சனையில் கூடுதல் பொறுப்பு உள்ளது. இலங்கை இராணுவம் தனது தேசிய வெறியால் சிங்கள மக்களை ஒரு பெருந்தேசியவெறி மயக்கத்தில் வைத்திருந்தபோதிலும், தொடர் போரில் அவர்களது இழப்பும், அரசின் இராணுவச்செலவை தலையில் சுமக்கும் பாரமும் ஒரு பெருந்துயராக மாறியுள்ளது. இந்நிலையில் எந்தவித அரசியல் உரையாடலுக்கும் சாத்தியமற்ற நிலையே உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இந்த 25 ஆண்டுகளில் சிங்களிரிடமிருந்து நமக்கான ஒரு ஆதரவுக் குரலை உருவாக்குவதில் தமிழக அறிவுஜீகள் மற்றும் தமிழக அரசியல் சக்திகள் பங்காற்றவில்லை என்பதுடன் அதை ஒரு ஜனநாயகக் கடமையாகக்கூட உணரமுடியாமல் இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருந்தனர் என்பது முக்கியம். நமக்கான நியாயத்தை நாம் முன்வைப்பது என்பது பிறருக்கான நியாயத்தை எந்த அளவு அஙகீகரிக்கிறோம் என்பதிலிருந்தே ஏற்கவும், பரவலாக்கமும், பலமும் பெற்றதாக மாறுகிறது. அப்படி ஒரு பலத்தை “தமிழ் ஈழ சுயநிர்ணய உரிமைக்கான” போராட்டத்திற்கு நாம் வழங்காமல் விட்டது ஒரு வரலாற்றுப் பிழையாகும். அதாவது தமிழ் ஈழ சுயநிர்ணய உரிமைப் போரின் நியாயப்பாட்டை, சிங்கள மக்களின் பல அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதன் வழி கொண்டு சென்றிருக்க வேண்டும். அப்படி ஒரு சாத்தியத்தை தமிழக தமிழர்களோ அல்லது ஈழத் தமிழர்களோ உருவாக்கவில்லை. அந்த பிழையை சரி செய்ய, தமிழர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் ஈழத்தமிழர்களின் உரிமைப்போரில் பங்கெடுப்பதும் காத்திரமாக இப்பிரச்சனையை முக்கியமான அவதானிப்புகளுக்கு கொண்டு செல்வதும் இன்று அவசியம்.

அதேநேரத்தில் இந்த 25 ஆண்டகளில், இந்திய ஆதிக்கச் சக்திகள் ஆரம்பம் முதல் ஈழப்பிரச்சனையில் தமிழின விரோத நிலைப்பாட்டை அல்லது தமிழ் இனத்திற்கான போராட்டம், தனிநாடு என்பதில் எதிர்நிலைப்பாட்டையே கொண்டிருந்தன. இனஉணர்வு பேசும் திராவிடக்கட்சிகள் கடந்த 40 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தபோதும், அயலுறவுக் கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் வண்ணமோ அல்லது அயலுறவுக் கொள்கையில் ஒரு நிலைபாடோ இன்றியே இருந்து வந்துள்ளன. குறைந்தபட்சம் நடுவண் அரசிடம் ஒரு அயலுறவு அமைச்சரைக் கோரிப்பெறுவதையோ அல்லது இந்திய அயலுறவுக் கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் வண்ணம் ஒரு ‘கோர’-த்தையோ அல்லது அதிகாரிகளையோ உருவாக்கவில்லை. பணம் கொழிக்கும் கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை கிடைக்கவில்லை என உள்ளிருப்பு மெளனப் போராட்டம் நடத்திய திராவிடத் தலைவர், அயலுறவுக் கொள்கை மற்றும் அயல்உறவுத் துறைபற்றிய எந்த அக்கறையுமற்று இருந்துவிட்டு, கடிதமும், கண்ணீருமாக காலம் கழித்தார். விளைவு இந்திய-சீன புவிசார் அரசியல் முரண்பாட்டைப் பயன்படுத்தி, எம். கே. நாராயண துவங்கி சிவசங்கர் மேனன், விஜய் நம்பியார், பிரணாப் முகர்ஜி மற்றும் இந்து ராம், மாலினி பார்த்தசாரதி, சுப்ரமண்யசாமி, சோ. ராமசாமி (இவர்கள் அனைவரும் உயர்சாதி மற்றும் பார்பனியர்களாக இருப்பது யதேச்சையானது அல்ல) என ஒரு அதிகார வர்க்க கூட்டமைப்பு தமிழகத்திற்கும், தமிழ் இனஉணர்வு மற்றும், தமிழீழ நிலைப்பாட்டிற்கு எதிராக உருவாகி அதிகாரம் செலுத்துவதாகவும் அமைந்தன. இந்த நிலமைகளே ஈழப்பிரச்சனையை இறுதியில் ராஜபக்ஷேவின் ஹிட்லர் பாணியிலான ‘இறுதி தீர்வு” (Final Solution) என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தின.

இந்தியாவை தனது எதிரி நாடாக கணித்தும், பலநிலைகளில் இந்திய எதிர்ப்பு வெறியை சிங்கள மக்களிடம் வளர்த்தும் வரும் சிங்கள அரசமைப்பானது, அடிப்படையில் இந்திய எதிர்ப்பு நிலைக் கொண்டது என்பதையும், அதற்கு எதிராக எழுந்த தமிழ் இனப் போராட்டத்தை ஆதரிப்பதன் வழியாக சிங்கள அரசை தனது நிர்பந்தங்களுக்கு கொண்டு வரமுடியும் என்கிற இந்திராவின் இராஜதந்திரத்தை கைகழுவி விட்டு, சீனாவின் ஆதரவைக் கொண்ட சிங்கள அரசிடம் இந்திய அரசு நட்பு பாராட்ட முனைவது என்பதுதான் முரண்நகை. இந்திய அரசு தனித் தமிழீழம் அமைப்பதற்கான போராட்டச் சூழலை வளர்த்துவிட்டதும் அதன் வழியாக சிங்கள அரசை நிர்பந்தித்து வந்ததும், ராஜிவ் எடுத்த சிங்கள அரசு சார் அமைதிப்படை நிலைபாட்டுடன் மாற்றமுற்ற நிலையில், ஈழப்போராட்டம் ஒரு சிக்கல் மிகுந்த புவிசார் அரசியலுக்குள் நுழைந்தது. அந்த சிக்கலை தனது ‘தனிமனித அழித்தொழிப்பு’ என்கிற அரசியலற்ற இராணுவக் கருத்தியலால் வழிநடத்தப்பட்ட புலிகள் இயக்கம், இராஜிவ் படுகொலையால் மேலும் சிக்கலாக்கியது. விளைவு, இந்திய ராஜதந்நதிரம் என்பது, சிங்கள – சீனக் கூட்டால் தீர்மாணிக்கப்படுவதாக மாறி, இன்று சிங்கள அரசின் நிர்பந்தத்திற்கு உட்பட்டதாக இந்திய அரசு மாறிவிட்டிருக்கிறது. இதன் விளைவாக உலகின் மிகப்பெரும் போர்க் குற்றவாளியான சிங்கள இராஜபக்ஷே அரசிற்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை தோற்கடித்து, சிங்கள அரசின் தீர்மானத்திற்கு சீனாவுடன் சேர்ந்து வாக்களிக்கும் நிலைக்கு இந்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்திய -சீன வல்லரசு கனவுக்குள் சிக்கிக் கொண்டுவிட்டனர் இன்றைய ஈழ மற்றும் தமிழக மக்கள்.

ஆக, இலங்கை மற்றும் தமிழீழப் பிரச்சனை என்பது மற்றொருவகையில் இந்தியப் பிரச்சனையே என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. “எவன் செத்தா எனக்கென்ன? இராமன் ஆண்டாலும் இராவணண் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல” என்கிற இந்திய ‘சாத்வீக’ மனோபாவத்திற்கு இது ஒரு எச்சரிக்கைதான் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.

இந்நிலையில், புலிகளை எதிர்ப்பது/ஆதரிப்பது என்கிற இந்த இரண்டு பாதைகளை தவிர்த்த ஒரு மூன்றாவது பாதையை குறித்து உரையாடவும், அகதி முகாம் அல்லது தடுப்புமுகாம் வடிவில் செயல்படும் ‘நலன்புரி’ முகாம்களிலிருந்து மக்களை திரும்ப சாதரண வாழ்விற்கு திருப்புவது குறித்தும் இன்று நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். இங்கு நாம் ஒன்றை கவனிப்பது அவசியம். ஒரு எதேச்சதிகார அரசாக சிங்கள அரசு அதன் அடிப்படை பரிணாமத்திலேயே பரிணமித்திருந்தாலும், ஒரு வெளிப்படையான நிறுவனம் என்கிற முறையில் இலங்கை அரசு குறைந்தபட்சம் சர்வதேசத்தால் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ அல்லது உரையாடலுக்கான சாத்தியத்தையோ கொண்டிருந்தது. அப்படி கட்டுப்படுத்துவதில் சர்வதேச அமைப்புகள் காட்டிய மெத்தனம் ஒருபக்கம். இலங்கை அரசை போர்குற்றவாளியாக நீதிவிசாரணை செய்வதற்கான பிரேரணை சர்வதேச அமைப்புகளால் குறிப்பாக இந்தியா உள்ளிட்ட மற்றொரு அணியாக உருவான கிழுக்குலக நாடுகளால் நிராகரிக்கப்பட்டது இன்னொரு பக்கம். இந்த சூழலில், இறுதிவரை பிற நாடுகளின் குரல்களை மதிக்காது பாசிசப் போக்கை சிங்கள அரசு கடைபிடித்து வந்த போதிலும், அது போரின் ஆரம்பத்தில் பேச நிர்பந்திக்கக்கூடிய வகையில் இருந்தது. ஆனால், புலிகளை நிர்பந்திப்பதற்கோ அல்லது அவர்களை உரையாடலுக்கு கொண்டுவந்து பொதுநீரோட்டத்தில் பிரச்சனைகளை அனுகுவதற்கோ போர் ஆரம்பித்த நாள் முதல் இறுதிவரை சாத்தியம் இல்லாமலே போனது. காரணம் ‘சூரிய – சந்திரக் குலத்தில் பிறந்தவன் முன்வைத்த காலை பின் வைக்கமாட்டான்’ என்கிற நாடக வசனம்பேசிய இந்திய புலி ஆதரவு காகிதப்புலிகளால் ஏற்பட்ட ஒரு மிகைநவிற்சியின் விளைவே எனலாம். இறுதிக்கட்டத்தில் புலிகள் சார்பாக எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் என்பது எதேச்சாதிகார சிங்கள அரசின் இன்வெறிக்கு முன்பு ஏதுமற்றதாக போனது என்பதுடன், அது அவர்களின் வெற்றிக்கான ஒரு பச்சைக்கொடியாகவே மாறிப்போனது. புலம் பெயர்ந்த தமிழர்களின் நடவடிக்கைகள் இறுதிவரை, புலிகளை நிர்பந்தித்து ஒரு இடைக்கால சமாதானப்பாதைக்கு செல்ல முயற்சி செய்யாமல், போர்பரணிப்பாடி புலிகளின் போரை துரிதப்படுத்தி சாவு முனைக்கு தள்ளியதாக மாறிப்போனது. போரில் ஈடுபட்ட இரண்டு அமைப்புகளிடமும் இறுதிவரை எந்தவித உத்தரவாதமோ நம்பகத்தன்மையோ ஏற்படவேயில்லை. இந்தப் போரின் இறுதிவிளைவாக, தற்பொழுது அங்கு சிக்கியுள்ள 3 லட்சம் மக்களின் எதிர்காலம் என்ன? என்பது குறித்த ஒரு தீர்வை எட்டமுடியாத நிலை என்பதுதான் எல்லாவற்றையும்விட பேரவலமாக உள்ளது.

இம்மூன்று லட்சம் மக்களை பல முகாம்களில் அடைத்து வைத்துள்ளது சிங்கள அரசு. அடிப்படை மனித அறத்திற்கு எதிரான பல ஒடுக்குமுறைகளை அம்மக்கள்மீது செய்துவருகிறது. இந்த ஒடுக்குமுறைகள் வழியாக தன்னை எதிர்த்த ஒரு இனத்தின் மீதான, தனது அரசின் இறையாண்மையை கட்டமைக்க முயல்கிறது. தனி ஈழம் கேட்ட மக்களுக்கு இன்று ஒரு தனி நிலப்பரப்பாக முகாம்களை ‘நலன்புரி முகாம்கள்’ என்கிற பெயரில் உருவாக்கி, அதற்கு தமிழ் தலைவர்கள் பெயர்களை சூட்டியும், இதர தமிழ் பகுதிகளுக்கு தேர்தலை நடத்துவதன் வழியாக தனது ஒடுக்குமுறைக் குறித்த ஒரு கருத்தாடலை முன்வைக்க முனைகிறது. தமிழர்களின் தனி ஈழக்கனவு என்பது நாகார்ஜீனன் குறிப்பிட்டதைப்போல ஒரு எதிர்-கனவாக மாறிவிட்டிருக்கிறது(எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம்). முகாம்கள் என்கிற நிலப்பரப்பு, தனிஈழம் என்கிற நிலப்பரப்பின் ஒரு மாற்றீடாக, அதாவது நாகார்ஜீனன் வார்த்தைகளில் சொன்னால் ஒரு ‘புலக்குலைவாக’, ‘முகிழாப்பிறப்பாக’ மாறிவிட்டிருக்கிறது என்பதுதான். விடுதலைப் புலிகளின் எழுச்சிக்குப்பின்பான 25 ஆண்டுகால தமிழீழப் போராட்டத்தின் இன்றைய விளைவாக மிஞ்சியிருக்கும் அவலம்தான் இந்த முகாம்கள்.

இன்று ‘எல்லைக் கடந்த தேசம்’ என்கிற ஒரு சொல்லாடலை தமிழீழம் பற்றியப் பேச்சில் பலர் கட்டமைக்க முயல்வதைக் காணமுடிகிறது. இதன்பொருள் தமிழீழம் என்பது முகாம்களாக எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எல்லைக்கு வெளியே உள்ள தமிழர்கள் சி்ங்கள இறையாண்மைக்கு உட்பட்டவர்கள். எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள் மனித அறத்திற்கு வெளியே சிங்கள இனவெறி அரசின் இறையாண்மைக்கு தங்களது உடல்களின் உயிர் ஆற்றலை முதலீட செய்துகொண்டிருக்கும் அகம்பன் கூறும் ‘அம்மண உயிர்நிலை’ (bare life) என்கிற வெற்று உடல்களைக் கொண்ட மனித உடல்கள். மூன்றாவதாக இவ்விரண்டு பரப்பிற்கும் வெளியில் உள்ள புலம் பெயர் தமிழர்கள் தங்கள் எல்லைக்கடந்த தேசமான ஈழம் என்கிற கனவைக் கொண்டவர்கள். ஈழத் தமிழர்கள் என்கிற ஒரு இனம் இன்று இந்த மூன்று எல்லைக்களாகச் சிதறடிக்கப்பட்டுள்ளது. அதாவது 1. நீதிபரிபாலன அமைப்புகள் மற்றும் சட்டங்கள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முகாம்கள், 2. சிங்கள அரசின் இறையாண்மைக்கு உட்பட்ட நீதிபரிபாலன – சட்டங்கள் ஆளும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி தமிழர்கள், 3. சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட புலம் பெயர் தமிழர்களின் எல்லைக் கடந்த தேசம். இவற்றில் எந்த சட்டவரம்பிற்குள்ளும் இல்லாத முகாம்களில் இருத்திவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் நிலைதான் இன்றைய பெயருந்துயராக நம்மைச் சூழ்ந்துள்ளது.

முகாம் என்கிற வடிவம் தேச உருவாக்கத்தின் ஒரு பக்க விளைவாக உருவானதே. இதனை அகம்பென் தேச உருவாக்கத்தின் நான்காம் அலகு என்கிறார். முகாம் என்பது அடிப்படையில் தேசம் என்கிற எல்லைகளை எல்லைப்படுத்துவதற்கான ஒரு குறியமைப்பாக உள்ளது எனலாம். காரணம், முகாம் என்பது தேசங்களிலிருந்து எல்லை நீக்கம் செய்யப்பட்ட ஒரு பிரத்யேக பரப்பாக உள்ளது. முகாம் என்பது ஒரு தேச அரசின் இறையாண்மைக்கு வெளியில் உள்ள ஒரு நிலப்பரப்பு. இவ்வடிவத்தின் சமூகவியல் மற்றும் கோட்பாடுகளை அகம்பென் போன்ற அறிஞர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

முகாம் என்பது 3 முக்கிய செயலியக்கத்தைக் கொண்டது. 1. உயிர் ஆற்றல் கொண்ட தனிஉடல்களை எந்தவித அரசியல் உரிமையும் இன்றி அம்மண உயிர்நிலைக்கு குறைக்கிறது. 2. சுவர்களால் அல்லது கண்காணிப்பு கம்பி வலைகளால் பிரிக்கப்பட்டு வடிகட்டப்பட்ட தினவாழ்வு என்பதை உருவாக்கி, மனித உடல் மீதான அடக்குமுறைகளை இயல்புநிலைக்கு மாற்றியமைக்கிறது. 3. அசாதரண அரச நிலை என்பதை உருவாக்கி இறையாண்மையின் மறு -பிறப்பு என்பது நிகழ்கிறது. மனிதனின் வாழ்வுரிமை என்பது இனிமேலும் ஒரு புலன் அறிப்பொருளாகவோ, இலக்காகவோ இல்லலாமல், அது அரசு அதிகாரத்தின் ஒரு ஒடுக்கப்பட்ட தன்னிலையாக மாற்றப்படுகிறது.

முகாம்களின் எல்லை என்பது உள்ளே வெளியே இன பிரிக்கப்பட்ட இரண்டு புலங்களாக அல்லது ஒரே தேசத்தின் எதிரெதிர் வடிவங்களாக பிரிக்கப்பட்ட புலங்களாக, ஒன்று சட்டத்தி்ன் ஆட்சியும் மற்றது சட்டங்களோ நீதியோ உரிமையோ அற்ற ஆட்சியும் கொண்டதாக உள்ளது. இது உள்ளிருப்பு/வெளயிருப்பு என்கிற இரு இருப்பு நிலைகளை வேலிகளால் அல்லது சுவர்களால் பிரித்து உருவாக்கப்படுகிறது. முகாம் என்கிற வெளிக்குள் சட்டத்தின் ஆதிக்கம் செயல்படுவதில்லை. உள்ளிருக்கும் மனித உடல்கள் தங்களது மனித இருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவர்களது வாழ்வு மற்றும் சாவிற்கான உரிமையை அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் புறவெளியின் அரசு முற்றும் முழுதாக எடுத்துக் கொள்கிறது. முகாமிற்குள் அரசும் அதன் அதிகாரமும் மட்டுமே செயல்படக்கூடியதாக மாற்றப்படுகிறது. முகாமிற்குள் கொலைகள், படுகொலைகள், பாலியல் வனகொடுமைகள் அனைத்தும் சாத்தியமாக்கப்படுகிறது. அங்கு நிலவும் அசாதாரண அரசுநிலை என்பது சட்டத்தின் செயல்பாட்டை மட்டும் நிறுத்தி வைப்பதில்லை எது சட்டத்திற்கு உட்பட்டது, எது சட்டத்திற்கு வெளியில் உள்ளது என்பதை பற்றிய தெளிவற்ற குழப்பத்தை நீட்டிக்கச் செய்கிறது. அது ஒரு சோதனைக் கூடத்தைப் போன்ற வடிவமாக மாற்றப்பட்டு அங்குள்ள உடல்கள் தேச – அரசின் முற்றான அதிகாரத்தை செயல்படுத்துவதற்கான சோதனைக் களமாக மாற்றப்படுகிறது. உலகெங்கிலும் அரசு மற்றும் அதிகாரத்திற்கு எதிரான பாமர மக்களின் மனங்களுக்குள் ஒரு அசாதாரணமான அச்சத்தை உருவாக்கும் நினைவிலிப்புலக் கட்டமைப்பை செய்கிறது.

தனது அரசியல் அடையாளத்தை ஒரு தனி உடல் இழந்துபோகும், அம்மண உயிர் நிலையை உருவாக்கும் ஒரு வெளியை திறந்து humanவிடுகிறது முகாம் என்கிறார் அகம்பென். மனிதன் என்பவன் ஒரு அரசியல் உயிரியாக கட்டமைக்கப்பட்ட இந்த உலகில், அவனது அரசியல் அடையாளத்தை இழக்கச் செய்த அடையாளமற்ற ஒருவெளியில் வாழக்கூடிய ஒரு அம்மண உயிர்நிலை என்பதை உருவாக்குகிறது. முகாம்களில் உள்ள உடல்கள் என்பது ஏதுமற்ற ஏதிலிகளாக ஆக்கப்படும் நிலையில் அவர்கள் மீதான முற்றான அதிகாரத்தை கையில் எடுக்கிறது அரசு. அவர்கள் மனிதர்களின் இவ்வுலக வாழ்விலிருந்து பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள். சிறைச்சாலை என்கிற அமைப்பில் உள்ள அடிப்படையான சில உரிமைகள்கூட மறுக்கப்பட்ட நிலையில் வாழ வைக்கப்படுகிறார்கள். அரசின் சட்டத்திற்கு முன்பு குற்றமற்ற அந்த மக்கள் ஏதிலிகளாக ஒரு அரசியல் குற்றவாளிகளாக மாற்றப்பட்டு, அவர்களது உயிர் ஆற்றலை முற்றிலுமாக அதிகாரம் தனது இறையாண்மைக்கான முதலீடாக மாற்றிக் கொள்கிறது.

இந்நிலையி்ல் இப்பொழுது போரில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பது என்கிற அடிப்படையை பிரச்சனையாகக் கொண்டு, அதற்க்கான உடனடித் தீர்வு என்ன? என்பதிலிருந்து உரையாடலைத் துவங்குவது அவசியம்.

முதலில் உரையாடலை இப்படி தொகுத்துக் கொள்ளலாம்.

1. இரண்டு இராணுவங்களுக்கிடையிலான மூர்க்கமான போரினாலும், இந்திய மற்றும் உலக ஆதிக்கத்தின் புவிசார் அரசியலிலும் சிக்கிக்கொண்டுவிட்ட மூன்று லட்சம் அப்பாவித் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். நலன்புரி முகாம் என்கிற வடிவில் உருவாக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம் ஒரு ஒருங்கிணைப்பு வதை முகாமாக மாறி யூதர்களுக்கு எதிரான நாசிகளின் வதைமுகாம்களாக செயல்படுவதை சர்வதேச பார்வைக்கு கொண்டு சென்று அந்த வடிவத்தை கைவிடவும், உலக நாடுகள் அதற்கு நிதி உதவி அளிப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

2. சிங்கள இராணுவத்தில் பங்கு பெற்ற இராணுவப் பணியாளர்களது குடும்பங்கள் மற்றும் இராஜபக்ஷே அரசால் பாதிக்கப்பட்ட சிங்கள அப்பாவி மக்கள், அரசின் பாசிசத்தன்மையை உணர்ந்து அரசு எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கச் செய்ய வேண்டும். அதாவது, சிங்கள ஜனநாயக சக்திகளின் குரல்களை அடையாளங்கண்டு அவற்றுடன் ஒன்றிணைவது அவசியம்.

3. அகதி முகாம்களுக்குச் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் போய் அதன் உண்மை நிலைகளை கண்டு அறிவிப்பதும், அவர்களிடையே சர்வதேச உதவிக்குழுக்கள் பணியாற்றி அவர்களது பிரச்சனைகளை சீர் செய்வதற்கு இலங்கை அரசு முன்வரவேண்டும். அல்லது சர்வதேச அமைப்புகள் இலங்கை அரசை இதற்கு பணியவைக்க வேண்டும்.

4. பத்திரிக்கைகள் மற்ற ஊடகங்கள் அங்கு சென்று உண்மை நிலையைக் கண்டறிய இலங்கை அரசிற்கு நிர்பந்தங்களை தமிழர்கள், சர்வதேச அமைப்புகள் மட்டுமின்றி புலம் பெயர்வாழ் தமிழர்களும் செய்யவேண்டும்.

5. இலங்கை போர்ச்சூழலிருந்து விலகி ஒரு சாதரண வாழ்விற்கான அடிப்படை ஆதாரங்களைக் கொண்டதாக மாற்றப்பட வேண்டும் என்பதை முன்வைத்து போராட்டங்கள் தொடரப்பட வேண்டும். முகாம்கள் திறக்கப்பட்டு மக்கள் திரும்பவும் தங்களது ஊர்களுக்குத் திரும்பி அரசு அல்லது சர்வதேச அமைப்புகள் உதவியுடன் தங்களது வாழ்வைத் துவங்க ஆவண செய்யவேண்டும்.

6. இலங்கை அரசு என்பது ஒரு தேசிய அரசிற்கான சட்ட அமைப்பைக் கொண்டதோ அல்லது ஒரு நவீன தேசிய அரசு வடிவத்தையோ கொண்டதாக இல்லை. பல அடக்குமுறைச் சட்டங்கள் வழியாகவே அதன் ஆளுகை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த எதேச்சதிகார சட்டமுறைக்கு எதிராக சிங்களர்கள் மத்தியில் உருவாகும் அமைப்புகளுடன் தமிழ், கிறித்துவ, தலித் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் இணைந்த ஒரு ஒருங்கிணைந்த முன்னணிக்கான சாத்தியங்களை உருவாக்க வேண்டும். கிறித்துவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்கிலேயக் காலனியக் காலகட்டம் முதல் பெளத்த-சிங்கள பேரினவாதம் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. காலனிய ஆட்சிக்குப்பிறகு அது தமிழர்களுக்கு எதிரான இனவாதமாக வெளிப்பட்டுள்ளது. இன்று இனவாதம் பின்னுக்குத்தள்ளப்பட்டு, அது மீண்டும் ஒரு மதவாதமாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சிங்கள உழைக்கும் மக்களை இனவாதத்தால் மயக்கி உண்டு கொழுத்த ஆதிக்க வர்க்கம், இனி அந்த துருப்புச் சீட்டை ‘பிரபாகரன் மரணம்’ என்கிற நிகழ்வின் மூலம் இழந்துவிட்டதால், அடுத்து முஸ்லிம், கிறித்தவர்கள் மீதான மதக்காழ்ப்புகளை, வகுப்புவாதத்தை கட்டமைக்க முயலலாம். அதன் ஒரு கூறாக, தமிழினம் என்பதை இந்துமதவாதமாக மாற்ற முயலலாம். இக்கூறுகள் மிகவும் ஆபத்தான அடையாள அரசியல் உள்ளடக்கங்களைக் கொண்டவை என்பதால் அதனை உடனடியாக அரசியல் தளத்தில் முறியடிப்பதும் சிங்கள-தமிழ்-முஸ்லிம்-கிறித்துவ ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதும் அவசியம். அல்லது பன்முக அடையாளங்களையும் உள்ளடக்கிய வர்க்க அரசியலை முன்னெடுப்பது ஒரு மாற்று அரசியலாக அமையுமா என்பதையும் இதனுடன் இணைத்து சிந்திக்க வேண்டும்.

7. இலங்கை அரசு அடிப்படையில் சிங்கள மக்களுக்கே எதிரானது என்கிற உணர்வை சிங்களரிடம் உருவாக்குவதும், இதை முன்வைத்து அம்மக்களை இனவாத அரசியலிலிருந்து பொது நீரோட்டத்திற்கு கொண்டு வருவது அவசியம். தற்போதைய ஈழத் தமிழ் மக்கள், அந்த மனநிலைக்குத்தான் வந்திருப்பார்கள் என்பதும், தேசிய-இனவாதமற்ற தமிழர்கள் உலக அளவில் இந்த சிந்தனைப் போக்கையே கொண்டிருப்பார்கள் என்பதும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு பரந்த ஜனநாயக முன்னணியை உருவாக்குவது அவசியம். பாசிச ராஜபக்சேவிற்கு எதிரான ஒரு முன்னணியை இன்று புலிகள் அல்லது ஈழ இயக்கங்கள் முன்வந்து செய்வதும் பொது அரசியல் நீரோட்டத்தில் ஜனநாயக அமைப்புகளை உருவாக்குவதற்கான தளத்தையும் உருவாக்க வேண்டும். இரண்டு இன மக்களிடமும் உள்ள இடது சாரி ஜனநாயக சக்திகள் இன்று ஒரு பெரும் பங்கை ஆற்றமுடியும். அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், உழைக்கும் மக்கள் உள்ளி்ட்ட அனைவரிடமும் இந்த பொது முன்னணிக்கான அரசியல் செயல்திட்டங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.

8. இன்று பெரும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ள இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரிடம், இலங்கை அரசு தனது மேலாதிக்கத்திற்காக இராணுவத்தையும் சிங்கள மக்களையும் எப்படி பலிகடாவாகாக ஆக்குகிறது என்பதை அம்பலப்படுத்த வேண்டும். கட்டாயப்படுத்தி சிங்கள இளைஞர்களை இராணுவமாக மாற்றும் இலங்கை அரசு, சிங்கள மனித உரிமைக்கு எதிராக செயல்படுவதையும், பாதிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பத்திருக்குமான மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக நாமும் குரல் கொடுக்க வேண்டும்.

9. உலகிலேயே அரசு எந்திரத்தின் ஆக மோசமாக செயல்படும் இலங்கை அரசு எந்திரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு ஒரு ஜனநாயக அரசாக மாற்றப்படுவதற்கான இயக்கங்களை தமிழக, சிங்கள ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் உருவாக்குவது அவசியம். இன்றைய சிங்கள அரசு அடிப்படையில் சிங்கள மக்களின் தேசிய நலன் பேணும் அரசல்ல அது ஒரு பேரினவாத பாசிச அரசு என்பதை சிங்களிரிடம் அம்பலப்படுத்தும் முனைப்புகளை உருவாக்க வேண்டும்.

இதற்கெல்லாம் உடனடியாக ‘நலன்புரி’ முகாம்கள் மற்றும் அகதி முகாம்கள் ஒழிக்கப்பட்டு ஒரு சாதரண வாழ்நிலைக்கு தமிழ் ஈழப்பகுதிகள் திரும்ப வேண்டும். பொது ஜனநாயக அமைப்புகளுக்கான களத்தை தமி்ழீழத்தில் உருவாக்க வேண்டும். புலிகள் குறித்து இந்த போரில் வெளிவந்த பல விமர்சனங்கள் கருத்தாடல்கள் அடிப்படையில் அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களை புணரமைத்துக் கொள்வதன் வழியாக ஜனநாயகப்பாதைக்கு திரும்பி மக்களிடம் தன்னை ஒரு அரசியல் இயக்கமாக நம்பிக்கையை பெறுவது அவசியம். தமிழ் ஈழமக்களை காட்டிக் கொடுக்கும் வண்ணம் சிங்கள அரசிற்கு தலைவணங்கி செவை செய்யும் அமைப்புகள் உடனடியாக மக்களிடமிருந்து துரத்தப்பட்டு அம்பலப்படுத்தப்பட வேண்டும். மக்கள் பேசுவதற்கான ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும். புலிகள் உள்ளிட்ட ஈழ இயக்கங்கள் தங்களை ஜனநாயக அமைப்பாக மாற்றிக் கொள்ள நிர்பந்திக்க வேண்டும். நம்பகத்தன்மை இழந்துவிட்ட இராணுவ அமைப்புகளிடம் இல்லாமல் சர்வதேசக் கண்காணிப்பு குழு ஒன்றின் கீழ் தமிழ-சிங்களப் பகுதிகளில் மறு-சீரமைப்பு துவக்கப்பட வேண்டும்.

சரி இதெல்லாம் சொல்ல நன்றாக உள்ளது. யார் செய்வது? என்பதுதான் கேள்வி. ஜனநாயக உணர்வுள்ள ஒரு மக்கள் சமூகம் உலகில் இன்று முற்றாக அழிந்துவிடவில்லை என்கிற நம்பிக்கையின் அடிப்படையில்தான் இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தேசம் மற்றும் தேசிய அரசுகள் உலகில் உருவாக்கியது பெரும் பெரும் அகதி முகாம்களைத்தான். முகாம்களில் செயல்படும் அதிகாரம் என்பது ஒரு உடல்மீதான நிபந்தனையற்ற ஆதிக்கத்தை செலுத்துவதாக உள்ளது. எந்த அடிப்படை அதிகாரத்தின் காப்புறுதிகளையும், மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி, அவர்களை ஒரு வகையினமாகவும், அவர்களை சமூகத்தின் மௌனத்திற்குள் பதுக்குவதும், எந்த அடிப்படையும் கனவுகளும், கற்பனைகளும் இன்றி வாழ்ந்து சலிக்கும் நம்பிக்கையற்ற ஒரு வெற்றுவாழ்வை உருவாக்கி உள்ளன. மனித உடலின் உயிராற்றலை முற்றிலுமாக நசுக்கி அழிக்கும் அகதி முகாம்களுக்கு எதிரானதாக நமது அரசியலை ஒருமுனைப் படுத்துவோம். முகாம்கள் வழியாக அரசானது ஒரு கொலை எந்திரமாக மாறி, தனது பாசிசக் கரத்தை விரிவாக்க முனைகிறது. அகதி முகாம்களை உருவாக்காது ஒரு அரசியலமைப்பு முறையே இன்றைய தேவை. ஜனநாயகம் என்பது அரசியல் சொல்லாடலாக இல்லாமல் ஒரு கலாச்சார வாழ்வாக மாற்றப்பட வேண்டும். அதற்கு பலகருத்துக்களை-பலமுனைகளை-பலமக்களை-பலநிறங்களை-பலவாழ்வை-பலஉடல்களை-க் கொண்ட ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்குவோம்.

இன்றைய ஈழ அரசியல் நமக்கு கட்டியங்கூறுவது அதைதான். நாம் நம்மை எதிர்வரும் அகதி முகாம்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள அகதி முகாம்களற்ற அரசியலை உருவாக்க வேண்டும். ஏழைகள் எல்லோரையும் காணமுடியாத (invisible) ஒரு அகாதி முகாமிற்குள் அடைத்துவிட்டு அல்லது உலகை அகதிகளின் முகாமாக மாற்றிவிட்டு அரசின் இறையாண்மைக்கு வெளியில் மக்களை குடியமர்த்தி, முதலாண்மைக் கொண்ட அதிகார வர்க்கம் மட்டுமே வாழ்வதற்கான உலகாக இந்த உலகை மாற்றும் ஒரு அரசியல் செயல் திட்டத்திற்கான முன்வரைவுகளை முறியடிப்பது அவசியம். இது பாசிசம் இந்த நூற்றாண்டில் கண்டடைந்திருக்கும் ஒரு புதிய வடிவம். நலவாழ்வு என்கிற பெயரில் திட்டமிட்ட கம்பி வலைகளுக்குள் ஆன ஒரு குடியிருப்பை உருவாக்கி இராணுவ கண்காணிப்பிற்குள் வைப்பதற்கான இலங்கை அரசின் இத்திட்டத்தில் எதிர்கால அரசியலின் நுண்-வடிவம் இருப்பதை அவதானிப்பது அவசியம்.

ஆக, குறைந்தபட்சம் அகதிகள் என்று அழைக்கப்படும் நமது சகோதரர்களிடம், ஒரு அர்த்தமுள்ள வாழ்வை உருவாக்க அவர்களது முகாம்களற்ற நலவாழ்வை உருவாக்க நமது அரசுகளை நிர்பந்திப்பது அவசியம். ஈழ அகதிகளின் பேரவலங்கள் தமிழக அகதி முகாம்களில் நடைபெற்றுவருவதை ஈழத்தமிழர் ஆதரவுக்கான நமது போராட்டத்துடன் இணைத்து நடத்துவதும் நமது வேலைத்திட்டங்களில் ஒன்றாகட்டும். காலனியம் என்கிற கரும்புள்ளியை இரண்டாம் உலகப்போருக்குப்பின் துடைத்தெறிந்து அதன் பின் நவ-மறு-காலனிய வடிவங்களில் உலக அதிகாரம் உலா வந்தது. தற்போதைய உலகமயச் சூழலில் அதன் புதிய வடிவம் அதாவது உலகக்-குடிமகன் (globalized citizen) என்கிற சொல்லாடலின் உள்ளார்ந்த பரிணாமமாக அகதிகள் என்கிற உடல்கள் அதிகாரத்தின் உயிராற்றலாக முதலீடு செய்யப்படுகிறதோ என்கிற சந்தேகத்தை உருவாக்குகின்றன இத்தகைய நிழ்வுகள். ஈழத்தில் நடந்து முடிந்த இந்த பேரவலம் நமக்கு உணர்த்துவது இதைதான். உலகம் என்பது மறு ஒழுங்கிற்கு உட்படுத்தப்படுகிறது. நாம் வாழ்வதற்கு நமக்கென ஒரு அகதி முகாமை அதிகாரம் தயாரித்தளிக்க தயராகவே உள்ளது என்பதை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்வது நல்லது. மனித உடல்கள் நிலத்துடன் பிணைக்கப்பட்டு, நில எல்லைக்குள் வாழ் நிர்பந்திக்கப்பட்டு, தேசம் என்கிற வரைகோடுகளுக்குள் குடிமகனாக முதலீட செய்யப்பபட்டு, இன்று உலகமயமாதலில் தேச எல்லைகள் அழிக்கப்பட்டு, மனித உடல்கள் பிணைக்கப்படும் நிலங்களாக முகாம்கள் மாற்றப்படுவதற்கான ஒரு அரசியல் திட்டம் இதற்குள் இருப்பதை உணர்ந்துகொள்வதும், அதை முறியடிப்பதற்கான செயல்திட்டங்களை வகுப்பதும் அவசியம்.

பயன்பட்ட கட்டுரைகள்.

1. Sri Lankan Government Stalls On Release Of Tamil Detainees – By Sarath Kumara http://www.countercurrents.org/kumara040809.htm

2. முகாம் என்பது யாது? – 1 – அகம்பென் – தமிழில் நாகார்ஜீனன் – http://nagarjunan.blogspot.com/2009/02/1_13.html

3. முகாம் என்பது யாது? – 2 – அகம்பென் – தமிழில் நாகார்ஜீனன் – http://nagarjunan.blogspot.com/2009/05/2.html

4. எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம் – நாகார்ஜீனன் – http://nagarjunan.blogspot.com/2009/05/blog-post_10.html

5. வே. பிரபாகரனின் மாவீரர் நாள் உரை, 2008 – தமிழ் விக்கிப்பீடியா

6. Deep Thoughts: Agamben’s camp and sociology – http://adamash.blogspot.com/2006/07/deep-thoughts-agambens-camp-and.html

7. Homo Sacer, Indefinite Detention and the Nike Swoosh: Agamben’s Camp as Biopolitical Paradigm of the West – Jennifer Tomomitsu-Tomasson, Research Student Department of Sociology, Lancaster University

- ஜமாலன்.  நன்றி- இனியொரு


குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – புதிய தொடர்

alcohol

சமீபத்தில் காலச்சுவடில் சுகிர்தராணி எழுதிய குடிக்கலாச்சாரம் பற்றிய கட்டுரை facebook ல் டீசே வால் வெளியிடப்பட்டு  வளர்மதி மற்றும் வெங்கடேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் அது குறித்து விவாதித்தனர். இடையில் நண்பர் வளர்மதி நம்மையும் இழுத்ததால் அவரிடம் கூறியபடி இக்கட்டுரையை  எனது மற்றொரு பதிவான உடலரசியலில்  வெளியிடுகிறேன். எழுதத் தூண்டிய நணபர் ராமானுஜத்திற்கும், எழுதும்போது படித்து கருத்துக்களைக் கூறி ஊக்கப்படுத்திய முபாரக்கிற்கும் நன்றி.

---- இக்கட்டுரை 10-09-2008 ல் நண்பர் ஒருவரின் குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றிற்காக எழுதப்பட்டது. அந்நூல் இதவரை வெளிவந்ததற்கான குறிப்புகள் எதுவும் தெரியவில்லை. ஒருவேளை கட்டுரையின் அலுப்பூட்டும் ஆய்வுமுறை ஏற்படுத்திய சுவராஸ்யமின்மை இதனை வெளியிடுவதற்கு அவருக்கு தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் அதை சொல்லத்தயங்கி, நூல் வெளிவந்த குறிப்பு தெரிவிக்கப்படாமல்கூட இருந்திருக்கலாம். எப்படியோ, இதனை இங்கு வெளியிடுவதன் வழியாக 2 மாதங்கள் உழைப்பையும் நேரத்தையும் தின்ற இக்கட்டுரையினை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே. கட்டுரையின் நீளம் கருதி, பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது படிப்பதற்கு வசதியாக. எனது மற்றொரு பதிவான உடலரசியலில்.----

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – சுற்று-1

- ஜமாலன்.


More Recent Articles



Click here to safely unsubscribe now from "மொழியும் நிலமும்" or change your subscription or subscribe