Your email updates, powered by FeedBlitz

 
Here is a sample subscription for you. Click here to start your FREE subscription

"®®®®®®®®்" - 5 new articles

  1. ®ு®®®்®®®®்®®®®®ு®®் ®®®®்®®®®்®ு®®®®ு®®்.- ®®ு®®-3
  2. ®ு®®®்®®®®்®®®®®ு®®் ®®®®்®®®®்®ு®®®®ு®®் –®®ு®®:2
  3. ®ு®®®்®®®®்®®®®®ு®®் ®®®®்®®®®்®ு®®®®ு®®் – ®ு®்®ு-1.
  4. ®®ை®ூ®்®®®®©்: ®®ு®®®®ு ®®்®®®®் ®®ை®®£®®®®®்®ை. ®€®™்®®் ®®©் ®…®£®®®®€®்®®்?
  5. ®ெ®£்®£®®®®் ®®©்®©ு®®் ®ொ®்®®®்.....
  6. More Recent Articles
  7. Search ®®®®®®®®்

®ு®®®்®®®®்®®®®®ு®®் ®®®®்®®®®்®ு®®®®ு®®்.- ®®ு®®-3

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்:1.

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் –பகுதி:2

002sf2224drinkingculture பண்டைய மதமான வேதமதத்தின் ருக்வேதத்தில் ஸோமா என்ற தலைப்பின் கீழ் (ருக்வேதம் 8.48.3, 8.7.29, 8.64.10-11) ஸோமா (Soma) என்று ஒரு பானம் பற்றிப் பேசப்படுகிறது. பார்சிய ஜெராஷ்டிரிய மதத்தின் புனிதமறையான அவஸ்த்தாவில் இதையே ஹவ்மாHaoma) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸோமபானம் மதச்சடங்குடன் இணைத்தே பேசப்படுகிறது. சதபதபிரமாணம் (Satapatha BrahmaNam: VI.1.3.10) ஸோமபானம் பற்றி கூறும்போது உண்மை (சத்யம்), நற்பண்பு (ஸ்ரீ), ஒளி (ஜோதி) ஆகியவற்றைத் தரக்கூடிய தெய்வீக அம்சம் பொருந்தியதாக வர்ணிக்கிறது. இதன் எதிர்மறையாக சுராபானம் என்பது பொய் (அனுருதம்), துன்பம் (பாபமா), அறியாமை (தாமா) கொண்டதாகவும் அது மனிதர்களுக்கானதாகவும் இருந்து வந்துள்ளது. ஸோமபானம் ஞானத்தையும், ஆனந்தத்தையும் தருவதாக சொல்லப்பட்டது. ஸோம யாகத்தில் இந்திரன், அக்னி உள்ளிட்ட தேவர்கள் குடிப்பதற்காக இது அளிக்கப்பட்டுள்ளது. சுராபானம் கீழ்தட்டு மக்களுக்கானதாக ஒதுக்கிவைக்கப்பட்டது. “புவியின் மனிதக் கடவுளான பார்ப்பனர்கள் அதை அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது“ (9). அதை அருந்துவது பாவமாக தர்மசாத்திரங்களால் அறிவிக்கப் பட்டது.

வேதக்கடவுளான ஸோமா, சந்திர வழிபாட்டுடன் உறவு கொண்டதாகும். இச்சந்திர வழிபாடு என்பது யூதமத வழிப்பாட்டுடன உறவுடையதாக சமர் அப்பாஸ் என்கிற ஆய்வாளர்  தெரிவிக்கிறார் (10). ஆரிய - பிராமண மதமும் யூத மதமும் ஒரே மூலத்தைக் கொண்டதாக விளக்கும் இவரது கருத்து, பண்டைய யூதர்களின் மதுவுடன் இந்த ஸோமாவிற்கு ஒரு பூர்விகத் தொடர்பிருப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஸோமா-க் கடவுளுக்கு  27 நட்சத்திரங்கள் மனைவிகளாக இருப்பதாகவும், இவை எல்லாம் இரவுடன் உறவு கொண்டதான ஒரு ஒப்புமையை தருவதாகவும் உள்ளது. சமஸ்கிருதத்தில் திங்கள் கிழமையை ஸோமவார் என்று அழைப்பதும் இந்த சந்திர வழிப்பாட்டுடன் அறியப்படும் ஸோமாவுடன் உறவுகொண்டதே. ஸோமா என்பதற்கு சமஸ்கிருதத்தில் சந்திரன் அதாவது திங்கள் என்றே பொருள். சூரியன் x சந்திரன், வெம்மை x குளிர்ச்சி, அக்னி x நீர் என்பதான எதிர்வுகள் இதன் உள்ளடக்கப்பட்ட அமைப்பியல் விதிகளாக செயல்பட்டிருப்பதை அனுமானிக்கலாம். தொன்மம் என்பது பண்டைய சமூகங்களில் மனிதன் இயற்கையுடன் தன்னை உறவுபடுத்திக்கொள்ள உருவாக்கிக்கொண்ட ஒரு கதையாடலே. இக் கதையாடல்கள்வழி இயற்கையை தன்வயப்படுத்த முனையும் மனிதன்,  இயற்கையுடன் ஆன ஒருவித உறவை ஏற்படுத்திக்கொள்ள முனைகிறான். ஸோமா என்பதுடன் உறவு கொண்டதாக ஆனந்தம் மற்றும் சந்திரன் அதன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இரவு ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டால், மதுவுடன் இணைந்து ஒரு பேரின்பம் என்பதன் உள்ளார்ந்துள்ள இரவு பற்றிய நினைவு முக்கியமானது.

halfcut பார்சிய மதமான ஜொராஷ்டீரியத்தில் அகுரமஸ்தா என்கிற அவர்களது இறைவனுக்கு ஹவ்மா என்கிற இந்த மது படைக்கப்பட்டுள்ளது. இம்மது ருக்வேதத்தில் சொல்லப்பட்ட ஸோமாவின் அத்தனை நற்பண்புகளையும் கொண்டதாக வர்ணிக்கப்பட்டுள்ளது. ஸோமபானம் என்பது நீர், தேன், ஆல்கஹால், புற்கள்,  ஒருவகை காளான் மற்றும் மலைகளில் வளரும் செடிவகைகளிலிருந்து உருவாக்கப்பட்டது. ஸோமா என்பது ஒருவகை தாவரம் என்றும் அது காஷ்மீரி்ல் அதிகம் விளைந்து வந்தாலும் காஷ்மீர் என்பது வேதகால பிராமணர்களின் ஒரு முக்கிய வாழிடமாக இருந்து வந்ததற்கு ஒரு காரணமாக அமைந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது ஒருவகை காளான் என்றும் அக்காளான் பண்டைய சைபீரியாவில் மாந்ரீகச் சடங்கில் பயன்பட்டதாகவும் ஆர். கோர்டன் வாஷன் என்கிற ஆய்வாளர் கூறுகிறார் (11).

ஆக, மதுவிலும் இந்த இறை-மனித வேறுபாடு், முன்வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதாவது வேதகால மதுவில் தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு ஸோமபானம்,  சாதாரண மக்களுக்கு சுராபானம் என்கிற பிரிவு சுவர்க்கத்தில் அளிக்கப்படும் மது பேரின்பத்தையும், உயர் ஞானத்தையும் தரும் தெய்வாம்சம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்கான மது பாவமானதாகவும் கருதப்படும் ஒரு புனைவு நீட்சியாக இருப்பதை அனுமானிக்கலாம். 

சங்ககாலத்தில் யவனர்கள் எனப்படும் கிரேக்க மற்றும் ரோமானியர்களிடமிருந்து தமிழகத்திற்கு மது இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். புறநானூறு விவரிக்கும் ஒரு காட்சி "யவனர் நல்ல குப்பிகளில் கொணர்ந்து தந்த நறுமணம் கமழும் குளிர்ந்த மதுவைப் பொன் வளையல்களை அணிந்த இளம் பெண்கள் பூவேலை செய்யப்பட்ட பொற்கின்னங்களில் ஊட்டுவிக்கின்றனர்" (புறநானூறு - 56) (12). யவனர்கள் இரட்டைப்பிடிக்கொண்ட ஒருவகை மதுச்சாடிகளில் (Amphorae) உயர்வகைத் 'தன்கமழ் தேறல்'களைக் கொண்டுவந்து தமிழகத்தில் இறக்கினர். அவற்றுக்கீடாகத் தமிழகத்து மிளகு, இலவங்கம், கலிங்கம் முதலியவற்றை ஏற்றிக்கொண்டு சென்றனர். அத்தகைய இரட்டைப்பிடி மதுச்சாடிகளின் சிதைவுகளும், கண்ணாடியாலான மதுக்கிண்ணங்களும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன (13) என்கிறார் தமிழாய்வு அறிஞரான கே.கே. பிள்ளை அவர்கள்.

'கள்ளுண்ணும் வழக்கம் பழந்தமிழகத்தில் மிகவும் விரிவாகக் காணப்பட்டுள்ளது. மன்னர், பாணர், புலவர், கூத்தர், பொருநர், விறலியர் அனைவருமே மதுவுண்டு களித்தனர்.  இயற்கையாகக் கிடைத்த பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள் ஆகியவற்றையும், அரிசி, புளித்த சோற்றுக்காடி முதலியவற்றையும் காய்ச்சி இறக்கிய மதுவையும், யவனர்கள் கப்பலில் கொண்டவந்த தேறலையும் அவர்கள் விருப்பத்துடன் குடித்தனர்'. (புறநானூறு 56: மலைபடுகடாம் 522). தேறலின் சுவையையும் , அது கொடுக்கும் வெறியையும் தூண்டுவதற்காக மது வகைகளைக் கண்ணாடி குப்பிகளிலும், மூங்கிற் குழாய்களிலும் நிரப்பி, நெடுநாள் மண்ணில் புதைத்து வைப்பர். (புறம். 392. அகம். 348) அத்தகைய மது வகைகளின் வெறி மிகவும் கடுமையாக இருக்கும். அக் கடுமையைப் பாம்பின் கடிக்கும், தேள் கொட்டுக்கும் (சிறுபாணாற்றுப்படை 237) புலவர்கள் ஒப்பிட்டுள்ளனர். கள்ளுக்கு இன்சுவையும், நறுமணமும் ஊட்டுவதுண்டு. (பொருநராற்று்ப்படை 157). (14) பெண்கள 'காமபானம்' என்ற தனிப்பட்ட மது ஒன்றை அருந்தினர்.(15) சங்ககாலத்தின் இறுதியில் தமிழக மக்களிடையே குடிப்பழக்கம் அளவுக்கு மீறிக் காணப்பட்டது. (16) பெண்கள் நாளங்காடிகளில் கள் விற்பனை செய்துள்ளனர். (17) கரும்பும், அவலும், மான் ஊனுக்கும், கள்ளுக்கும் பண்டமாற்றாக பயன்படுத்தப்பட்டுள்ளது. (பெரும்பாணாற்றுப்படை 161-5) (18). ஈழம் பூட்சி என்கிற கள் இறக்குவதற்கான வரி வசூலிக்கப்பட்டுள்ளது. (19) சங்ககாலத்திற்கு பிந்தைய களப்பிரர் காலத்தில் செழித்தோங்கிய புத்தம் மற்றும் சமணம் ஆகியவற்றால் தமிழகத்தில் கள் அல்லது மது குடித்தல் தீமையாகவும் ஒழுக்கக்கேடாகவும் வலியுறுத்தப்பட்டது. அறம் சார்ந்த இலக்கியங்களான பதினென்கீழ்க்கணக்கு நூல்களும், ஐம்பெருங்காப்பியங்களும் உருவான ஒரு காலம் ஆகும். இச் சூழலில்தான் வள்ளுவர் 'கள்ளுண்ணாமை" என்கிற அதிகாரத்தில் 10 குறட்களை கள்குடிக்கு எதிராக எழுதி உள்ளார்.

பொதுவாக கள்குடி மற்றும் மது அருந்துதலில் புத்தம், சமணம் இரண்டும் அறம் சார்ந்த நிலையைவிட உடல் மற்றும் மனநலம் சார்ந்த நிலையையே எடுக்கின்றன. குறிப்பாக புத்தரால் துறவிகளுக்கு முன்வைக்கப்பட்ட பஞசசீலக் கொள்கையில் ஐந்தாவது கொள்கை குடியை தீமையாக முன்வைக்கிறது. குறிப்பாக மனம் ஒருமை அடைந்து நிர்வான (நிப்பான) நிலையை அடைவதற்கும் எதிரானதாகப் பார்க்கிறது.  சமூக அந்தஸ்த்து சிதைந்து பிக்குகள் மயங்கி கிடக்கும் நிலையை உருவாக்குவதாலும், பேச்சில் முறையற்ற வெளிப்பாட்டை உருவாக்குவதும் குறிப்பாக மனம் கட்டுப்பாடற்றதாக மாறிவிடுவதாலும் புத்தர்  பிக்குகளுக்கு குடியை தடையாக அறிவித்தார். சுக்லோவதா சுத்தா (Sigalovada Sutta) வில் குடியின் தீமைகளாக 6 முக்கிய கருத்துக்களை ஆரியன் ஒருவனின் மகனான சிக்லோவதா என்பவனுக்கு புத்தர் போதிக்கிறார் (20). இறுதியில் அந்த ஆரியன் புத்த பிக்குவாக மாறுகிறான்.

புத்தர் இரண்டு கடைக்கோடி நிலைகளுக்கும் போகாமல் நடுவழி என்கிற மத்திய மார்க்கத்தை போதித்தவர் என்பதால் குடியில் குடியாமை மற்றும் மிகைக் குடிக்கு நடுவில் ஒரு மத்திய வழியாக மிதமானக் குடியை ஏற்கலாம் என்பதான வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன. இந்த அடிப்படையில் தைவான், இலங்கை போன்ற நாடுகளில்கூட புத்தமதத்தை சேர்ந்தவர்களில் ஒரு சிலர் மது அருந்தும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். சுருக்கமாக 'ஒரு சாலையைக் கடக்கும்முன் இருபுறமும் பார்' என்பதுதான் புத்தத்தின் நடுவழிப்பாதை  எனலாம். நன்மை, தீமை துவங்கி எல்லா எதிர்வுகளிலும் இருக்கடைக்கோடியில் ஒரு முனையைச் சாராமல் எது அமைதியை, ஊடுறுவிச் செல்வதை, அறிவொளியைத், விடுதலையைத் தரக்கூடியதோ அந்த பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கண்மூடித்தனமான நம்பிக்கைகளைவிட்டு தேர்வுகள அறிவார்ந்த தளத்தில் செய்யும் படி சொல்கிறது புத்தம் (21). இதில் தனிமனித தேர்விற்கான முக்கியத்துவம் வலியுறுத்தப்படுவதைக் காணலாம்.

புத்தர் தனது போதனைகளை இரண்டு தளங்களில் நடத்திவந்தார். 1. பிக்குகளின் நடைமுறைகள் சார்ந்த நடவடிக்கைகள் பற்றியவை 2. சாதாரண மனிதர்களின் நடைமுறைகள் சார்ந்த நடவடிக்கைககள். பஞ்சசீலக் கொள்கை என்பது பிக்குகளுக்காக போதிக்கப்பட்டது என்பதால் குடியை முழுமையான தீமையாக போதிக்கிறது (22). குடி ஒரு தீமைக்கான வழிமுறையாக பாமரர்களக்கு சுக்லொவ்தா சுத்தாவில் விளக்கப்படுகிறதே ஒழிய அதை தடைசெய்வதைப்பற்றி பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது.  தவிரவும் புத்தர் தனது பிரதான நோக்கமாக முன்வைத்த சமூக மாற்றத்தில் அன்றைய சமூகம் குடியில் மூழ்கி கிடந்த நிலையில் அதனை கடுமையாக எதிர்ப்பது அவரது கொள்கை அடிப்படையாக மாறியதுடன், தனது மார்க்கத்தை அன்றைய பழங்குடி மற்றும் பிரதான மதமாக விளங்கிய ஆரியமதத்திலிருந்து வித்தியாசப்படுத்த குடியை எதிர்ப்பதும் அவசியமாகியது.

wine_6425t குடிகுறிதது விவாதிக்கும் ஒரு புத்த ஜாதகக்கதையில் புத்த வழிப்பாட்டைக் கொண்ட வைசாகா என்ற பெண் 500 பெண்கள் நடத்தும் ஒரு குடி-விழாவிற்கு (drinking festival) புத்தரை அழைக்கிறாள். அவ்விழாவில் பெண்கள் குடித்து புத்தரின் முன் ஆடிப்பாடியும், தன்னை மறந்த நிலையி்ல் குடித்து கூத்தாடுகிறார்கள். புத்தரின் மடத்திற்கு வந்தபிறகும் தான் எங்கிருக்கிறோம் என்பது அறியாமல் ஒருவரை ஒருவர் சண்டையிட்டும் ஆடிப்பாடியும் களிக்கிறார்கள். இந்த சூழலில் புத்தரிடம் குடி பற்றி கேட்கிறாள் வைசாகா. புத்தர் அதற்கு ஆல்கஹால் இயற்கையில் தோன்றிய முறைப்பற்றிய கதை ஒன்றை சொல்வதாகச் செல்கிறது அக்கதை(5). இதில் முக்கிய விடயம் என்னவென்றால், பெண்கள் 500 பேர்கொண்ட ஒரு குழு குடியை விழாவாக கொண்டாடும் ஒரு வழக்கம் இருந்தது என்பதே. அதிலும் பெண்களின் இந்த மெய்மறந்த நிலை என்பது புத்தரின் குடி பற்றிய முடிவிற்கு ஒரு காரணமாக இருந்துள்ளதை உணரமுடியும். புத்த ஜாதகக்கதைகள் புனைவா? நடந்தவையா? என்கிற விவாதத்தைவிட கதையில் நடந்த பெண்களின் இந்த கட்டற்ற களிப்பு ஒரு சமூக சீர்திருத்தவாதியின், ஒரு புதிய வழிமுறையை உருவாக்கிய ஒருவரின் நடைமுறை நிலைப்பாட்டில் ஏற்படுத்திய மாற்றமே முக்கியம். அடிப்படையில் புத்தம் மனதின் விழிப்புநிலை பற்றி பேசுவதால், குடி என்பது மனஒருமைப்பாட்டை சிதைப்பது என்றவகையில் எதிர்ப்பது அதன் அடிப்படை போதனைகளில் ஒன்றாகியதை வரலாற்று அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டி உள்ளது.

இவ்வுலகவாழ்வில் (இம்மையில்) மது என்பதை விலக்கப்பட்டதாக (ஹராமாக) சொல்லும்  இஸ்லாமிய புனித மறையான குரான் உயர்ந்த வகையிலான மயக்கமற்ற, தலைவலிவராத மது சுவர்க்கத்தில் சிறுவர்களுக்கும்கூட அளிக்கப்படும் என்றும் வர்ணிக்கிறது. (குரான்-76:15-19, 43:71-72,  76:5-6, 83:25-28, 56:17-19 மற்றும் 37:45,47). குரான் முன்வைக்கும் பானங்களில் கற்பூரம் கலந்தது மற்றும் இஞ்சி கலந்ததும் என இரண்டுவகையான பானம் பேசப்படுகிறது.  இஞ்சி கலந்த அந்த பானத்தை ஸன்ஜபில் (Zanjabil) என்றும் கஸ்தூரி மற்றும் கற்பூரம் கலந்த முத்திரையிடப்பட்ட கஃபூர் (Kafur) மற்றொரு பானவகையாகவும் சொல்லப்படுகிறது. (23)  இப்பானங்கள் சுவர்க்கத்தில் உள்ள தஸ்லிம் மற்றும் ஸல்ஸபில் எனும் ஊற்றிலிருந்து சுவர்க்கவாசிகளுக்கு வழங்கப்படும் என்கிறது. இதில் இஞ்சி (அரபியில் ஸன்ஜபில் என்பது இஞ்சியைக் குறிப்பதற்கான சொல்லாகும்.) என்பது கீழ்திசை நாடுகளின் மருத்துவத்தில் ஒரு முக்கியமான பொருளாகும். குரானில் இந்தவகைப் பானங்கள் சுவர்க்க வாசிகளுக்கானவையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் தர்க்கரீதியான நீட்சி இப்பானங்கள் இன்பத்தின் அடையாளமாக குறியிடப்பட்டுள்ளது என்பதே. இல்வாழ்வில் மதம் முன்வைக்கும் வாழ்வை வாழ்பவனுக்கு சுவர்க்கத்தில் தரப்படும் இன்பம் இந்த பானங்களே. ஆனால், இன்றைய யதார்த்த வாழ்வில் இந்தவகை பானங்கள் பாவமாக சொல்லப்பட்டுள்ளன. இந்த பாவம் இம்மத இறையியலின் மனித தோற்றத்துடன் தொடர்ந்துவரும் ஒன்று. அடிப்படையில் மனிதவாழ்வே பாவத்தின் விளைவு, இறைவனின் சாபத்தின் விளைவு என்கின்றன இம் மதங்கள்.

புராதன சமூகங்களின் மதம் மற்றும் வழிப்பாட்டில் குடிபானங்கள் ஒரு முக்கியப் பொருளாக இருந்து வந்துள்ளது. இன்றும் கூட கிறித்துவத்தில் திராட்சைரசம் அதாவது ஒயினும், தமிழக நாட்டார் வழிப்பாட்டில் கள், சாராயம் போன்றவையும் வழிப்பாட்டிற்குரிய பொருளாக இருந்து வருகிறது. குடிக்கலாச்சாரம் பல பண்பாடுகளிலும் காணப்படுவதையும், கற்காலம் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை குடியின் வரலாற்றையும் டேவிட். ஜே. ஹான்சன் (David J. Hanson, Ph.D.) என்கிற ஆய்வாளர் தனது History of Alcohol and Drinking Around the World (HADW) என்கிற கட்டுரையில் விரிவாக விவாதிக்கிறார். (அதன் தொகுப்பை பிற்சேர்க்கையில் காண்க.)

------------------------

அடிக்குறிப்புகள்.

9. Studies in Kautilya, by M.V. Krishana Rao, Delhi-1979, quoted from Encylopedia of Hinduism by Nagendra Kumar Singh.
10. Hebrews And Vedic Brahmins -Dr. Samar Abbas, Aligarh, India.
http://www.vnn.org/editorials/ET0307/ET14-8222.html.
11. Wasson, Robert Gordon (1968). "Soma: Divine Mushroom of Immortality". Ethno-Mycological Studies.
12. டாக்டர் கே.கே. பிள்ளை - தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் (மறுபதிப்பு 2007) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - பக்.60.
13. மேற்படி நூல் - பக். 84
14. மேற்படி நூல் - பக். 144. சுட்டப்பட்ட அனைத்து சங்க இலக்கியக் குறிப்புகளும் இந்நூலில் குறிப்பிடப்பட்டவையே.
15. மேற்படி நூல் - பக். 355
16. மேற்படி நூல் - பக். 144
17. மேற்படி நூல் - பக். 152
18. மேற்படி நூல் - பக். 153
19. மேற்படி நூல் - பக். 315
20. Sigalovada Sutta - The Discourse to Sigala - The Layperson's Code of Discipline Translated from the Pali by Narada Thera (
http://www.accesstoinsight.org/tipitaka/dn/dn.31.0.nara.html)
21.Fundamentals of Buddhism Four Lectures by Nyanatiloka Mahåthera - The Wheel Publication No. 394/396
22. The Bhikkhus' Rules - A Guide for Laypeople - The Theravadin Buddhist Monk's Rules compiled and explained by Bhikkhu Ariyesako (
http://www.accesstoinsight.org/lib/authors/ariyesako/layguide.html )
23. சோழர்காலத் தமிழர்கள் பழச்சாற்றில் இஞ்சியை ஊறவைத்து குடித்துள்ளனர் (கே.கே. பிள்ளை-பக். 348). கற்பூரத்தை வெற்றிலையுடன் மெல்லம் பழக்கமும் இருந்துள்ளது (பக்.355)

பின் குறிப்பு:

நண்பர்களுக்கு.. இந்த தொடரை துவங்கியவுடன், குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூலை வெளியிடும் புலம் பதிப்பகத்தின் நண்பர் லோகநாதன் அவர்கள், இந்நூல் அச்சுப்பணிகள் முடிந்துவிட்டதால் ஓரிரு வாரங்களில் வெளிவருகிறது என்றும், எனக்கு நண்பர் மூலம் தகவல் வந்திருக்கும் என்று எண்ணியருந்ததாகவும் அஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். நூல் வெளிவருவதால், அடுத்த பகுதிகள் நூல் வெளிவந்தபின் வெளியிடலாம் என்று தற்காலிகமாக நிறத்தப்படுகிறது. இதற்கு பின்னோட்டம் இட்ட ஆர்வம் உள்ள நண்பர்கள் மற்றும் மெளனமாக வாசித்த நண்பர்களுக்கும் இங்கு நூல் குறித்த குறிப்புகளை வெளியிடுகிறேன். இத்தொகுப்பு நூலில் மற்றும் சில நண்பர்கள், தமிழக அறிவுஜீவிகளால் எழுதப்பட்ட கட்டுரைகள் வெளிவருகிறது என்பதையம் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகத்தின் தலைப்பு : 'குடி'யின்றி அமையா உலகு
தொகுப்பாசிரியர்: முத்தையா வெள்ளையன்
வெளியீடு: புலம்
332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை 600 005
கைபேசி: 097898 64555.

- ஜமாலன் (ஆகஸ்ட் 24 2009)


®ு®®®்®®®®்®®®®®ு®®் ®®®®்®®®®்®ு®®®®ு®®் –®®ு®®:2

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி-1.

hetairae ஆப்ரஹாமிய மதங்களான யூத - கிறித்துவ - இஸ்லாமிய ஆதித்தொன்மமான ஆதாம் - ஏவால் கதையாடலை எடுத்துக் கொள்வோம்.  இறைவன் ஆதாம் ஏவாலை படைத்தபின் அவர்களிடம் கூறும் முதல் கட்டளை ஒருகுறிப்பிட்ட மரத்தில், அதாவது அறிதலைத் தருக்கூடிய மரத்தில் (tree of knowledge) உள்ள கனியை உண்ணக்கூடாது என்பதுதான்.  இதில் ஒரு கோட்பாட்டு உள்ளடக்கப் பட்டுள்ளது. அது மனிதமனம் எதிர்மறையில்தான் கட்டமைக்கப்படுகிறது என்பதுடன், அறிவைப்பெறுதல் என்பதே இறைவனால் விலக்கப்பட்டதாக குறியிடப்பட்டுள்ளது. அதாவது அறிவிலிருந்து விலகிச்செல் என்பதுதான் இறைவனின் முதல் கட்டளை. செய் என்பதல்ல செய்யாதே என்பதுதான். இந்த தொன்மத்தின் மற்றொருக்கூறு அந்த விலக்கப்பட்ட கனியை சாத்தான் பாம்பு உருவெடுத்து ஏவாலின் காதில் உண்ணும்படி சொல்கிறான். இங்கு சாத்தானின் கட்டளை செய்யாதே என்பதல்ல, செய் என்பதுதான். இறைவன் விலக்கு என்றால் சாத்தான் உடன்படு அதாவது ஏற்றுக்கொள் என்கிறது.

பாம்பு ஆதிகாலந்தொட்டு வரும் எல்லா பெருமதங்களிலும் பல வடிவங்களில் உள்ளடக்கப்பட்ட ஒரு தொன்மக் குறியீடாகும். பாம்பு என்பது லிங்கத்தைக் குறிக்கும் அதிகாரத்திற்கான ஒரு தொல்மனப்படிவம் என்பதாகக் கொண்டு ஏவாலிற்குள் ஏற்பட்ட இச்சையின் ஒரு குறியீட்டு வடிவமாக அதனை வாசிக்க  முடியும். எது எப்படியானாலும், ஏவால் அக் கனியை உண்ணுகிறாள், அவளது அந்த முதல் பாவத்தை ஆதாமும் ஏற்கிறான். உடனே அவர்களிடம் அம்மணம் பற்றிய வெட்க உணர்வும் அதாவது இறைவனின் படைப்பான அவர்களிடம் தனித்ததான ஒரு தன்னுணர்வும் வருகிறது. இங்கு அறிவும், பாலுந்தமும் நுட்பமாக இணைவதைக் காணலாம். இக்கணத்திலிருந்து அறிவு எந்திரம் என்பது இயங்கத் துவங்குகிறது.  அறிதல் என்கிற மரத்தின் கனியை புசித்தபின் நல்லது கெட்டது பற்றிய அறிவு ஏற்படுகிறது. இதன்பொருள் நல்லது கெட்டது என்பதை அறிவதே இறைவனால் விலக்கப்பட்டுள்ளது என்பதும், அது சாத்தானின் சதிச்செயல் என்பதுமே. ஆக, நல்லது, கெட்டது மற்றும் நன்மை, தீமை என்பதான எதிர்மைகள் எல்லாம் சாத்தனின் செயல் என்பதான ஒரு உள்ளர்த்தம் இதில் உள்ளது. 

2009009 இந்த மீறலுக்காக இறைவனால் அவர்கள் சபிக்கப்படுகிறார்கள். சுவர்க்கத்திலிருந்து நீக்கப்பட்டு பூமியை அடைகிறார்கள். பசி,  பாலியல் என்கிற இயல்புந்துங்கள் இயங்கத் துவங்குகிறது. இறைவனின சாபம் இவை இரண்டினை அடைவதற்காக நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும்படி அவர்களை துரத்துகிறது. வாழ்க்கை எனும் ஆதித்துயர் இப்புள்ளியில்தான் துவங்குகிறது. ஆக, வாழ்க்கையின் துவக்கம் இறைவனின் விலக்கத்திலிருந்தும், சாத்தானின் உடன்படும் ஆற்றலிலிருந்தும் துவங்குவதாக இக்கதையாடல் உள்ளது. இறைவன் உயிர்த்தலுக்கான மூலம் எனில் சாத்தான் வாழ்தலுக்கான மூலமாக உள்ளான். ஆக, தன்னை உணர்தல், அறிதலைப் பெறுதல் ஆகியவற்றின் வழியாக வாழ்தல் என்கிற தொழில்நுட்பம் இயங்கத் துவங்குகிறது. வேறுவிதமாகச் சொன்னால் இன்று நாம் வாழ்வதே சாத்தானின் சதிச்செயலால் விளைந்தது என்பதே. ஆக, தன்னை அறிதல் என்பதே இறைவனுக்கு எதிரான சாத்தனின் ஒரு சதித்திட்டம்போல சொல்லப்படுகிறது இக்கதையாடலில்.  இதன் எதிர்நிலையில் தன்னை மறத்தல் என்பது இறைநிலை எனச் சொல்லலாம். ஆதிச் சமூகங்களிலிருந்து இந்த இறைநிலைக்கான கூறுகளாகத்தான் மது குடித்தல் என்கிற செயல் இறைவழிப்பாட்டுடன் இணைந்து வந்துள்ளது. இறையின்பம் என்கிற தன்னை மறத்தல் என்கிற அந்த பேரின்ப நிலைக்கான உணர்வுக் கற்பிதம் இந்த குடிக்கலாச்சாரத்திலிருந்தே வந்திருப்பதற்கான வாய்ப்பு ஒரு மிகைக் கூற்றாகாது. பண்டைய சீனர்கள் மதுவை ஆன்மீக உணவு (spritual food)  என்றதைப்போல (6) ஆன்மீக உணர்வின் ஒரு புனைவு வடிவமாக உள்ளது மது தரும் தன்னை மறத்தல் எனும் போதை எனலாம். தன்னை மறத்தலுக்கு தள்ளும் இந்த குடிக்கலாச்சாரம் மட்டும் ஏனோ சாத்தானின் நிலையாக ஒரு முரண்நிலைக் கதையாடலாக கட்டமைக்கப் பட்டுள்ளது. தெளிவாக ஒரு கட்டத்தில் புனிதமறைகள் இநத குடிக்கலாச்சாரத்தை பாவமாகவும், சாத்தானின் செயலாகவும் அறுதியிடுகின்றன. "பாவம்" என்பது ஹீப்ரு மற்றும் கிரேக்கத்திலிருந்து பைபிள் வழியாக கிறித்தவத்தில் அறிமுகமான கருத்தாக்கமாகும். இதற்கான பொருள் 'சிறப்பை இழந்தது' (missing the mark) என்பதே. பாவம்-புண்ணியம் என்கிற கருத்தாக்கமற்ற புத்தமதம் பாவம் என்பதை 'திறமையற்ற செயல்' (akusala kamma-unskilled action) என்கிறது (7).

இந்திய வேதங்கள் 14 வகை மனுக்கள் தோன்றியதாகவும் ஒவ்வொரு மனுவின்6a00d8341c509553ef00e551cf6ba68834-800wi தோற்றத்திலிருந்து மனிதகுலம் உருவானதாகவும், இன்றைய மனிதகுலம் 7-வது மனுவிலிருந்தும் உருவானது என்கிறது.  இத்தொன்மத்தை எடுத்துக் கொண்டாலும், வேதகாலத்தில் அனுமதிக்கப்பட்ட குடி மனுவால் முன்வைக்கப்பட்ட தர்ம சாத்திரத்தில் மறுக்கப்படுகிறது.  மக்களை அடிமையாக்கும் தன்மைகளைக் கொண்டதாகவும் குறிப்பாக மன்னர்களை அது அடிமையாக்கும் பண்பு கொண்டது என்கிறது. கெளடில்யரின் அர்த்தசாத்திரம் இக்குடிக்கலாச்சாரத்தின் தீமைகளைப் பட்டியலிட்டவிட்டு அதை சமூக வெளியிலிருந்து சட்டத்தின் எல்லைக்குள்ளும், அரசமைப்பிற்குள்ளும் கொண்டு செல்கிறது. குடியை அற அடிப்படையில் மட்டும் பார்க்காமல் அதன் பொருளாதாரம் பற்றிய நுட்பமாக சிந்தித்து அதனை அரசின் கஜானாவை நிரப்பும் ஒரு வணிக நடவடிக்கையாக மாற்றுகிறது. குடி ஒரு "வியாஷனா" (addiction) எனப்படும் அடிமையாக்கும் நடவடிக்கை என்றாலும் அதனை  வேரோடு கிள்ளி எறிவது சாத்தியமில்லை என்பதால் சட்டம் மற்றும் அரசின்மூலம் கட்டுப்படுத்த முடியம் என்கிறது அர்த்தசாத்திரம். மிகைக்குடியை தடைசெய்து தண்டனைக்குரிய குற்றமாகவும், அதனை கண்காணிக்க சுராதயக்ஷா என ஒரு கண்காணிப்பாளரையும் அவருக்குகீழ் அதயாக்ஷா எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைத்து சமூகமெங்கும் குடி குறித்த கண்காணிப்பு வலையை விரிக்கிறது.

மதுபானங்கள வடித்தெடுத்து அதனை கோட்டையிலும் மற்றும் நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே என்று மதுவணிகத்தை அரசுடைமையாக்கியது. அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டடைவதற்கும் அவர்களக்கு தண்டனை வழங்குவதும்தான் மேற்கணட குழுவின் பணி. இக்குழு சமுகமெங்கும்09 கண்காணித்து மது குடிப்பதை ஒழுங்கமைத்தது. மது அருந்தும் உயர்குடியினர் (nobels) கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். மது அருந்துவதற்கு என அரசு கட்டுவித்துள்ள கட்டிடங்களில் மட்டுமே மது அருந்த வேண்டும். அந்நியர்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் இருந்துள்ளது. இந்த இல்லங்களின் தலைவர் மது விற்பனை செய்யக்கூடாது. இன்றைய “பார்“-கள் போன்று இயங்கி வந்துள்ள பகுதிகளில் மட்டுமே குடிக்க அனுமதியிருந்துள்ளது.  பாழடைந்த மதுவை தனியாக பிரித்து விற்பதற்கு என தனியிடங்கள் இருந்துள்ளன. இப் பாழடைந்த மது மக்களுக்கு வழங்கப்படுவதில்லை, அது அடிமைகள் மற்றும் கூலிகளுக்கோ அல்லது பன்றிகளுக்கோ மட்டுமே வழங்கப்பட்டது.  விழாக்காலங்களில் 4 நாட்களுக்கு மட்டும் மது காய்ச்சவும் குடிக்கவும் தடை விலக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் வீடுகளில் காய்ச்சி குடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்களிலும் அனுமதியில்லாமல் பொது இடங்களில் மது காய்ச்சினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  அர்த்தசாத்திரம் மேதக்ஸ் (medaks), பிரசன்ன (prasanna), அஷாவா (asava), அரிஸ்த்தா (arista), மைரிய்ய (maireya) மற்றும் மது (madhu-திராட்சை மது - ஒயின்) என்கிற வகைகளைப்பற்றிப் பேசுகிறது. இவற்றை தயாரிக்கும் முறைகளைப்பற்றியும் விளக்கியுள்ளது (8). இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தற்சமயம் 'டாஸ்மாக்' என்கிற மதுவிற்பனை அங்காடிகள் இந்த அடிப்படைகளில் நிலவுவதை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

உலகின் பல கலாச்சாரங்களிலும் காணப்படும் இந்த குடி என்கிற செயல் ஒரு சமூகTWN_history_of_wine_ancient_jars_0309_01 நடவடிக்கையாக பண்பாட்டு நடவடிக்கையாக இருந்து வந்துள்ளது. இன்னொருபுறம் அரசின் வருமானமாகவும், ஒற்றறிவதற்கான தொழில்நுட்பமாகவும் இருந்து வந்துள்ளது. இன்றும்கூட இப்பண்பாடு மேற்றிசை நாடுகளில் பரவலாக உள்ளது. இந்தியாவில் இப்பண்பாடு ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைமுறையில் உள்ளது. குடியில் சிறுபான்மையாக உள்ள மிகைக்குடி என்கிற செயலால் ஏற்படும் சீரழிவுகளும், சமூக ஒழங்கு குலைவும் ஒட்டுமொத்தமாக குடிக்கலாச்சாரத்திற்கு எதிரான வாதமாக முன்வைக்கப்படுகிறது. குடிப்பது ஒரு அறம் சார்ந்த பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது. சமூக ஒழுங்கை காப்பதற்கு குடியைக் கட்டுப்படுத்தும் நிலையை அரசதிகாரம் கையிலெடுக்கிறது. ஆக, குடிகலாச்சாரம் ஒரு சமூக நடவடிக்கையாகவும், பண்பாட்டு நடவடிக்கையாகவும் இருப்பதால் அதன் அரசியல் குறித்து சமூகவரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்வது அவசியம்.

--------------------------

அடிக்குறிப்புகள்.

5. Kumbha Jataka — The Fifth Precept (Jat 512) (http://www.accesstoinsight.org/lib/authors/kawasaki/bl142.html) - இக்கதையில் சுரா என்கிற வேடன் இயற்கையாக ஒரு மரத்தின் குழிவான பகுதியில் தேங்கிய மழைநீரில் பறவைகளால் போடப்பட்ட பழங்கள் மற்றும் தானியவகைகளால் ஊறலடைந்து வெயிலில் காய்ச்சப்பட்டு உருவான மது பற்றிய கதையும் அது வாரனாசி மற்றும் காசியில் பரவி ஒரு வியாபாரப்பொருளாக மாறியதும் பேசப்படுகிறது.

6. David J. Hanson, Ph.D.History of Alcohol and Drinking Around the World (HADW)

7. Buddhism and Sex by M. O’C. Walshe - Buddhist Publication Society

Wheel Publication No. 225 (Reprinted 1986)

8. Encyclopaedia of Hinduism - By Nagendra Kumar Singh- page-812-815.

(பகுதி:3 – மது குறித்து இந்திய மதங்கள் .. தொடரும்) 

-ஜமாலன் (ஆகஸ்ட் 16  2009)


®ு®®®்®®®®்®®®®®ு®®் ®®®®்®®®®்®ு®®®®ு®®் – ®ு®்®ு-1.

alcohol---- இக்கட்டுரை 10-09-2008 ல் நண்பர் ஒருவரின் குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றிற்காக எழுதப்பட்டது. அந்நூல் இதவரை வெளிவந்ததற்கான குறிப்புகள் எதுவும் தெரியவில்லை. ஒருவேளை கட்டுரையின் அலுப்பூட்டும் ஆய்வுமுறை ஏற்படுத்திய சுவராஸ்யமின்மை இதனை வெளியிடுவதற்கு அவருக்கு தயக்கத்தை ஏற்படுத்தியருக்கலாம். அதனால் அதை சொல்லத்தயங்கி, நூல் வெளிவந்த குறிப்பு தெரிவிக்கப்படாமல்கூட இருந்திருக்கலாம். எப்படியோ, இதனை இங்கு வெளியிடுவதன் வழியாக 2 மாதங்கள் உழைப்பையும் நேரத்தையும் தின்ற இக்கட்டுரையினை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே. கட்டுரையின் நீளம் கருதி, பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது, படிப்பதற்கு வசதியாக. ----

“மருத்துவ நிறுவனங்கள் ஆரோக்கியத்தின் மிகப்பெறும் அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிருக்கின்றன.”- இவான் இலிச். (Limits to medicine: medical nemesis, the expropriation of health. New edition. London: Boyars, 1976.)

சுற்று -1. அறிமுகம்

பதினைந்து வயதில் கொள்ளையில் இறக்கப்பட்ட ஒரு மரத்து தென்னங்கள்ளை  பகிர்ந்து கொண்டு காதலுடன் குடியைத் துவக்கி வைத்த  இனிய தோழியின் நினைவுடன் இதனை எழுதத் துவங்குகிறேன். குடிக்கலாச்சாரம் என்பது ஒருவகையான சொல்முரணணி (oxymoron) போலத் தொன்றலாம். காரணம் குடி அல்லது குடித்தல் என்பது கலாச்சாரத்திற்கு எதிரானதாக குறியிடப்பட்ட ஒரு சமூக அமைப்பில் நாம் வாழ்வதும், ஒன்றோடொன்று முரணாண இரண்டு சொற்களாக இவை பொருள்கொள்ளப்பட்ட ஒரு மொழியமைப்பில் வசிப்பதுமே. ஆனால், குடி என்பது கலாச்சார வளர்ச்சியுடன் இணைந்தே வளர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு உடலும் பொருளுற்பத்தி என்கிற உழைப்பிலும், சமூக உற்பத்தி என்கிற இனபெருக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதுடன் தனது எஞ்சிய நேரத்தை, தன்னை மறுஉற்பத்தி செய்துகொள்வதற்காகவும், தன்னை புணரமைத்துக் கொள்வதற்குமான மகிழ்விற்கான செயலில் ஈடுபடுவதை அதாவது ஓய்வு என்று இன்று அறியப்படும் ஒரு நிலையில், அந்த நேரத்தை இன்ப-நுகர்ச்சிக்கானதாக மாற்றுவதற்கான ஒரு நுட்பமாக கண்டடையப்பட்டதே இந்த போதை தரும் குடித்தல் என்கிற செயல்.  சமூகத் தோற்றத்திற்கு முன்பான ஆதிக்குடிகளாக வாழந்த குழுச் சமூகங்கள் காலந்தொட்டே குடி என்பது இருந்து வந்துள்ளதை வரலாற்றில் படிக்கிறோம். இந்திய வரலாற்றில் வேதகாலம் முதல் குடி என்கிற பொருளில் பயன்படுத்தப்படும் போதைதரும் அல்லது மயக்கமூட்டும் பானங்கள் இருந்து வந்துள்ளது. பண்டைய தமிழர்களிடம் தேறல் எனப்படும் கள் என்கிற மதுவகையும், மற்றும் ரோம், கிரேக்கத்திலிருந்து தருவிக்கப்பட்ட மதுவகைகளும் இருந்து வந்துள்ளன.

போதை என்கிற சொல் 'போதம்' என்கிற மனித உடலின் உணர்வுப் புள்ளியின் மையத்தைக் குறிக்கும் சொல்லினடியாகத்தான் வந்திருக்க வேண்டும். இந்த போதம் சிதைவுறும் ஒரு பித்துநிலையே போதை எனப்படுகிறது. இந்தவகை மெய்மறத்தல் என்கிற போதையை தரும் பானங்கள் மற்றும் புளிக்கச் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட பழரசங்களை குடிக்கும் ஒரு வழக்கத்தை மற்றும் பழக்கத்தையே குடிக்கலாச்சாரம் என்கிற சொல்லாக புரிந்துகொண்டு இங்கு பாவிக்கிறேன்.

குடிபானங்களை தமிழில் மது என்கிற சொல்லால் குறிக்கிறோம். இச்சொல் அர்த்தசாத்திரத்தில் சொல்லப்பட்ட 6 வகை குடிபானங்களில் ஒன்றான மது என்கிற ஒரு பிரத்யேக வகையிலிருந்து ஆளப்பட்டு வந்திருக்கலாம். அல்லது சமஸ்கிருதத்தில் இனிமையைக் குறிக்கும் “மதுரம்“ என்கிற சொல்லினடியாக வந்திருக்கலாம். அல்லது வேதக்கடவுளர்களில் ஒருவனான உலகில் இன்பத்தை தரும் மன்மதன் என்கிற காமக்கடவுளின் நினைவடிப்படையில் வந்திருக்கலாம்.  இதனுடன் பாலின்பத்திற்கான பெண் உடலின் ஒரு பகுதியை “மதனபீடம்“ என்கிற சொல்லால் குறிப்பதையும் இணைத்துக் காணலாம். மது என்பது அதன் சொற்பொருள் அடிப்படையில் இன்பத்துடன் இணைந்தே அறியப்பட்டிருக்கிறது.  மது தயாரித்தல் என்பதுதான் வேதியியலின் முதல் தொழில்நுட்பமாக இருந்திருக்கிறது. இந்திய தத்துவ விவாத்தில் பஞசபூத கோட்பாட்டை முன்வைத்த லோகாயுதவாதிகள் உயிர் தோற்றம் பற்றிய சான்றாக கள்ளின் அதாவது மதுவின் நொதித்தல் பற்றியும் இயக்கமற்ற (அசேதனமான) ஒன்றிலிருந்து இயக்கமுள்ள (சேதனமான) ஒரு உயிர் தோன்றுவதைப்பற்றியும் வியப்பூட்டும் விவதாங்களை முன்வைத்துள்ளதை சட்டோபாத்யாவின் 'இந்திய தத்துவஞானத்தில் நிலைத்திருப்பனவும் மறைந்துபோனவையம்' என்கிற நூல் விவரிக்கிறது. உயிரை படைக்க ஒரு படைப்பாளித் தேவையில்லை, அது பொருட்களின் கூட்டிணைவால் உருவாகும் ஒன்றே என்பது கடவுளின் படைப்புக் கொள்கைக்கான எதிர்-வாதமாக முன்வைக்கப்பட்டுள்ளதை படிக்க முடிகிறது. நாள்பட்ட உணவுப்பொருட்கள் நொதித்து அதிலிருந்து உயிருள்ள புழுக்கள் தோன்றுவதைப்போல, ஈஸ்ட் எனும் பொருள் நொதித்த கள்ளில் உருவாகி மனித உடலுக்குள் சென்று மனிதனை தன்னிலை மறந்து இயங்க வைப்பதை சான்றாக காட்டி இந்த விவாதம் முன்வைக்கப்பட்டது. 

குடியின் அடிப்படையான மதுபானங்களில் கலந்துள்ள ஆல்கஹால் எனப்படும் எத்தனால்4b0c2f94552f6481ccaff102884ae586-grande என்ற வேதிப்பொருளே ஒரு பானத்தை மதுவாகவும் மற்றதாகவும் மாற்றுகிறது. ஆல்கஹால் என்ற சொல் அரேபிய மொழியில் வழங்கப்பட்ட ”அல்-கோஹல்”(al-kuhul) எனப்படும் கண் மையாகப் பயன்படும் ஒருவிதப் பொடியைக் குறிக்கும் சொல்லாகும்.  இதை இந்திய இஸ்லாமியர்கள் ”சுர்மா” என்பார்கள். பண்டிகை நாட்களில் இதனை பயன்படுத்துவது சுன்னாவாகவும் (நபிவழியாக) கருதப்படுகிறது.  சங்ககாலததில் தமிழிலும் 'பெண்கள் கண்ணுக்க மைதீட்டும் குச்சிக்கு 'கோல்' என்ற பெயர் வழுங்கப்பட்டுள்ளது. (1) நுண்ணிய பொடிகளைக் குறிக்கும் இச்சொல் மத்தியகால ஐரோப்பாவின் ரசவாதிகள் வடித்தெடுக்கும் எல்லாவித வேதிப்பொருளுக்கும் பயன்படுத்தத் துவங்கினர். இதுவே தற்காலத்தில் வடித்தெடுக்கப்படும் போதை துரும் வேதிமத்திற்கான பொதுச் சொல்லாக பாவிக்கப்படுகிறது. இந்த ஆல்கஹாலில் ஒருவகையான “எத்தனால்“ என்பதுவே மதுபானங்களில் பயன்படுத்தப்படுகிறது. பண்டைய காலங்களில் கரும்புச் சாற்றிலிருந்து பிரிக்கப்படும் சர்க்கரையிலிருந்து இது பெறப்பட்டது.  சில சமூகங்கள் பழங்கள், அரிசி, பார்லி, கோதுமை மற்றும் பால் போன்ற பொருட்களைக்கூட நொதிக்கவைத்து அதிலிருந்து போதை தரும் மதுவகைகளை தயாரித்துள்ளனர். அதன்பின் தேன் மற்றும் பழச்சாறுகளிலிருந்து மதுபானங்கள் வடித்தெடுக்கப்பட்டன.

8-ஆம் நூற்றாண்டில்தான் அரேபியர்கள் முதன்முதலாக ஒயின் தயாரிக்கும் ஒரு வேதியியல் முறையை உருவாக்கினார்கள்.  இஸ்லாம் ஒயினை தடை செய்திருந்தபோதிலும் அது குறித்த வேதியியலை வளர்த்தெடுத்தவர்கள் இஸ்லாமிய அரேபியர்களே (2). வடித்தெடுக்கப்பட்ட ஒயினை அரபியில் “அராக்“ (araq) என்கிற வியர்த்தல் எனகிற பொருள்தரும் சொல்லால் குறிப்பிட்டுள்ளனர். இந்த அராக் என்கிற சொல்லே சாராயம் என்கிற பொருளில் இன்று பயன்பட்டு வருகிறது. துளித்துளியாக வடித்தெடுக்கப்படும் சாராயம் என்பது 13 மற்றும் 14-ஆம் நூற்றாண்டில் மேற்றிசை நாடுகளில் பரவியது் (3).  14-ஆம் நூற்றாண்டில் அரேபியாவிலிந்து ஆல்கஹால் மத்தியதரைக்கடல் நாடுகள் முதல் ஐரோப்பியா வரை  ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.  வடித்தெடுக்கப்பட்ட ஒயின் கிழக்கு மற்றும் மேற்குலக நாடுகளால் அராக் என்கிற சொல்லாலேயே பாவிக்கப்பட்டது. இன்று ஆங்கிலத்தில் சாராயத்தை குறிக்க அரபி மூலத்திலிருந்து பெறப்பட்ட அராக் (arrack) என்கிற சொல்லே பயன்பட்டு வருகிறது. ஆக மேற்குலகிற்கு அரேபிய ரசவாத மரபின் தொடர்ச்சியாக உருவான ஒயின் வடித்தெடுக்கும் தொழில்நுட்பம் பரவியது (4)  இத் தொழில்நுட்பமே வேதியியலின் வளர்ச்சிக்கான அடிப்படையாக அமைந்தது.

ஆல்கஹால் என்கிற வேதிப்பொருளே மதுவின் அடிப்படையாக உள்ளது. பண்டைய சமூகங்களில் இது இயற்கை முறைகளில் பெறப்பட்டது. தற்போதைய நவீன சமூகங்களில் இவை வேதியில் தொழிற்கூடங்களினால் பெறப்படுகிறது. ஆல்கஹால் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கான வரலாறு இல்லை. புத்த ஜாதகக் கதை ஒன்றில் புத்தர் ஆல்கஹால் இயற்கையில் தோன்றிய முறைப்பற்றி கூறுகிறார்.(5) ஆயினும், ஆல்கஹால் என்கிற தொழில்நுட்பம் மனிதனின் உணவுக் கலாச்சார வளர்ச்சியின் ஒரு பண்புரீதியான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இயற்கையில் உள்ள பச்சை உணவை வேகவைத்து கலாச்சாரமயப்படுத்தியும், சமூகவயப்படுத்தியும் உண்ணத் துவங்கியது எப்படி தற்செயலாக அமைந்ததோ அதுப்போன்றே நொதித்தல் என்கிற செயலும் தற்செயலாக கண்டைடைந்த ஒரு நுட்பம் எனலாம். நொதி்த்தல் என்கிற இச்செயலின் விளைவாக உருவான மதுபானங்கள்,  உணவுடன்  கலாச்சாரமயப்படுத்தலுக்கும், சமூகவயப்படுத்தலுக்கும் உள்ளாகி மாறிவந்துள்ளது. உணவைப்போல மதுவும் உலகின் எல்லாக் கலாச்சாரங்களிலும் ஒரு முக்கியமான அங்கம் வகித்து வந்துள்ளது. மதங்களின் அப்பாலை உலகு பற்றிய கற்பிதமே குடிக்கலாச்சாரத்தின் அடிப்படையில் புனையப்பட்டது என்பது மிகைக் கூற்றாகாது.

முதலில் மதுவை கண்டடைந்த மனிதன் அதன் போதை தரும் எக்களிப்பினை, கட்டற்ற மகிழ்வை இறைவனின் வரமாக கருதத் துவங்கி அதன்மேல் இறைசார்ந்த தொன்மங்களை உருவாக்கி இருக்கவேண்டும். இறைவனின் கொடையாகக் கருதப்பட்ட மதுவே இறைவனின் பிரியத்திற்கு உரியதாகவும், அதனை அருந்துவதன்மூலம் இறைவனின் அருகில் செல்ல முடியும் என்கிற நம்பி்க்கையுமே இந்த தொன்மங்களின் அடிப்படை எனலாம். ஒரு குழுத்தன்மையையும் கூட்டுவாழ்வின் உணர்வையும் தரும் இந்த மது அருந்தும் நிகழ்வுகள் மனிதனின் இயற்கைமீதான அச்சத்தை போக்கக் கூடியதாகவும், இறைவன் இம்மதுவின் வழியாக அவனுக்குள் இயங்குவதாகவும் ஆன தொன்மமாகவே, பண்டைய சமூகங்களில் “சாமன்ஸ்“ எனப்படும் மந்திரவாதிகள் மது அருந்தி குறி சொல்வதும் இறைவழிப்பாட்டை தலைமை ஏற்று நடத்துவதும் நிகழ்ந்துள்ளது. இந்த மதுவே மயக்க மருந்தாகவும், வலிநிவாரணியாகவும், மருத்துவக்குணம் கொண்டதாக பயன்பட்டு வந்துள்ளது. தன்னால் உணரமுடியாத ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லும் மதுவை இறைவனின் கொடையாகவும், அதன் போதைதரும் எக்களிப்பால் தன்னை மறத்தலில் இறைத்தன்மையையும் கண்டடைந்ததின் தர்க்கம் இதுவாகத்தான் இருக்க முடியும்.     

ஆக, ரொட்டி அல்லது உணவு தயாரிக்க கற்றுக்கொண்ட மனிதகுலம் அதனுடன் மதுவை வடித்தெடுக்கும் முறையையும் அறிந்து வந்துள்ளது. தோன்றிய காலத்தில் மது தெய்வீக அம்சம் பொருந்தியதாகவும் தெய்வ வழிப்பாட்டிற்குரியதாகவும் இருந்ததை புராதன சிலைவழிப்பாட்டு சமூகம் (பேஜன்ஸ்) துவங்கி கிரேக்க, பாபிலோனிய, ரோம, பாரசீக, எகிப்து மற்றும் இந்திய வேதகாலம் வரை காண்கிறோம். இது நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்களின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் விலக்கப்பட்டதாகவும் பாவமாகவும் மாற்றப்படுகிறது. இம்மாற்றத்திற்கு முக்கிய காரணங்கள் மதங்களும், மதங்களின் அதிகாரத்தைப் பிடித்த 18-19-ஆம் நூற்றாண்டின் தொழிற்சமூகங்கள்தான் என்பதில் இரு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. இம்மதங்கள் மற்றும் அரசதிகாரமும் இணைந்து குடியை ஒரு பாவமாகவம் சட்ட சம்பந்தப்பட்டதாகவும் மாற்றுகிறது.  ஆக, குடிக்கலாச்சாரம் மனித உடலின் குழு வாழ்க்கையுடன் துவங்கி நாகரீக சமூக வரலாற்றுடன் பல வடிவெடுத்து வளர்ந்து வந்துள்ளது.

(சுற்று-2 மதங்களும் மதுவும். -  தொடரும்)

---------------

அடிக்குறிப்புகள்

1. டாக்டர் கே.கே. பிள்ளை - தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் (மறுபதிப்பு 2007) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - பக்.148.
2. ஜாபிர் இபுன் ஹையன் (கி.பி. 721-815) என்பவர் குளிர்வித்தல் முறைமூலம் ஆல்கஹாலை பிரித்தெடுக்கும் நுட்பம் பற்றி தனது நூலில் விவரித்துள்ளார். வடித்தெடுக்கப்பட்ட ஒயின் ஜாபரின் காலம் முதல் பல அரேபிய நூல்களிலும் மற்றும் ரானுவ ஆய்வுக் கட்டுரைகளில் விவரிக்கப்பட்டுள்ளது.  வடித்தெடுத்தப் பிறகு ஒயின் ஈரத்தன்மையுடன் ரோஸ்வாட்டரைப் போன்ற நிறத்தில் இருப்பதாக அல்கிந்தி (கி.பி. 873) என்பவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.  அல்-பராபி (கி.பி. 878-950) என்பவர் சல்ப்பரை வடித்தெடு்க்கப்பட்ட ஒயினில் சேர்ப்பதைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.   வெள்ளை திராட்சையிலிருந்து வெனிகர் வடித்தெடுக்கும் முறையிலிருந்து ஒயின் வடித்தெடுக்கும்முறை பற்றிக் குறிப்பிட்டுள்ளார் அபு-அல்-கசீம்-ஜாக்ரவி (கி.பி. 1013).History of Science and Technology in Islam (
http://www.history-science-technology.com/Notes/Notes%207.htm)
3. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹிக்கயாத் அபு அல்-காசிம் அல்-பக்தாதி என்பவர் அராக் என்கிற இச்சொல்லை முதன்முதலாக பயன்படுத்தி உள்ளார். சிரியா நாட்டினர் அராக் என்கிற சொல்லையே ஒயினிற்கும் பயன்படுத்தியுள்ளனர். History of Science and Technology in Islam (http://www.history-science-technology.com/Notes/Notes%207.htm)
4.  Islamic Technology, an illustrated history, Al-Hassan & Hill, UNESCO CUP, 1986, and from The Different Aspects of Islamic Culture, Science and Technology in Islam, Vol. 4, Part II, UNESCO, 2001.

பின்குறிப்பு: சமீபத்தில் காலச்சுவடில் சுகிர்தராணி எழுதிய குடிக்கலாச்சாரம் பற்றிய கட்டுரை facebook ல் டீசே வால் வெளியிடப்பட்டு  வளர்மதி மற்றும் வெங்கடேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் அது குறித்து விவாதித்தனர். இடையில் நண்பர் வளர்மதி நம்மையும் இழுத்ததால் அவரிடம் கூறியபடி இக்கட்டுரையை  இப்பதிவில் வெளியிடுகிறேன். எழுதத் தூண்டிய நணபர் ராமானுஜத்திற்கும், எழுதும்போது படித்து கருத்துக்களைக் கூறி ஊக்கப்படுத்திய முபாரக்கிற்கும் நன்றி.

- ஜமாலன் (13-08-2009)


®®ை®ூ®்®®®®©்: ®®ு®®®®ு ®®்®®®®் ®®ை®®£®®®®®்®ை. ®€®™்®®் ®®©் ®…®£®®®®€®்®®்?

சமீபத்தில் உயர்நீதிமன்றம் வெளியிட்ட தன்பால் புணர்ச்சியாளர்கள் பற்றிய அறிவிப்பினை ஒட்டி நாடெங்கிலும் பாலியல் மற்றும் தண்பால் புணர்ச்சியாளர்களை அங்கீகரிப்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது.  அது குறித்து நண்பர் உறையூர்காரன் வெளியிட்டுள்ள பதிவு உங்கள் பார்வைக்காக.  தன்பால் புணர்ச்சியாளர்கள் குறித்த உரையாடல் என்பது உடல்கள் பற்றிய மதங்களின் ஒழுங்கமைப்பை அடிப்படையாகக் கொண்டது.  இது குறித்து விரிவாக பிறிதொரு பதிவில் எழுதலாம். 

உறையூர்காரன்: ஆடுமாடு எல்லாம் உடையணிவதில்லை. நீங்கள் ஏன் அணிகிறீர்கள்? 

இது குறித்து வந்துள்ள பிரண்ட்லைன் கட்டுரைகள்…

சென்னையில் ஜீன் 28-ல் நடந்த LGBT (லெஸ்பியன், கே, பைசெக்ஷீவல் மற்றும் டிரான்ஸ் ஜெண்டர்) களின் வாணவில் ஊர்வலம்.

LGBT-களை ஆதரிப்பவர்களின் பிரதயேகமான குழுமம்.

n80715373026_8398[1]

(பாலியல் ரீதியாக) பெண்களை விரும்பும் பெண்கள், ஆண்களை விரும்பும் ஆண்கள், இருபால் விழைவோர், திருநங்கைகள், பெண்களாய் இருந்து ஆண்களாய் மாறியோர், பால்நிலை கடந்தோர்...
இவர்களுக்கானதும்
இவர்களை மதித்து, சமூகங்களில் இவர்களது இயல்பான இருப்புக்காய்ச் செயல்பட்டு வருகிற நண்பர்களுக்காகவும்
ஆதரவளிப்போருக்காகவும்
இக்குழு. :)
இணைந்து கொள்ளுங்கள், உரையாடுங்கள், தொடர்புறுங்கள். தமிழிலும் வானவில் கொடி பறக்கட்டுமே :)
------------
This is a Tamil group for LGBTQ community and their friends.
Please feel free to join in and spread the word. :)

n94257163972_2706[1] சென்னை LGBT Pride 2009 குழுமம்.  இக்குழமத்தின் இயக்கம் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றி இங்கு காணலாம்.

 

 

 

படங்கள் – நன்றியுடன் பிரண்டலைனிலிருந்து.


®ெ®£்®£®®®®் ®®©்®©ு®®் ®ொ®்®®®்.....

15-ஆண்டுகளுக்கு முன்பு எழுதி மேலும் இதழில் வெளிவந்த  இக்கட்டுரை இங்கு மீள்பதிவிடப்படுகிறது.

"பெண்ணியம் ஒரு பார்வை"- என்கிற டாக்டர் அ.சாந்தா அவர்களின் indian-paintings-22கட்டுரையில்  (தினமணி-27.04.93, பகுதி: சிந்திக்கும் வேளையில் : பெண்கள்) - 'பெண்ணியம்' பற்றிய உரையாடல்களில் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.  1.  மொழியும், எழுத்துமே பெண்ணை அடிமையாக்கிய முதற்செயற்பாடு, 2. பெண் அடிமைத்தனத்தில் தகவல் தொடர்பு சாதனங்களின் பங்கு. 

நவீன கருத்துக்களைத் தொட்டு பெண்ணியம் பற்றிய ஒரு புதிய உரையாடலை துவங்கியுள்ள டாக்டர் அ.சாந்தா - கவனத்திற்குரியவராகிறார்.  மேற்குறித்த இரண்டு கருத்துக்களும் விரிந்த  மற்றும் ஆழ்ந்த அவதானிப்புகளுக்கு உரியவை என்பதில் அவருக்கும் கூட மறுப்பு இருக்கப் போவதில்லை.  ஆனபோதிலும் இவை குறுக்கப்பட்ட நிலையில் கையாளப்பட்டிருப்பதே கவனத்திற்குரிய புள்ளிகளாகிறது.  மொழியும், எழுத்துமே - பெண்ணை முதலில் அடிமைப்படுத்தியதாக சுட்டப்படுகிறது.  இங்கு மொழிக்கும் சமூகத்திற்கும் இடையிலான வினையை விட்டுவிட்டு அவர் கூறும் காரணங்களை பார்க்கலாம்.  பழைய சம்பிரதாயங்கள், சடங்குகள் உள்ளிட்ட இன்னபிற கருத்துக்கள் எழுத்து வடிவில் இருப்பதால் பல தலைமுறைகளும் கண்மூடித்தனமாக அவற்றைப் பின்பற்றுகின்றன.  அப்படியெனில், எழுத்திற்கு முந்தைய வாழ்க்கைமுறைகள் உருவாக்கிய சம்பிரதாய சடங்குகள் எதுவும் நமது தலைமுறைகளுக்கு கடத்தப்படவில்லையா?

இன்று பல இந்துக் குடும்பங்களில் நிலவும் 'தாய்மாமன் சீர்' (சில பகுதிகளில் வரிசை என்பார்கள்) - என்கிற சம்பிரதாயத்தை எடுத்துக்கொள்வோம்.  இச்சம்பிரதாயம் தாய்வழி ஆதிப்பழங்குடிகளில், தாய்க்கு அடுத்த அதிகாரம் படைத்த அவளது சகோதரன் (அதாவது தாய் மாமன்) அக்குழுப் பெண்களை பிறகு குழுக்களுடன் பரிவர்த்தனை செய்யவும் குழுவின் பரிசுப் பொருள்களை அப்பரிவர்த்தனையில் வழங்கவும் அதிகாரம் பெற்றிருந்தான்.  (அச்சமூகத்தில் - 'தந்தை‘ என்கிற ஸ்தானமே அறியப்பட்டிருக்கவில்லை என்பதும் - 'தந்தை' யின் பங்கு தாய்மாமனால் ஈடுசெய்யப்பட்டது என்பதும் மானுடவியலாளர்கள் கூறும் உண்மைகள்) அதன் நீட்சியாகவே இன்று தாய்மாமனின் சீருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று யூகிக்க வழியிருப்பின் டாக்டர் அ. சாந்தா அவர்களின் எழுத்துக்கு பிறகான சமூகங்களில் நிலவும் இச்சம்பிரதாயத்தை எப்படி விளக்க முடியும்? எழுத்தற்ற வாய்மொழி இலக்கியங்களாக இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் விழிப்புணர்ச்சியடைந்த நாட்டார் வழக்காற்றியல் (Folklore) சார்ந்த நாட்டுப்பாட்டு, விடுகதைகள், பழமொழிகள் - ஆகியவற்றின்மூலம் இறக்கப்பட்டு பல ஆண்டுகளாய் நடைமுறைக்குள்ளாகி இருக்கும் சம்பிரதாய, சடங்குகளை எப்படி விளங்கிக் கொள்வது?  எழுத்தறிவற்ற பல ஆதிவாசிகள் (ஆப்பிரிக்கா, இந்தியா- சிலப்பகுதிகளில்) பல சம்பிரதாயங்களை இன்றும் பின்பற்று வருவதை விளக்க என்ன வழி உள்ளது? 

எழுத்து உருவான பிறகு பல சிறு, சிறு குழுக்களாய் இருந்து வந்த கூட்டங்களின் - பண்பாடும், மொழியும் - பரவலாக்கப்பட்டு ஒருங்கிணைந்து ஒரு கலப்புப்பண்பாடு உருவாகி - பண்பாட்டு பொது அமைப்பாக இறுக்கம் பெற்றது என்று யூகிக்க வழிகள் உண்டு.  நமது யூகம் சரியெனில்,  டாக்டர். அ. சாந்தா, கூறுவது போல், பெண் அடிமை என்பது இன்று ஆதிக்கம் செய்து வரும் பண்பாட்டு பொதுமைகளால் வருவதுதான் - என்று கொள்ளலாம். 'பண்பாட்டு நெகிழ்ச்சி'யைப் பற்றி பேசும் அவர் - இந்தப் பண்பாட்டு அமைப்பே indian-paintings-7பெண்ணியத்திற்கு எதிர்நிலையில் நிற்பதை ஏனோ விட்டுவிடுகிறார்.  இந்த விடுபடல் மொழிபற்றிய அவரது புரிதலில் வெளிப்படுகிறது.  மொழி என்பது ஒரு பரிமாற்றுக்கருவி என்ற நிலையிலேயே அவரது அளவைகள் (logic) நின்று போகின்றன.  மொழியின் செயல்பாடு வெறும் கருத்துப் பரிமாற்றமே என்கிற மரபார்ந்த அணுகு முறைகளால் இன்று மொழி சார்ந்த பலவற்றை விளக்கமுடியாமல் போய் உள்ளதை பற்றிய பல ஆய்வுகளை அவரே கூட அறிந்திருக்கலாம்.  மொழி 'பெயரிடுதல்' - என்கிற பிரதான பணியாய் ஒழுங்கமைப்பட்ட சப்தமாகத்தான் தனது செயலைத் துவக்குகிறது.  வேறொரு சூழலில், அதே பொருள் பெயராக மட்டுமே அறிவிக்கப்படும் போது - ஒரு அரூப நிலையில் கருத்துப்படிமமாக நின்று போகிறது.  இந்நிலையில் அப்பொருள் பற்றிய அறிவு என்பது - அதன் பெயர் மற்றும் கருத்துப் படிமம் பற்றிய அறிவாக மாறிப்போகிறது.  அப்பொழுது பொருளின் இருப்பு மறுக்கப்பட்டு விடுகிறது.  பொருள் பற்றிய பிம்பமும், புனைவுகளும் மட்டுமே மனிதனின் மொழியில் பொருளாக வடிவம் கொள்கின்றன.  ஒரு பொருள் பற்றிய நினைவும், சிந்தனையுமே அப்பொருளின் இருப்பாக மாறிப்போகிறது.  இங்கு, பொருளைப் புரிந்து கொள்ள பொருள் தேவை இல்லை.  அதன் புனைவுகளும் படிமங்களும் கருத்துக்களும் ஆன மொழி மட்டுமே போதுமானதாகிறது. 

இப்படியாக மொழிவழிச் சாத்தியப்பட்ட பல குழுக்களின் ஒருங்கிணைப்பு ஒரு பண்பாட்டு பொதுமையை உருவாக்கி - சில பொதுப் பண்புகளின் அடிப்படையில் மனிதனை வரையறுத்துள்ளன.  இவ்வுரையிலிருந்து ஒவ்வொரு மனிதனும், சக மனிதனை 'மனிதன்' என்கிற பிம்பமாக, ஒரு கருத்தாக மட்டுமே பார்க்கிறான்.  ஒவ்வொரு மனிதனும் கருத்து வடிவங்களாக - உடலற்றுப் போவதால் ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் ஆதிக்கத்தின் வன்முறை உணரப்படாமல் போய்விடுகிறது.  இங்கு மனிதன் தனக்கு தேவையான இதத்தைப்பெற சக மனிதன் சார்ந்த சமூகத்திற்கு அப்பால் - 'அப்பாலை உலகை' தேடிப்போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.  மனிதனை உய்விப்பதாக அறிவித்த பெரும்பாலான தத்துவ ஞானங்களும் 'கடந்து செலல்' - எனும் தொழில் நுட்பத்தை முன் வைக்க வேண்டிய தேவை எழுகிறது.  இவை இறுதியில் மனித உடலை மொழி வழியாக கரைத்து விட்டு - கருத்து நீதியானவற்றில் சுகம் தேட முனைகின்றன.  இத்தேடல் பல நிறுவன வடிவங்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது. 

இந்த வகை நிர்பந்தத்தில் சுகத்தை ஒழுங்கமைக்க பல நிறுவன வடிவங்கள் மனிதனால் கட்டமைத்துக் கொள்ளப்படுகிறது.  இந்த நிறுவன வன்முறைதான் (மதம், சாதி போன்றவற்றின்) மொழியால் மனிதனுக்குள் இதமாக்கப்பட்டுள்ளது.  இந்த இதம் வேறொரு புதிய, புரட்சிகர மொழியால் சிதைக்கப்படும்போதுதான் - மனிதன் தனது சுய இருப்பின் அடியில் ஒடுக்கப்பட்டு கிடக்கும் உடலின் இருப்பை உணர்கிறான்.  எனவே, மொழி இன்று தனது பிரதான செயலாக கொண்டியங்கும் 'பிம்ப உருவாக்கம்' என்கிற செயல்பாட்டே இன்றைய சிந்தனைக் குவியங்களுள் முக்கியமானதாக கருதப்படக்கூடியது.

இன்னும் சற்று விரிவாக பார்ப்போமானால், ஒரு முதலாளிக்கும் / தொழிலாளிக்கும் இடையிலான உறவையோ, ஒரு ஆணுக்கும் / பெண்ணுக்கும் இடையிலான உறவையோ, இரு நண்பர்களுக்கு இடையிலான உறவையோ - ஆய்வுக்கு உட்படுத்தினால் மொழியின் நுட்பமான செயலை புரிந்துகொள்ள ஏதுவாகும்.  ஒரு ஆணுக்கும் / பெண்ணுக்கும் இடையிலான உறவை எடுத்துக்கொண்டால் அது பொருந்திப் போதலாகவே உள்ளது.  ஒரு ஆணின் பார்வையில் - பெண் சுயச் சார்பு அற்றவள், நளினம், மென்மை, கற்பு, அடங்கிப்போதல் ஆகியன கொண்டவள். ஒரு பெண்ணின் பார்வையில் - ஆண் சுயசார்பு உள்ளவன், தனித்துவம் மிக்கவன், வீரமானவன், ஆதிக்கம் செய்பவன் - என்பதாக உள்ளது.  இவ்விரண்டு பிம்பங்களுக்கும் இடையில் இருவரும் ஒரே மொழியை பகிர்ந்து கொண்டாலும் - அவற்றின் அர்த்தமாக்கலும், உள்ளீடான அர்த்தங்களும் வேறுபட்ட புனைவுகளால் பின்னப்பட்டுள்ளன.  இவற்றை அர்த்தமாக்கும் மொழியும் ஆணிலை அடிப்படையிலேயே அமைந்துள்ளதால் - இவை ஆணிலை பிம்பங்களுடன் சுலபமாகப் பொருந்திப் போய் விடுகிற ஒரு உளவியல் பின்னணியை தருகின்றன.  ஒரு ஆணுடலுக்கு 'சுகம்' என்பது ஆதிக்கம் செய்வதில் கிடைக்கும் இதமாகவும் - பெண்ணுடலுக்கு ‘அடங்கிப்போவதில்‘ கிடைக்கும் இதமாகவும் உள்ளது.  'சுகம்' என்பதின் அர்த்தமாக்கல் இவ்விரு பிம்ப நிலைகளிலும் வெவ்வேறாக செயல்படுவதையே இவை காட்டுகின்றன. 

எனவே, பெண்ணிலையிலான மொழி என்பது இன்னும் உருவாக்கப்படவேயில்லை.  இதுவரையிலான எழுத்துக்கள், சரித்திரங்கள், பழங்கதைகள், புனைகதைகள்- எல்லாமே ஆணிலையிலேயே பெண்ணை அணுகி வந்துள்ளன.  இன்றைய மொழியின் சாத்தியப்பாட்டிற்குள் இவைமட்டுமே செய்யப்படக்கூடியதாக இருப்பதை பெண்ணிலை நோக்கில் எழுதுபவர்கள் எதிர்கொள்ளும் மொழியில் புரிந்து கொள்ளக் கூடியவையே.  பெண் எழுத்தாளர்கள் கூட இது வரையில் பெண் என்ற நிலையில் - எதிர் கொள்ளும் உடலியல், உளவியல் பிரச்சனைகள் பற்றி எழுதாததும் - ஆண் பற்றிய புனைவின் வன்முறையை வெளிப்படுத்தாததையும் உதாரணத்திற்கு சுட்டலாம்.  இரு மனிதர்களுக்கு இடையிலான மொழிப் பரிமாற்றம் என்பது வெறும் பேச்சு, சப்தம், எழுத்து, சைகை என்பதாக மட்டுமே இருப்பதில்லை.  இரண்டு பிம்பங்களின் வினையாகத்தான் செயல்படுகிறது என்பதே முக்கியம், ஒருவர் பிம்பத்தை மற்றொருவருக்குள் திணிப்பதும், அல்லது தனது பிம்பத்தையே மற்றொருவராக பார்ப்பதும்தான் மொழியின் முக்கிய வினையாடலாக இருக்கிறது.  மொழியும், எழுத்தும் முதலில் உள்ளீடற்ற சப்த ஒழுங்காக உருவாகி, பிறகு அர்த்தங்களால், பிம்பங்களால் புனையப்பட்டு - அதுவே மனிதனின் மீதான அனைத்து ஆதிக்கங்களின் தோற்ற மூலமாகியுள்ளது.  டாக்டர். அ. சாந்தா - பெண் அடிமைத்தனம் மட்டுமே மொழியால் சாத்தியப்பட்டுள்ளது என்பதாக கூறும் கருத்து இன்னும் சற்று ஆழந்த அவதானிப்புக்குரியது என்பதுவே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மொழி முழுமையாக இன்று ஆணிலையானதாகவே அமைந்துள்ளது - என்பதை நவீன சிந்தனைகளுடன் தொடர்புடைய யாரும் மறுக்க இயலாது.  ஆணிலையில் உருவமைக்கப்பட்ட 'பெண் குறித்த பிம்பமே - ஒரு பெண்ணின் தன்னிலையாக (Subject) உருவாகியுள்ளதுதான் - பெண்ணின் மீதான மிகப்பெரும் ஒடுக்கு முறையில் ஒன்று, டாக்டர். அ. சாந்தா சுட்டும் 'பெண்ணின் பலவித குணங்கள் (வடமொழி, தமிழ்நூல்களின் ஆதாரத்துடன்) - இந்தவகை அவதானிப்புக்குரியவை.  இப்படியாக, ஆணிலையில் மொழி அமைந்திருப்பதை வெறும் பெண் மீதான ஒடுக்கு முறையாக மட்டுமே பார்க்க முடியாது.  மொத்த சமூகத்தின் மனிதனின் அடைமைப்பாடாகவே கொள்ள முடியும்.  இந்நிலையின் பெண்ணிய நோக்கிலான ஒரு மொழியின் உருவாக்கமே இன்று முற்போக்கான திசைக்கு இட்டுச் செல்லும்.  அந்நிலையில்தான், ஆணும், தனது உடல்சார்ந்த இருப்பின் - உண்மையான அர்த்தத்தை பெறமுடியும், அதற்கு மொழியின் இறுக்கங்கள், நிலைப்பு, அமைப்பாக்கம் - ஆகியன பற்றியும், அவற்றினை சிதைவாக்கத்திற்கு உட்படுத்துவது பற்றியுமான ஆய்வு அவசியமானது. 

தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் பெண் அடிமைத்தனம் நிலை நிறுத்தப்படுவதாக கூறும் டாக்டர். அ. சாந்தா அவர்களின் கருத்தை நாம் மறுப்பதற்கில்லை.  இவ்வகைப்பார்வை - அச்சாதனங்களை கருத்துப் பிரச்சாரம் மற்றும் கருத்துத் திணிப்பு செய்யக் கூடியவை என்கிற ரீதியில் மட்டுமே பார்க்கிறது.  அதற்கும் மேலாக 'பெண்' என்ற ஆணிலையில் உருவமைக்கப்பட்ட பிம்பங்களை மறு உருவாக்கம் செய்வதும் பரவலாக்குவதும் - இறுகச் செய்வதும் இச்சாதனங்கள்தான்.  இவை - பெண்ணை உருவாக்குவதில் உளவியல் தளத்தில் நுட்பமான தாக்கத்தை செய்கின்றன.  இவை சமூகத்தில் புழங்கி வரும் ஆணாதிக்க மொழியை அங்கீகரித்து இயல்பாக்கி - அவற்றின் அர்த்தத்தை உறையச் செய்வதில் முக்கிய பணியாற்றுகின்றன.  இச்சாதனங்களை - பயன்படுத்துவோரின் கைமாறினால் அவற்றின் உள்ளடக்கமும் மாறும் என்பதாக 'ரெய்மாண்ட் வில்லியம்ஸ்'ஐச் சுட்டிக் காட்டி டாக்டர் அ. சாந்தா கூறுகிறார்.  இன்று முற்போக்கான சில கருத்துக்களைக் கொண்டு வெளிப்படும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் பத்திரிக்கைகள் ஆகியவை - ஏன் பரவலான வெற்றியைப் பெற முடியவில்லை?  ஒரு பொருளை உற்பத்தி செய்து வெளிப்படுத்துவதால் மட்டுமே அப்பொருளுக்கான நுகர்வு அமைப்பை உருவாக்கிவிட முடியாது.  அப்பொருளுக்கான உற்பத்தி நிலைமை அல்லது அதை நுகரும் சூழலையும் உருவாக்க வேண்டும் -  என்பது அடிப்படையான விஷயம்.  இங்கு நுகரும் சூழல் என்பதை - நாம் உருவாக்கும் படைப்பை, கருத்தை மொழி ரீதியான அர்த்தமாக்கல் என்றும் கொள்ளலாம், இந்த அர்த்தமாக்கும் நிலைமையை உருவாக்கினோமா? எனபது கேள்விக்குரியதே. 

இன்று, தகவல் தொடர்பு சாதனங்கள் வலைப்பின்னலாக அமைந்து திரும்பத் திரும்ப ஒன்றையே கூறி குறிகளின் ஆதிக்கத்தையும், ஒரு வித அர்த்தப்படுத்தலையும் உருவாக்கி உள்ளன.  இதை வெறும் ஊடகமாகப் பார்க்க முடியுமா?  இன்றைய மொழியே ஆணிலையானதாக இருக்கும்போது - இந்த ஊடகங்களைக் கைப்பற்றி பெண்ணிய கருத்தைக் கொண்டு செல்வது சாத்தியமா?  நமது கருத்தைக்கூட நாம் கையாளும் மொழி - இதே ஆணிலை மொழியாக  இருக்கும் போது அவற்றை எதிர்க்கொள்ளும் வாசகத்தளம் - எப்படி பெண்ணிலையில் அவற்றைப் புரிந்து கொள்ளும்?  எனவே, தகவல் தொடர்பு என்பதின் மூலமான மொழிச்செயல்பாடு ஒழுங்கமைக்கப்பட்ட ஆணிலையான கண்ணோட்டத்திலேயே உருவாகியுள்ளதுதான் - இவற்றின் வடிவம், செயல்பாடு, உள்ளடக்கம், முழுமையும் அலசலுக்கு உட்படுத்தப்பட்டு - மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியவையாக உள்ளது. 

அடுத்து, ஒரு பெண் - கணவன் இறந்த பின்னும் - பொட்டிடல், பூவை indian-paintings-2த்தல் வண்ணத் துணியணிதல் - என்கிற ‘முற்போக்கான முடிவை‘ (?) சுயசிந்தனையில் எடுக்கவில்லை - என்கிற ஒரு சம்பவம் டாக்டர் அ. சாந்தாவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதேமுடிவை சுயசிந்தனையில் எடுத்திருப்பினும் கூட பெண்ணியம் பற்றிய அடிப்படையான விஷயங்களுக்கும் அவற்றிற்கும் என்ன உறவு என்பது கேள்விக்குரிய விஷயமே.  போகட்டும், இந்த வகை முடிவுகளை 'முற்போக்கானது' என்றே கொள்வோம்.  இங்கு அரேபிய நாட்டுப் பெண்கள் பற்றிப் பேசுவது இன்னும் கொஞ்சம் இந்த வகை முற்போக்குகளை விளக்கிக் கொள்ள ஏதுவாகும். 

ஒரு பெண் தனது முகத்தை வெளியில் காட்டவே தடை செய்யப்பட்டுள்ள அரேபிய நாடுகளில் (குறிப்பாய் சவுதி அரேபியாவில்) - விதவைகளுக்கும் என்று தனிப்பட்ட அடையாளங்கள் இல்லை.  வரதட்சிணை இல்லை.  ஆண்கள் தான் லட்சக்கணக்கில் பணம், நகை, வீடு எனக் கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்.  இங்கு கணவன் பெண்டாட்டி சொற்படிதான் வாழ்கிறான்.  (அதாவது டாக்டர். அ. சாந்தா சுட்டிக்காட்டிய 'பெண்டாட்டிதாசர்களாக') விவாகரத்து (தலாக்), மறுமணம் - என்பது மிகச் சாதாரண விஷயம், இவற்றை வைத்து அரேபியாவில் 'பெண் சமத்துவம்' - நிலவுவதாக கூறிவிட முடியுமா?  மிகக் கடுமையான பெண் ஒடுக்குமுறை இங்குதான் உள்ளது.  வீட்டுக்குள் பெண்களை வைத்துப் பூட்டுவதும், அந்நியருடன் பேசத்தடையும், தலை முதல் கால் வரை 'அபயா' - எனப்படும் கருப்புத் துணியாலான உடையில் மூடி மறைத்துக் கொள்வதும் இங்கு கட்டாயமாக உள்ளது.  ஒரு பெண்ணைக் கணவன், தந்தை, சகோதரன் தவிர்த்து பிற ஆண்கள் பார்பதைத் தவறு என்கிறது இஸ்லாமிய மதம்.  இங்கு பெண்கள் - பிள்ளை உற்பவிக்கும் எந்திரமாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள்.  ஆண் 4 பெண்கள் வரையும் (அரசு குடுபத்திற்கு இந்த எண்ணிக்கை கிடையாது) திருமணம் செய்து கொள்ள சட்ட அனுமதி உண்டு.  எந்த நாட்டிலாவது 1 பெண் 4 ஆண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதியுண்டா? 

(பெண் பிம்பத்தில் - உள்ளிருத்தப்பட்டிருக்கும், 'கற்பு' - என்கிற கருத்து யாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்?  எதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும்? - என்பது இங்கு சிந்திக்க வேண்டிய புள்ளிகள்).

இந்நாடுகளில் அழகு சாதன்ப் பொருட்களுக்கு (குறிப்பாய் பெண்களுக்கானவை) தரப்படும் முக்கியத்துவம், விளம்பரம், விற்indian-paintings-12பனை - இச்சமூகங்களை மிகப்பயங்கரமாக ஆக்ரமித்துள்ளன.  உலகில் தயாராகும் அனைத்துவகை அழகுசாதன்ப் பொருட்களும் - பெருமளவில்  இங்குதான் விற்பனை செய்யப்படுகிறது.  மூன்று ஆண்கள் மட்டுமே பார்க்க, பேச அனுமதிக்கப்பட்டுள்ள இப்பெண்கள் - ஏன் பெருமளவில் இவற்றை நாடிச் செல்கின்றனர்?  பெண்ணின் நுட்பமான மன உணர்வுகளை, வேட்கைகளை - இயல்பாக்கம் செய்ய இந்தப் பொருட்களும் இவற்றின் வழி உருவாகும் பிம்பங்களும், கனவுகளும் - தரும் இதம் அரேபியப் பெண்களுக்கு தேவைப்படுகிறது.  பெண் உடலின் சுய ஆற்றலை இப்பொருட்களின் பயன்பாட்டால் பதிலீடு செய்து மொண்ணையாக்கிட- இவற்றின் பரவலாக்கமும், கவர்ச்சிகரமான விளம்பரமும், போட்டியும் தேவைப்படுகிறது.  அரேபிய சந்தையில் பிரதான இடத்தைப் பிடித்துள்ள இப்பொருள்களே - இப்பெண்களின் நுகர்வு, வழியாக - ஆற்றலை அழித்துக் கொண்டு உள்ளன.  இவர்களுக்கு சுயசிந்தனை இல்லையா? உண்டு - அவர்கள் தேர்ந்தெடுக்கும் 'லிப்ஸ்' டிக்கின் நிறம், 'ஹேர்ரிமூவ'ரின் தொழில் நுட்பம், 'மேக்கப்கிட்'டின் டிசைன்., 'ஆயின்மெண்ட்'களின் தரம் ஆகியவற்றில் உண்டு.  இவர்கள் ஏன் சுயமாக சிந்திக்க இயலவில்லை- அதற்கான பலகாரணங்களின் ஒன்றாக டாக்டர் ஆ. சாந்தா கூறும் இரண்டு காரணங்களையும் விரிந்த தளத்தில் கொள்ளலாம். 

1.  மொழி அரேபிய மொழி புனிதமாகவும், முதன்மையானதாகவும் கருத்தப்படுவதால் - அம்மொழியில் உடைசள்கள், மாற்றங்கள் செய்ய சாத்தியமில்ல.  சட்ட அனுமதியும் இல்லை.  அம்மொழியின் செயல்பாடு அங்கீகரிக்கப்பட்ட மத அர்த்தப்படுத்தலையே செய்து கொண்டு உள்ளன.  இங்கு மதமும், மொழியும் ஒன்றாகவே செயல்படுகின்றன. 

2.  தகவல் தொடர்பு சாதனம் டிவி, நேடியோ, பத்திரிக்கை - (அரேபியாவில் சினிமா இல்லை, எடுக்க அனுமதியும் இல்லை) - ஆகிய அனைத்தும் மதப் பிரச்சாரத்திற்கு முதன்மை முக்கியத்துவமும், விளையாட்டு, விளம்பரம், மதரீயான நாடகங்கள்- ஆகியனவற்றிற்கு அடுத்த நிலையும் தந்து ஒளிபரப்பப்ப்படுகின்றன.  அந்நிய நாட்டுப்படங்கள், பத்திரிக்கைகள், மதக்குறியீடுகள் கடுமையான தனிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றன.  குறைந்தபட்ச சுதந்திரச் சூழலான - மக்கள் கலந்து கொள்ளக்கூடிய பண்பாட்டு, கலைவிழாக்கள் எதுவும் கிடையாது.  இங்கு ஆண்களே அதிகாரத்தில் இருப்பினும் - வரையறுக்கப்பட்ட மதபிம்பங்களை அணிந்து வளரும்போது- பெண்கள் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது.

மீண்டும் பெண்ணின் சுயசிந்தனைக்கு வருவோம் இதிலும் நாம் எதிர்கொள்வது மொழியே.  ஒரு பெண் சுயமாக சிந்திப்பது என்றால் எதை அடிப்படியாகக் கொண்டு சிந்திப்பது?  அப்பெண்ணின் சுயமே (Self).  ஆணால் உருவாக்கப்பட்டிருக்கையில் அல்லது ஆணை மையமாக வைத்து உருவமைக்கப்பட்டிருக்கையில் - சுயசிந்தனை என்பது சாத்தியமா? அப்படியும் இன்றைய ஆணிய மொழியைக் கொண்டு ஒரு பெண் சிந்தித்தால் - பெண்ணிலையில் முடிவு எடுப்பது சாத்தியமா?  - அடிப்படையில் இப்பிரச்சனைகளில் எதிர்கொள்வது இன்றைய மொழியில் உருவமைக்கப்பட்ட 'பெண்' பற்றிய பிம்பங்கள் முழுமையாக சிதைந்து ஒரு புதிய 'பெண்' பற்றிய கருத்தாக்கத்தை கட்டமைப்பதும் அல்லது பெண் - என்ற உடலின் இயல்புகளை, ஆற்றலைக் கண்டு அவற்றின் அடிப்படையில் ஒரு புதிய வரையறையைச் செய்வதும் அவசியமானது என்பது தான். 

'பெண் விடுதலை' - என்ற பெயரில் இணை ஆண் பிம்பத்தை அடைவதையோ?  அல்லது இயங்கி வரும் பெண் பிம்பத்தை சரிசெய்து சில முற்போக்கானவற்றை இணைத்துக் கொள்வதிலோ பெண்ணியம் சாத்தியமாகிவிடுமா?  நாம் கேட்பதெல்லாம் 'பெண்' - என்ற சொல்லின் அர்த்தம் என்ன?  அல்லது ஆண் சார்பற்ற - 'பெண்' என்பதற்கான வரையறையும், கருத்தாக்கமும் என்ன?  அவை எவற்றை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்?  பெண்ணியத்திற்கும் - பாலியலுக்கும் இடையிலான உறவு என்ன?  பெண்ணிய பாலியல் (Feminine Sexuality) சாத்தியமா?  என்பது இந்த வகை உரையாடலை அடுத்த தளத்திற்கு நகர்த்திச் செல்ல ஏதுவாகும். 

இறுதியாய் பாலியல் பற்றிப் பேசாத பெண்ணிய எழுத்து சாத்தியமா?  டாக்டர் அ. சாந்தா அவர்கள் முழுமையாக அதைத் தொடாது விட்டு விட்டார் - (முழுமையாக பெண்ணியத்தின் பல கூறுகளை அக்கட்டுரையில் பேசுவது - ஏற்றுக்கொண்ட பணிக்கு வெளியே போய்விடும் என்பதால் விட்டிருக்கலாம்) என்பதால் பாலியல் - பெண் உடல் தொடர்புள்ள சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றைச் சுட்டிக்காட்டி முடிக்கலாம்.

சில மாதங்களுக்கு முன்பு 'அராப் நியூஸ்' (Arab News) - பத்திரிக்கையில் அதிர்ச்சி ஊட்டக்கூடிய ஒரு செய்தி வெளிவந்தது.  இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய ராணுவம் பிலிப்பைன் நாட்டைக் கைப்பற்றி அங்கு 9 மாத காலம் முகாமிட்டிருந்தது.  இராணுவத்தினரின் பாலியல் வேட்கையைத் தணிப்பதற்காக - ஜப்பானிய அரசு ஒரு லட்சத்திற்கும் மேலான பிலிப்பைன், சீன, கொரிய - பெண்களை வேலைக்கு அமர்த்தியது.  'வேட்கை தணிப்பு பெண்களாக‘ (Comport women).  இராணுவத்தினர் முகாமிட்டிருந்த ஊர்களில் அப்பெண்கள் சில இடங்களில் தேர்ந்தெடுத்து அடைத்து வைக்கப்பட்டனர்.  தினமும் 20க்கும் மேற்பட்ட ராணுவத்தினரின் வேட்கையைத் தணிவிப்பது தான் அப்பெண்களில் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டிருந்த வேலை.  மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை வரிசையாக இராணுவத்தினர் அனுப்பப்படுவார்கள். அந்தப் பெண்கள் அறைகளைவிட்டு வெளியில்வர அனுமதியில்லை. கடுமையான பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட அப்பெண்களில் தற்பொழுது 65 வயதாகும் - 'மரியா ரோஸா லுனா ஹான்சன்' - கூறுகிறார், "நாங்கள் மிருகங்களைப்போல நடத்தப்பட்டோம்.  அத்தருணங்களில் என்னைக் கல்லாக உணர்ந்தேன் பேசாமல் கண்களை மூடிக்கிடப்பேன்".

அப்பெண்கள் நிறையபேர் கடுமையான உடல் உபாதைக்கு ஆளாகியும், இறந்தும் - வாழலாயக்கற்று சீரழிக்கப்பட்டனர்.  அவர்களில் உயிருடன் உள்ள ஒரு சிலரைத்திரட்டி இச்செய்திகளை ஆதாரத்துடன் வெளியிட்டு சம்பந்தப்பட்ட அரசுகள் மீது வழக்கு தொடுத்துள்ளனர் சில தீவிர பெண்ணியலாளர்கள் (Radical Feminist) என்ற போதிலும், 'பெண்' உடலின் பாலியல் பற்றிய பிம்பத்திற்கும், ஆணின் வேட்கையின் தரத்திற்கும் அதிகாரத்துவம் தந்துள்ள அர்த்தமும். 'பெண்' பற்றிய அதிகாரத்துவத்தின் வரையறையும் தவிர இச்சம்பவம் வேறு எதைக் குறிக்கிறது?

ஜமாலன்.  (மேலும் - டிசம்பர் – 1993).


More Recent Articles



Click here to safely unsubscribe now from "®®®®®®®®்" or change your subscription or subscribe